Tuesday 9 April 2013

உங்கள் பிலாக்கை பிரபலமாக்கனுமா?


வழி #1 
முடிந்த அளவு அனைத்து தமிழ் திரட்டிகளிலும் உங்களின் பதிவு வெளியுடுமாறு செய்யவும், அதாவது தமிழ்மணம், தமிழ்ஸ்... இப்படி.

வழி #2 
நீங்கள் வெளியிடுவது அனைத்து மக்களுக்கு போய் சேர சர்ச் இஞ்சினின் உதவியும் வேண்டும். அதாவது நமக்கு ஏதாவது தேவை என்றால் கூகுள் வெப்சைட்டில் சென்று தேடுகிறோம், அதே போல்  உங்களது பதிவு கூகுள் சர்ச் இஞ்சினில் தேடப்படவேண்டும் என்றால், கூகுள் மட்டும் அல்ல பல சர்ச் இஞ்சினில் தேடப்படவேண்டும் என்றால், சில மாற்றம் செய்ய வேண்டும்.  பிலாக்ஸ்பாட் இயல்பாகவே இவ்வசதியை மறைத்து வைத்துள்ளது. 




அதை செய்வதற்கு உங்கள் பிலாக்கர் அக்கவுண்டில் சென்று பிறகு
Dashboard -> Layout -> Edit HTML செல்லவும். அங்கு இருக்கும் Expand Widget Templates என்ற டிக் பட்டனை கிளிக் செய்து.  




இப்படத்தில் இருக்கும் 'nofollow' என்பதை 'follow' என்று மாத்திவிடவும். பிறகு சேவ் செய்து விடவும்.




வழி #3
முதலில் கூகுள் அனலையிக்ஸ் என்ன என்று பார்த்து விடுவோம். நீங்கள் சொந்தமாக பிளாக் அல்லது வலை வைத்திள்ளீர்களா?   அவ்வலைக்கு வருகை தரும் பார்வையாளர்களின் சாரசரி பற்றி அறிய நினைக்கிறீர்களா?  நாம் இதற்காக மற்ற நிறுவனம் தயாரித்தவகைலையே உபயோகப்படுத்துகிறோம். இப்போது கூகுள் முற்றிலுமாக இலவசமாக இதை தருகிறது. 


இதை உபயோகப்படுத்துவதினால் 
1. கூகுள் SEO  நம்மை இனைத்து கொள்கிறது.
2. நமக்கு வரும் வாடிக்கையாளர் எண்ணிக்கை கூடும்
3. வருகைதருபவர்கள் எங்கிருந்து வந்துள்ளனர் என்று தெரிந்து கொள்ளளாம்
4. வருகைதருபவர்கள் எண்ணிக்கையும் பிறகு அவர்களால் படிக்கப்பட்ட பதிவும் எவை எவை என்று துல்லியமாக தெரிந்து கொள்ளலாம். 
5. தேதி வாரியாக அறிந்து கொள்ளலாம்.
இன்னும் பலவேறு பலன்கள் உண்டு.


இதை நடைமுறை படுத்த


1. http://www.google.com/analytics/ உங்களை பற்றி பதிவு செய்யுங்கள்


கீழ்வரும் படங்களில் உள்ளது போல் தொடர்ந்து செய்யவும்





முதலில் பதிவு



உங்கள் தளத்னைப் பற்றிய தகவல்களை தரவும்.





உங்களை பற்றிய தகவல்களை தரவும்.






"Yes, Agree" என்ற டிக் மார்க்கை டிக் செய்து விட்டு "Create New Account" என்ற பட்டனை கிளிக் செய்யவும்.


சரியான முறையில் உங்கள் கணக்கு பதிவாகிவிட்டால் 





இப்படி ட்ராக்கிங் பேஜ் கமிக்கபடும்.


இதுதான் மிகவும் முக்கியம்.


இதில் உள்ள கோட் காப்பி செய்து


உங்களது பதிவில் போடவேண்டும்.




அதை செய்வதற்கு உங்கள் பிலாக்கர் அக்கவுண்டில் சென்று பிறகு


Dashboard -> Layout -> Edit HTML செல்லவும். அங்கு இருக்கும் Expand Widget Templates என்ற டிக் பட்டனை கிளிக் செய்து. 





என்று இருப்பதை தேடி அதற்கு முன்பு அக்கோட போடவேண்டும்.




பிறகு சேவ் செய்து விடுங்கள்.


உஸ் அப்பாட... அவ்வளவுதான் முடிந்தது.


பிறகு நீங்களும் சொல்லலாம் "நானும் ரவுடிதான், நானும் ரவுடிதான்" :D


நீங்க விரைவில் மிகவும் பிரபலமடைய வாழ்த்துக்கள்.






கடைசியா ஒன்னு...:  பிலாக்கை பிரபலமாடைய வைக்க,  அடிக்கடி பதிவிடுதலும், பின்னூட்டத்துக்கு பதிலளித்தலும் முக்கியம். ரெம்ப பெரிய எழுத்து திறமைலாம் தேவையே இல்லை. அட, எந்த திறமையும் தேவையே இல்லை. பல பேரு இப்படிதானே இங்கே குப்பை கொட்டுறாங்க.

No comments:

Post a Comment

ஆன்லைன் வயது கால்குலேட்டர்


Udanz