Tuesday, 9 April 2013

உங்கள் ப்ளாக்கில் Live Traffic Feed widget இணைப்பது எப்படி?


உங்கள் வலைப்பதிவுக்கு வரும் வாசகர்கள் எத்தனை மணிக்கு வந்தார்கள், எப்படி வந்தார்கள் போன்றவற்றை தெரிந்துகொள்ள மற்றும் மற்ற வாசகர்களுக்கு தெரியப்படுத்த உதவுவது இந்த விட்ஜெட். இதை எப்படி இணைப்பது என்பது பற்றி இப்போது பார்க்கலாம். 



முதலில் http://feedjit.com/freeLiveTrafficFeed/ 
என்ற தளத்திற்குச் செல்லுங்கள். www.feedjit.com தளம் மூலமும் செல்லலாம்.




COMPLETE THE FORM BELOW

You're seconds away from your Free Live Traffic Feed

No credit card required, no trial period, it's completely free.
Your first and last name: 
What country are you in:                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                   
Enter your email address:
Privacy Guarantee: We will not share your email address.
Get a free subscription to “The Weekly Feed” 
The Weekly Feed is our exclusive weekly newsletter with tips and news for bloggers and webmasters to help you build thriving websites.

மேற்கண்டதை போல் ஒரு திரை தோன்றும். அதில் உங்கள் பெயர், நாடு மற்றும் ஈ-மெயில் முகவரி கொடுத்து Get your Traffic Feed என்பதை அழுத்துங்கள். பின்னர் ஒரு திரை தோன்றும்.



அதில் உங்களுக்குத் தேவையான மாற்றங்களை செய்யலாம். விட்ஜெட்டின் கலர்கள் மற்றும் அளவை மாற்றிக்கொள்ளலாம். பின்னர் Install feedjit on my Blogger Blog என்பதை தேர்வு செய்துவிட்டு Go அழுத்துங்கள். ஒரு புதிய திரை தோன்றும். 


அதில் தோன்றும் Click to open a new window and install on Blogger என்ற பொத்தானை அழுத்துங்கள். பின்னர் தோன்றும் திரையில் பிளாக்கர் கணக்கை கொண்டு உள்நுழைந்து, உங்கள் வலைப்பதிவு, விட்ஜெட்டுக்கான தலைப்பை கொடுத்துவிட்டு  save செய்துகொள்ளுங்கள். அவ்வளவுதான் உங்கள் வலைப்பதிவுக்கு சென்று பார்த்தால் விட்ஜெட் சேர்ந்திருக்கும்.

விட்ஜெட்டின் பயன்கள் மற்றும் சிறப்புகள்:
  • கடைசியாக வந்த வாசகர்கள் எத்தனை மணி நேரத்துக்கு முன்னால் வந்தார்கள், எந்த நாட்டில் இருந்து வந்தார்கள், எப்படி வந்தார்கள் போன்றவற்றை அறிந்துகொள்ள உதவுகிறது.
  • வாசகர்களுக்கு மற்ற வாசகர்களைப் பற்றியும் தளத்தின் டிராபிக் நிலவரத்தைப் பற்றியும் தெரியப்படுத்தலாம்.
  • 500,000 தளங்கள் இந்த விட்ஜெட்டை பயன்படுத்துகின்றன
  • இந்தச் சேவை முற்றிலும் இலவசம்.

No comments:

Post a Comment

ஆன்லைன் வயது கால்குலேட்டர்


Udanz