
உங்கள் பிளாக்கர் செட்டிங்சில் ஒரு சிறிய மாற்றம் செய்யதாலே போதும்.
இதை செயல்படுத்த,
- உங்கள் பிளாக்கரின் அக்கவுண்டில் உள் நுழைந்துகொள்ளுங்கள்..
- Settings செல்லவும்.
- அங்கு Email & Mobile என்பதை கிளிக் செய்யவும்.
- அந்த பக்கத்தில் கீழே இருக்கும் Postings Options என்பதே தேடுங்கள். அதன் கீழ் இவ்வாறு இருக்கும்..
- அதில் உங்கள் மின்னஞ்சல் முகவரியுடன் secretwords என்று மெல்லிய எழுத்துக்களுடன் கூடிய ஒரு பெட்டி இருக்கும். அதில் உங்களுடைய ரகசிய வார்த்தை ஒன்றை உங்கள் விருப்பப்படி தட்டச்சிடுங்கள்.
- நான் ரகசிய வார்த்தையாக 12345 என்பதைக் கொடுத்திருக்கிறேன்..
- உங்களுடைய ரகசிய வார்த்தையை தட்டச்சிடும்போதே publish email immediately என்பதை தானாவே தேர்ந்தெடுக்கப்பட்டுவிடும்..
- இந்த மின்னஞ்சல் முகவரிதான் நமக்கு ஜிமெயிலிருந்து புதிய பதிவொன்றை இட பயன்படும் முகவரி ஆகும். இதுதான் மிகவும் முக்கியம்.
- இதில் உள்ள palanivel.nhai.12345@gmail.com என்பதே நாம் ஜிமெயிலிருந்து பதிவை இட பயன்படுத்தக்கூடிய மின்னஞ்சல் முகவரி ஆகும்.
- பிறகு கீழ் உள்ள Save settings என்பதை கிளிக் செய்து கொள்ளவும்..
அவ்வளவுதான்..செட்டிங்ஸ் முடிந்தது.
இனி ஜிமெயில் வழியாக போஸ்ட் செய்வது எப்படி? என்று பார்ப்போம்..
- உங்களுடைய ஜிமெயில் அக்கவுண்டை திறந்து கொள்ளவும்..
- compose என்பதை கிளிக் செய்யவும்..
- To என்ற இடத்தில் நீங்கள் செட்டிங் செய்த மின்னஞ்சல் முகவரியைக் கொடுக்கவும்.
- நான் என்னுடைய palanivel.nhai.123@gmail.com என்பதை கொடுத்திருக்கிறேன்..
- subject என்பதில் நீங்கள் இட வேண்டிய பதிவின் தலைப்பை தட்டச்சிட்டவும்..
- பதிவிட வேண்டிய பகுதியை எப்போதும்போல நீங்கள் தட்டச்சு செய்யும் பெட்டியில் தட்டச்சு செய்துகொள்ளுங்கள். வேண்டிய மாற்றங்களை (format- bold, italic, color,)செய்துவிடுங்கள். (தலைப்பு போன்றவற்றிற்கு வண்ணம் கொடுத்தல் போன்றவை)
- பதிவை எழுதி முடித்துவிட்டு இறுதியாக send என்ற பட்டனை கிளிக் செய்தால் போதும்.
- உடனே உங்களுடைய இடுகை ஜிமெயிலிருந்து உங்கள் பிளாக்கரில் ப்ப்ளிஷ் ஆகியிருக்கும். .
No comments:
Post a Comment