Friday, 12 April 2013


ஸ்மார்ட் போன் தொலைந்தால்..? ---- உபயோகமான தகவல்கள்,

ஸ்மார்ட் போன் தொலைந்தால்..?
பிரைவஸி பாதுகாப்புக்கான ஸ்மார்ட் டிப்ஸ்!
''எங்கள் நட்புக் குழுவில் பலரிடமும் ஸ்மார்ட் போன் உண்டு. சமீபத்தில் தோழி ஒருவரது ஸ்மார்ட் போன் திருடு போனதில் தடுமாறி தவித்துப்போனாள். காரணம், மொபைல் பேங்கிங், சமூக வலைதளங்கள், இ-மெயில் என பலவற்றையும் தனது ஸ்மார்ட் போன் மூலமாக எளிதில் அணுகும் வகையில் ஆக்டிவேட் செய்திருந்தாள். தவிர புகைப்படங்கள், வீடியோ ஃபைல்கள் அடங்கிய மெமரிகார்டும் அந்த மொபைலில் இருந்தது. பிரைவஸி போச்சு, பணம் போச்சு என்று காவல் நிலையத்துக்கும், மொபைல் போன் சென்டருக்குமாக அலைந்து கொண்டிருக்கிறாள். இந்த கசப்பு அனுபவத்துக் குப் பிறகு, ஸ்மார்ட் போன் திருட்டுக்கு எதிரான முன்ஜாக்கிரதை குறிப்புகளைத் தேட ஆரம்பித்திருக்கிறோம். இதில் உதவ முடியுமா?''
 
''ஸ்மார்ட் போன் அனுகூலங்களை மட்டுமே பயன்படுத்திக் கொள்ள துடிப்பாக இருக்கும் பலரும், அது தரும் பாதுகாப்பு அம்சங்களை கட்டமைத்துக் கொள்ள தவறுகிறார்கள். ஒரு ஸ்மார்ட் போனை வாங்கிய கையோடு அதன் 'செட்டிங்ஸ்’ வழங்கும் அனைத்து பாதுகாப்பு அம்சங்களையும் ஆராய்ந்து பாதுகாப்பை இறுக்கிக்கொள்ளுங்கள். இதற்கு விற்பனை பிரதிநிதி அல்லது அங்கீகரிக்கப்பட்ட சர்வீஸ் சென்டரில் தேவையான உதவி கிடைக்கும்.
'பின் நம்பர்’ எனப்படும் பர்சனல் ஐடண்டிஃபிகேஷன் நம்பர், பேட்டர்ன் லாக் எனப்படும் பல பூட்டுகள் உங்கள் ஸ்மார்ட் போனை அந்நியர் பயன்படுத்துவதற்கு எதிராக பாதுகாக்கும். இதே செட்டிங்ஸில் குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேலாக தவறான முறைகளில் மேற்படி பாதுகாப்பை திறக்க முயற்சித்தால், செல்போன் தானாக தனது டேட்டா அனைத்தையும் அழித்துக்கொள்ளும் வகையில் கட்டமைத்துக் கொள்ளலாம். மொபைல் ட்ராக்கிங் என்னும் வசதியை ஆக்டிவேட் செய்வதன் மூலம், உங்களது சிம்கார்டு தவிர்த்து வேறு சிம்கார்டுகளை உங்கள் மொபைலில் பொறுத்தினால்... அந்த சிம்கார்டு குறித்த விவரங்களை உங்கள் குடும்பத்தினர் செல்போனுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் வரச்செய்யுமாறு உள்ளிடலாம்.  
அடுத்ததாக, மொபைல் திருட்டுக்கு எதிரான இன்ஷூரன்ஸ் பற்றி பார்ப்போம். பல ஆயிரங்கள் மதிப்புள்ள ஒரு ஸ்மார்ட் போனுக்கான இன்ஷூரன்ஸ் பிரீமியம் நூற்று சொச்ச ரூபாய்தான். மொபைல் காணாமல் போனது உறுதியானதும் விரைந்து சந்தாதாரராக இணைப்பில் இருக்கும் செல்போன் நிறுவனத்தை தொடர்புகொண்டு உங்கள் சிம் கார்டை செயல்படாது செய்யுங்கள். பிறகு, அருகிலிருக்கும் கிளையை அணுகி அதே எண்ணில் புதிய சிம்கார்டை, பேலன்ஸ் டாக் டைமுடன் பெற்றுக் கொள்ளுங்கள். சிம்கார்டை பிளாக் செய்ததற்கும், புதிய சிம் வழங்கியதற்குமான அவர்கள் வழங்கும் அத்தாட்சி நகலோடு, செல்போன் பில் நகலையும் இணைத்து, காவல் நிலையத்தில் புகார் செய்யுங்கள். முடிந்தால் திருடுபோன செல்போனை கண்டுபிடித்து தருவார்கள் அல்லது சில நாட்களுக்குப் பிறகு, 'கண்டுபிடிக்க முடியவில்லை' என்பதற்கான சான்றை தருவார்கள்.
இந்த சான்றோடு மொபைல் வாங்கியதற்கான பில், காப்பீட்டு விவரம் இவற்றை இணைத்து காப்பீட்டு நிறுவனத்திடம் நேரடியாகவோ தபால் மூலமோ அணுகினால், தொலைந்த போனுக்கான காப்பீடு கிடைக்கும். இந்தத் தொகை, அநேகமாக அதே ஸ்மார்ட் போனின் சரிந்திருக்கும் தற்போதைய விலைக்கு இணையாக இருக்கும் என்பது ஆறுதல். இந்த வகையில் பண இழப்பை சரிசெய்துவிடலாம்.
ஸ்மார்ட் போன் தொலைந்து போவதில், இன்னுமொரு பண இழப்பை தவிர்க்கும் நடவடிக்கை... மொபைல் பேங்கிங் செயல்பாட்டை முடக்குவதுதான். இதற்கு உங்கள் வங்கி சேவையாளர் மையத்தை கால்சென்டர் உதவியுடன் அணுகி மேற்படி இணைப்பில் இருக்கும் மொபைல் பேங்க் வசதியை ரத்து செய்யுமாறு    கோரலாம். செல்போனில் உங்களது பிறந்தநாள், வங்கிக்கணக்கு தொடர்பான விவரங்கள், மொபைல் பேங்கிங் பாஸ்வேர்டு போன்றவற்றை எக்காரணம் கொண்டும் பதியக்கூடாது. இது ஸ்மார்ட் போன் திருடுபோன சூட்டில் உங்கள் வங்கி கணக்கின் இருப்பையும் காணாமல் போக வழி செய்துவிடும்.
இ-மெயில் மற்றும் ஃபேஸ்புக் போன்ற தனிப்பட்ட கணக்கு தகவல்களை பிறர் அணுகாமல் தவிர்க்க அவ்வப்போது அவற்றிலிருந்து வெளியேறியதும் லாக் அவுட் செய்ய வேண்டும். ஆனால், பலரும் தங்கள் வசதிக்காக, ஒற்றை தொடுகையில் இ-மெயில், ஃபேஸ்புக் போன்றவை திறக்குமாறு வைத்திருப்பார்கள். இவர்கள், ஸ்மார்ட் போன் தொலைந்ததை உறுதிபடுத்திக் கொண்டதும் உடனடியாக வேறு இணைய இணைப்பின் மூலம் தங்கள் இ-மெயில், ஃபேஸ்புக், ட்விட்டர் கணக்குகளின் பாஸ்வேர்டுகளை மாற்றிவிட்டால், பிரச்னையிலிருந்து தப்பலாம்.
தனிப்பட்ட மற்றும் அந்தரங்க படங்கள், வீடியோக்களை ஸ்மார்ட் போனில் இருப்பு வைப்பதை தவிர்க்க வேண்டும். அந்த மாதிரியான பர்சனல் படங்களை எடுக்காமல் தவிர்ப்பதே உத்தமம். காரணம், எடுத்த படங்களை அழித்துவிட்டாலும் அவற்றை மீட்பதற்கான உபத்திரவ தொழில்நுட்பங்கள் நமக்கு பெரும் அச்சுறுத்தலே! மற்றபடி ஸ்மார்ட் போனில் சேகரிக்கும் ஏனைய படங்கள், வீடியோக்களை அவை பதிந்திருக்கும் ஃபோல்டருக்கு தனியாக பாஸ்வேர்டு உபயோகிப்பதன் மூலம் பாதுகாக்கலாம்.
உங்கள் போனில் இந்த வசதி இல்லாவிட்டால் இலவசமாக கிடைக்கும் ஆன்ட்ராய்டு போன்ற அப்ளிகேஷன்கள் உதவியோடு இந்த பாதுகாப்பை இறுக்கிக்கொள்ளலாம். ஸ்மார்ட் போனின் உள்ளடங்கிய மெமரி தவிர்த்து, மெமரி கார்டு போன்ற எளிதில் அகற்றக்கூடிய சேமிப்பு அம்சங்களிலும் இதேபோல அப்ளிகேஷன்களை செயல்படுத்திக் கொள்ளலாம். தனிப்பட்ட பாஸ்வேர்டு தருதல், குறிப்பிட்ட ஹேண்ட்செட்டில் இணைத்தால் மட்டுமே அந்த பாஸ்வேர்டும் செயல்படுவது என பல வகைகளிலும் மெமரி கார்டு பாதுகாப்புக்கு அப்ளிகேஷன்கள் கைகொடுக்கும். அரிய படங்களை எப்போதும் மெமரி கார்டிலேயே வைத்திராது, அவ்வப்போது 'பேக்கப்’ எடுத்து பாதுகாத்துக் கொள்வது நல்லது.''

முத்துக்கள் பத்து! .....உபயோகமான தகவல்கள்,

முத்துக்கள் பத்து!
விண்ணைத் தாண்டி மேலே சென்று கொண்டிருக்கும் விலைவாசி, அதிர்ச்சியில் ஆழ்த்தும் கல்விக் கட்டணங்கள்... இவற்றை தங்கள் வருமானத்தைக் கொண்டு பெரும்பாலானவர்களால் எளிதில் சமாளிக்க முடிவதில்லை. சில எளிய சூத்திரங்களைக் கடைப்பிடித்தால்... கஷ்டத்தில் உள்ளவர்களின் கரன்ஸி கரைவது குறையும்... 'கஷ்டம் இல்லை' என்கிற நிலையிலிருப்பவர்களுக்கு சேமிப்பு உயரும். அந்த சூத்திரங்கள் 'முத்துக்கள் பத்து’ என ஆங்காங்கே இடம்பெறுகின்றன.


கேஸில் மிச்சமாக்கலாம் காசு!
 டுப்பை முறையான இடைவெளியில் நன்கு பராமரித்தாலே கேஸ் கணிசமான அளவு மிச்சமாகும். தீயின் ஜுவாலை நீல நிறமாக இருக்க வேண்டும். மஞ்சள் அல்லது ஆரஞ்சு வண்ணத்தில் இருந்தால், பர்னரில் கோளாறு மற்றும் கேஸ் விரயம் என்று தெரிந்து கொள்ளலாம். இயன்றவரை 'சிம்’மில் வைத்து சமைத்தால் காய்கறிகளின் சத்தும் வீணாகாது. கேஸும் மிச்சமாகும். அடுப்பைப் பற்ற வைத்துவிட்டு கடுகு, எண்ணெய் என்று பொருட்களை எடுக்க அலைமோதாதீர்கள். சமையலுக்குத் தேவையான அனைத்தையும் கையருகில் வைத்துக்கொண்டு அடுப்பைப் பற்றவையுங்கள். ஃப்ரிட்ஜில் இருந்து பொருட்களை எடுத்தவுடன் சமைக்க ஆரம்பித்தால்... எரிபொருள் அதிகம் செலவாகும்.
மொத்த விற்பனைக் கடையை நாடுங்கள்!
பெரிய சூப்பர் மார்க்கெட்டுகளில் வாங்காமல், கடைவீதியில் மொத்தமாக மளிகைப் பொருட்கள் விற்கும் கடைகளில் மாதத்துக்குத் தேவையான பொருட்களை வாங்கினால்... 10 சதவிகிதத்துக்கும் அதிகமாகப் பணம் மிச்சமாகும். மேலும் பெரும்பாலான சூப்பர் மார்க்கெட் கடைகளில் பல பொருட்களுக்கு எம்.ஆர்.பி விலையில் இருந்து சல்லிக்காசுகூடக் குறைக்கமாட்டார்கள். ஆனால், மொத்த விற்பனைக் கடைகளில், தங்கள் லாபத்தில் சிறு பகுதியை விட்டுக்கொடுத்து விலை குறைவாக விற்பனை செய்வார்கள்.
பெட்ரோல் சிக்கனம்!
சிக்னலில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டி இருந்தால் இன்ஜினை அணைத்து விடுங்கள். வாகனங்களை ஒழுங்காகப் பராமரித்தால் வாகன எரிபொருள் செலவு மட்டுப்படும். கிளட்ச், பிரேக் போன்றவற்றை தேவை இல்லாமல் அழுத்திக் கொண்டிருந்தாலும் மளமள என்று எரிபொருள் காலியாக ஆரம்பிக்கும். வெளிவேலைகளைக் குறித்து வைத்துக் கொண்டு, ஒரு முறை வாகனத்தை எடுக்கும்போதே அனைத்து வேலைகளையும் முடிக்கப் பாருங்கள். ஒரே திசையில் ஒரே நேரத்தில் பயணம் செய்யும் நண்பர்கள் இருந்தால், பயணத்தையும், எரிபொருள் செலவையும் பகிர்ந்துகொள்ளுங்கள். நிழலில் வாகனத்தை நிறுத்தினால்... பெட்ரோல் ஆவியாவது பெருமளவு தவிர்க்கப்படும்.
 'ஸ்விட்ச் ஆஃப்’ செய்ய மறக்காதீர்கள்!
ளில்லாத அறைகளில் ஓடிக்கொண்டிருக்கும் மின்விசிறி, விளக்குகள், தொலைக்காட்சிப் பெட்டி, கணிப்பொறி போன்றவற்றை அணையுங்கள். வீட்டை விட்டு வெளியே செல்லும்போது மின்சாதனங்களின் ஸ்விட்ச்கள் அணைக்கப்பட்டு இருக்கின்றனவா என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள். குறிப்பாக, மின்வெட்டு சமயங்களில் இதை நிச்சயமாக கடைப்பிடிப்பதன் மூலம், கரன்ட் போகும்போது 'ஆன்’ ஆகியிருந்த சாதனங்கள், கரன்ட் வரும்போது செயல்பட்டு மின்சாரம் வீணாவதைத் தடுக்கலாம்.
தவறான பழக்கத்துக்கு 'தடா’ போடுங்கள்!
ங்களது குடும்ப அங்கத்தினர் யாருக்கேனும் புகை மற்றும் குடிப்பழக்கம் இருப்பின் அதை கைவிட உங்களால் ஆனதைச் செய்யுங்கள். உடல் நலன் பாதிக்கப்படுவது தடுக்கப்படுவதோடு... இந்த பழக்கங்களுக்கு செய்யப்படும் மிக அதிகமான செலவையும் கட்டுப்படுத்தி, அத்தியாவசிய செலவுகளுக்கு பயன்படுத்தலாம்.
தண்ணீர்... தண்ணீர்!
 வேலைகளைச் செய்யும்போது குழாய்களை திறந்து வைத்துக் கொண்டு செய்யாமல், சில நொடிகளே என்றாலும்... தேவை இல்லாதபோது, குழாய்களைச் சரியாக மூடினாலே பெருமளவு தண்ணீரைச் சேமிக்கலாம். மிகச் சரியான முறையில் திட்டமிட்டுக் குளித்தால் அரை வாளி முதல் ஒரு வாளிவரை தண்ணீரே சுத்தமாகக் குளிப்பதற்குப் போதும். இதுபோல நாம் யோசித்து செயல்பட்டால், சமையலறை பயன்பாடு உட்பட பல வழிகளிலும் தண்ணீரை மிச்சப்படுத்தலாம்.
குண்டு பல்பு வேண்டாமே!
குண்டு பல்புகள் அதிகம் மின்சாரத்தை உறிஞ்சும். எனவே, குறைந்த மின்சாரத்தை எடுத்துக்கொள்ளும் சி.எஃப்.எல். வகை பல்புகளுக்கு மாறுங்கள். இதன் மூலம் மின்சாரம் 70% அளவுக்கு சேமிக்கப்படுகிறது. சி.எஃப்.எல். பல்புகளின் ஆயுட்காலமும் அதிகம்.
 கிச்சன் இருக்க ஹோட்டல் எதற்கு?
டிக்கடி ஹோட்டலில் சாப்பிடுவது இப்போது ஃபேஷன் ஆகி வருகிறது.  வெளியில் சாப்பிட்டால் ஒரு நபருக்கு 100 ரூபாய்க்கும் குறைவில்லாமல் செலவு ஆகும். புத்தகம், டி.வி-யில் இடம்பெறும் தரமான ரெசிபிகளை முயற்சித்துப் பாருங்கள். நீங்களே தயாரித்தது என்ற பெருமிதமும் இருக்கும்; வெளியில் செல்லும் அலைச்சலும், பண விரயமும் தவிர்க்கப்படும். இது, ஆரோக்கியத்துக்கும் நல்லது.
நேரத்தை பணமாக்குங்கள்!
வெட்டி அரட்டை, அதிகப்படியான தூக்கம் போன்றவற்றில் விரயமாகும் நேரத்தை சேமித்து, உருப்படியான வழியில் செலவிடுங்கள். படைப்பாற்றல், புதிய தொழில் கற்றுக்கொள்ளுதல், ஆளுமைத்திறனை வளர்த்துக் கொள்ளுதல் இவற்றின் மூலம் உங்கள் வருமானத்தை அதிகரிக்கும் முயற்சியில் ஈடுபடுங்கள்.
செலவு குறைக்கும்  செல்போன் 'பேக்கேஜ்’!
குடும்ப அங்கத்தினர் அனைவர் கையிலும் தனித்தனி செல்போன் இருக்கும் காலம் இது. அப்புறம் வீணாக லேண்ட் லைன் தொலைபேசி எதற்கு? மேலும் குடும்ப அங்கத்தினர் அல்லது அடிக்கடி நாம் பேசும் நபர்களுடன் குறைந்த செலவில் தொடர்பு கொள்ள பலவிதமான பேக்கேஜுகள் இருக்கின்றன. அவற்றில் எது சிறந்தது, சிக்கனமானது என்பதைத் தேர்வு செய்து பயன்படுத்துங்கள்.

வாய் துர்நாற்றத்தை போக்க வழிகள் பத்து:

10 tips to cure Mouth odor  (bad breath)
வாய் துர்நாற்றத்தை போக்க வழிகள் பத்து:
1. உடனடியாக வாய் துர்நாற்றத்தைப் போக்க நறுமணப்பொருள்களை வாயில் இட்டு மெல்லலாம். தற்போது சூயிங்கம், mouth Freshnner ஆகியவற்றைப் பயன்படுத்தலாம்.
2. mouth washer நீர்மங்களைப் பயன்படுத்தி வாயைச் சுத்தப்ப்டுத்திக்கொள்ளலாம்.
3. வாய் துர்நாற்றம் உள்ளவர்கள் வெற்றிலையை வாயில் அடக்குவதுபோல கிராம்பை மென்று வாயில் அடக்கிக்கொள்ளலாம்.
4. அரை லிட்டர் நீரில் புதினா சாறு(Mint juice), எலுமிச்சை சாறு (Lime juice) ஆகியவற்றைக் கலந்து வாய் கொப்பளிக்கலாம் இதனால் வாய் துர் நாற்றம் நீங்கும்.
5. வாய் துர்நாற்றத்தைப் போக்க எலுமிச்சை சாறுடன் நீர் கலந்து அதில் சிறிதளவு உப்புச் சேர்த்து குடித்து வரலாம். இந்தக் கலவையை வாயிலிட்டு கொப்புளிக்க வாய் துர்நாற்றம் நீங்கும்.
6. குடல்புண் பிரச்னையால்தான் பெரும்பாலான வாய் துர்நாற்றம் ஏற்படுகிறது. இதைப் போக்க காலையில் எழுந்தவுடன் காப்பியைத் தவிர்த்துவிட்டு 4 டம்ளர் தண்ணீரை வெறும் வயிற்றில் குடிக்கலாம். இதனால் வயிறு சுத்தப்படுவதோடு அல்சர் நீங்கி வாய் துர்நாற்றம் ஏற்படுவதும் தவிர்க்கப்படும்.
7. காலை மாலை இரண்டு நேரம் பல் துலக்கி வாய்க்கொப்புளிக்க வாய் துற்நாற்றம் நீங்கும்.
8. வேறு சில காரணங்களாலும் வாயில் துர்நாற்றம் ஏற்படும். நன்றாக துலக்கப்படாத பற்களின் இடுக்குளில் கிருமிகள் சேர்வதால் இந்த துர்நாற்றம் ஏற்படும். எனவே மருத்துவரிடம் ஆலோசனைப் பெற்று பற்களை சுத்தம் செய்துகொள்ளவதன் மூலம் துர்நாற்றத்தை தவிர்க்கலாம். அத்தோடு பற்களின் பாதுகாப்பும் பலப்படும்.
9. அதிக காரம், அதிக புளிப்பு உள்ள உணவு வகைகளை தவிர்ப்பதால் வாய் துர்நாற்றத்தைத் தவிர்க்கலாம்.
10. சாதாரணமாக சந்தையில் கிடைக்கும் கொத்தமல்லிக் கீரையை(Coriander leaves) வாயில் போட்டு மென்றுவர வாய் துர்நாற்றம் நீங்கும்.
10 tips to cure Mouth odor  (bad breath)
வாய் துர்நாற்றத்தைப் போக்கும் மூலிகை
வாய் துர்நாற்றம் நீங்க மங்குஸ்தான் பழத்தை நன்கு மென்று விழுங்கலாம்.
சாப்பிட்டப் பிறகு மறக்காமல் வாய்க்கொப்பளித்துவிடுங்கள். சாப்பிட்டப் பின் வாய்க் கொப்பளிக்காமல் இருந்தால் உணவுத் துணுக்குள் பல் இடுக்குகளில் சிக்கி கிருமிகள் வளர ஏதுவாகிவிடும். மேலும் இரவு படுக்க போகும் முன் பல்துலக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். இதனால் வாயிலுள்ள 90 சதவிகித கிருமிகளை நீக்க முடியும்.
கிருமிகளால்தான் வாயில் துர்நாற்றம் ஏற்படுகிறது.(Mouth odor is caused by germs) அதேபோல ஒவ்வொரு முறையும் பல் துலக்கும்போதும் நன்றாக பற்களில் பிரஸ்சில்கள் படும் படி தேய்க்க வேண்டும். பற்களோடு ஈறுகளையும் இலேசாக அழுத்தி துலக்குவதால் இரண்டு மடங்கு பலன்கள் ஏற்படும். ஈறுகளிடையே ஒளிந்திருக்கும் கிருமிகள் வெளியேறும். நாக்கு சுத்தம் செய்யும் Tongue cleaner பயன்படுத்தக் கற்றுக்கொள்ள வேண்டும். பற்களோடு நாக்கையும் சுத்தப்படுத்துவதால் வாயிலுள்ள பெரும்பாலான கிருமிகள் நீக்கப்படுகின்றன.
இவற்றையெல்லாம் தினம்தோறும் தவறாமல் செய்துவந்தால் வாய் துர்நாற்றத்தை விரட்டிவிடலாம். குளோசப் டூத்பேஸ்ட் விளம்பரங்களில் வருவதைப் போன்ற பளபளக்கும் பற்களை நீங்கள் பெறுவதோடு முக்கிய எதிரியான வாய் துர்நாற்றத்தையும் ஒழித்து கட்டிவிடலாம்.
குறிப்பு: இரவு நேர பணிபுரிபவர்களுக்கு வாய் துற்நாற்றம் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். அதிக நேரம் பசியுடன் இருந்து வேலை நேரம் முடிந்த பிறகே உணவு எடுத்துக்கொள்வதால் வாய்துர்நாற்றம் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். மேலும் இரவு நீண்ட நேரம் கண்விழித்து படிப்பவர்கள், கணனியில் வேலை செய்பவர்கள் என இரவு நேர தூக்கத்தை கெடுத்துக்கொள்பவர்களுக்கும் வாய் துர்நாற்றப் பிரச்னை இருந்து வரும். இவர்களும் மேற்சொன்ன முறையைப் பின்பற்றினால் வாய் துர்நாற்றம் நீங்கி வாசனையுடன் கூடிய பேச்சை மற்றவர்களுக்கு கொடுக்கலாம். இதனால் நண்பர்களோ, உடன் பணிபுரிபவர்களோ, அயலார்களோ முகம் சுளிக்காமல் உங்களிடம் பேசுவதோடு, நட்பு பாராட்டுவார்கள் என்பது உறுதி.. !

எப்படி உடம்பைக் குறைக்கலாம்? இதோ அதற்கான வழிமுறைகள்:

1. தாகத்திற்காக குடிக்கும் சாதாரண தண்ணீரைத் தவிர்த்து, அதற்குப் பதிலாக சோம்பு கலந்த தண்ணீரைக் குடிக்கலாம். சோம்பு கலந்த தண்ணீரைக் குடிப்பதால் விரைவிலேயே உடம்பில் உள்ளதை அடிப்படியான சதைகள் குறைந்து, உடல் அழகான வடிவத்திற்கு வந்துவிடும். 
2. அமுக்கிரா வேர், பெருஞ்சீரகம் ஆகியவற்றை பாலுடன் சேர்த்து காய்ச்சிக் குடித்துவர உடல் எடை குறையும். 
3. சுரைக்காய் வயிற்றுச்சதையை குறைப்பதில் அதிகப்பங்கு வகிக்கிறது. அதனால் சுரைக்காயை வாரத்திற்கு ஒருமுறையாவது உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள். 
4. உடலிலுள்ள கொழுப்புகள் கரைந்தாலே போதும். உடல் எடை வெகுவாக குறைந்துவிடும். கொழுப்புகளைக் குறைப்பதற்கு நாம் அன்றாடம் பயன்படுத்தும் பூண்டு, வெங்காயம் பயன்படுகிறது. இவற்றை உணவுடன் சிறிது அதிகமாக பயன்படுத்தும்பொழுது, உடல் எடை குறையும். 
5. இது தவிர ப்ப்பாளிக் காயை சமையலாகச் செய்து சாப்பிடலாம். 
6. மந்தாரை வேரை நீர்விட்டு, நீர் பாதியாக குறையும் வரை காய்ச்சி தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் உடல் எடையில் பாதியாக குறைந்துவிடும். 
7. அன்றாடம் குடிக்கும் தேநீரில் பாலிற்கு பதிலாக சிறிது எழுமிச்சைச் சாற்றைக் கலந்து குடித்துவர, விரைவில் உடல் மெலிவதை நீங்களே உணரலாம். 
8. வாழ்த்தண்டு சாறு பருகலாம். அரும்புல் சாறும் உடல் எடையைக் குறைக்கிறது. 
9. இவற்றுடன் காலையில் நடைபயிற்சி, உடற்பயிற்சி மேற்கொள்ளுதல் இயற்கையாகவே உடல் எடையை குறைப்பதற்குரிய சிறந்த வழிமுறைகளாகும். 
மேற்கண்ட வழிமுறைகள் அனைத்தும் இயற்கையான முறையில் நாம் உண்ணும் உணவால் எடையை குறைக்க முயற்சிக்கும் ஒரு வழிமுறைகளே...உடம்பைக் குறைக்க இன்னும் நிறைய வழிமுறைகள் உள்ளன.

பயனுள்ள குறிப்புகள்...

* வெங்காயத்தை நறுக்கும்போது நம் கண்ணுக்குப் புலப்படாத ஆவி வரும். இந்த ஆவியை நெருப்புச் சுட்ட புண்கள் மீது படும்படி வைத்தால் விரைவில் புண் ஆறும். வெங்காயச் சாற்றில் அமிலத் தன்மை இருப்பதே இதற்குக் காரணம்.

* தும்பைப் பூவை தினமும் கொஞ்சம் வாயில் போட்டு மென்று வந்தால் தொண்டையில் சதை ஏற்படாமல் தடுக்கும். தொண்டைப்புண்ணும் ஆறும்.

* காலையிலும் இரவிலும் காய்ச்சிய ஒரு டம்ளர் பசும்பாலில் தேன் கலந்து தினமும் குடித்து வந்தால் சோகை நோய்க்கு மருந்தே தேவையில்லை.

* பெருங்காயத்தைத் தினமும் ஒருவேளையாவது உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். வாயுவை வெளியேற்றுவதில் பெருங்காயம் பெரும்பங்கு வகிக்கிறது.

* கரிசலாங்கண்ணி கீரையைப் பருப்பு மட்டும் சேர்த்துப் பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால் உடல் பருமன் குறையும். இரவு வேளைகளில் சாப்பிடாமல் தவிர்ப்பது நல்லது.

* விவசாயிகளுக்கும், சலவைத் தொழிலாளிகளுக்கும் தண்ணீரில் நின்று வேலை பார்ப்பவர்களுக்கும் சாதாரணமாக வரக்ககூடிய கால் நோயான சேற்றுப்புண்ணிற்கு கால்களை ஈரம் போகத் துடைத்துவிட்டு மஞ்சள் தூளைத் தேனில் குழப்பி கால் இடுக்குகளில் தடவி வந்தால் சேற்றுப்புண் ஆறும்.

* தோல் வியாதிகள் காரணமாக உடம்பின் மேல் பகுதி தடித்துச் சொரசொரப்பாக இருக்கும். கொத்துமல்லி இலையை நன்றாக அரைத்து சொரசொரப்பான இடத்தில் மேல் பூச்சாகப் பூசி வந்தால் மூன்று நாட்களிலேயே தோல் மிருதுவாகும்.

* வெண்டைக்காய் விதையைக் கொஞ்சம் பார்லி கஞ்சியில் போட்டு காய்ச்சி மூன்று நாள் வரை சாப்பிட்டு வந்தால் சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சல் இல்லாமல் போகும்.

* உணவு சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாக தினசரி அரை டீஸ்பூன் ஆலிவ் எண்ணெய்யைச் சாப்பிட்டு வந்தால், இரத்தக் குழாயிலே கொலஸ்ட்ரால் படியாதவாறு தடுக்கும்.

* வாய்ப் புண் வந்தவருக்குப் பகை காரம். முடிந்த வரை காரத்தைக் குறைத்துச் சாப்பிடுங்கள். தேங்காய்த் துண்டுகளைச் சாப்பிட்டு வந்தால் எளிதில் ஆறும்.

 அருகம்புல்லின் பயன்கள்

தினமும் காலையில் வெறும் வயிற்றில் அருகம்புல் சாறு குடிக்க வேண்டும். இதை கொஞ்சம் கொஞ்சமாக சுவைத்துக் குடிக்க வேண்டும். குடித்த 2 மணி நேரத்திற்குப் பிறகு மற்ற உணவு வகைகள் சாப்பிடலாம்.

அருகம்புல் சாறு குடிப்பதனால் ஏற்படும் பலன்கள்

நாம் எப்பொழுதும் உற்சாகமாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்கலாம்.
இரத்த சோகை நீங்கி, இரத்தம் அதிகரிக்கும்.
வயிற்றுப் புண் குணமாகும்.
இரத்த அழுத்தம் (பீ.பி) குணமாகும்.
நீரிழிவு நோயாளிகளுக்கு சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்.
சளி, சைனஸ், ஆஸ்துமா போன்ற நோய்களை குணப்படுத்தும்.
நரம்புத் தளர்ச்சி, தோல் வியாதி ஆகியவை நீங்கும்.
மலச்சிக்கல் நீங்கும்.
புற்று நோய்க்கு நல்ல மருந்து.
உடல் இளைக்க உதவும்
இரவில் நல்ல தூக்கம் வரும்.
பல், ஈறு கோளாறுகள் நீங்கும்.
மூட்டு வலி நீங்கும்.
கர்ப்பப்பை கோளாறுகள் நீங்கும்.
நம் உடம்பை தினமும் மசாஜ் செய்தது போலிருக்கும்.

உடம்பில் தீப்பற்றிக் கொண்டால் என்ன செய்ய வேண்டும்?

என்ன செய்ய வேண்டும்?

உடம்பில் தீப்பற்றிக் கொண்டால் முதலில் தண்ணீரை எடுத்து உடம்பு முழுவதும் ஊற்ற வேண்டும். அப்போதுதான் காயத்தின் ஆழம் குறையும். பரவுவதும் குறையும்.

உடம்பில் ஆசிட் பட்டுவிட்டால் உடனே பால் ஊற்ற வேண்டும். தண்ணீரை ஊற்றினால் காயம் மேலும் அதிகரித்துவிடும். பால் ஊற்றும்போது ஆசிட்டின் தீவிரத் தன்மையைக் குறைத்துக் காயத்தின் அளவையும் குறைக்கும்.

பப்பாளி இலைச் சாறு டெங்குக் காய்ச்சலிலிருந்து உயிர்களைக் காப்பாற்றும்!

பப்பாளி இலையை நன்கு அலசி அதன் காம்பையும் நரம்புகளையும் எடுத்துவிட்டுச் சாறு பிழிந்து ஒரு வேளைக்கு 2 தேக்கரண்டி வீதம், அதிகாலையில் 3 நாள் குடித்தால் டெங்குக் காய்ச்சல் நீங்கும். இக்காய்ச்சல் தொண்டைவலி, இருமல், சுரம் ஆகிய அறிகுறிகளுடன் வரும். இரத்தத்தில் உள்ள பிளேட்லெட் என்னும் அணுக்கள் 5,0000-க்குக் கீழேயும் குறைந்துவிடும். பப்பாளி இலைச் சாறு கொடுத்ததுமே முதல் நாளிலேயே ஓரிலட்சம் அணுக்காளாகி அடுத்த நாளே இரண்டு இலட்சத்தை எட்டிவிடும்.
அண்ணா மருத்துவமனை சித்தமருத்துவ நூல்வெளியீட்டுப் பிரிவு முன்னாள் இயக்குநர் முனைவர் ஆனைவாரி ஆனந்தனும் இயற்கை மருத்துவர் திருமதி தமிழ்க்குயில் அவர்களும் இதனை உறுதி செய்தனர். இதனை உடனடியாக அண்ணா சித்த மருத்துவமனையும் தாம்பரம் தேசிய சித்த மருத்துவமனையும் உறுதி செய்து, தமிழக அரசு மக்களிடம் நோய் பரவுகிற இடங்களில் – ஊர்களில் இச்செய்தியைப் பரப்பி உயிர்களைக் காப்பாற்ற வேண்டும்!

உடலை எப்போதும் உற்சாகமாக வைத்திருக்க சில எளிய வழிகள்..

 . 20 மி.லி தேங்காய் எண்ணெயுடன் ஐந்து மி.லி எலாங் எண்ணெயை சேர்த்து உடல் முழுவதும் தடவி வந்தால் சருமம் புது பொலிவுடன் இருக்கும்.
 இயல்பான சருமத்தினர் சாமந்தி எண்ணெயை, கேரியர் ஆயிலுடன் சேர்த்து தினமும் குளிப்பதற்கு முன்பு தேய்த்தால், வறண்ட சருமம் பளபளவென மின்னும்.
 சூடான நீரில் 5 சொட்டுகள் கேமோமைல் எண்ணெய்விட்டு ஆவி பிடியுங்கள்.  சுவாசம் சீராகும்.  சருமம் மிருதுவாகும்.
  வாரம் இரு முறை, நன்றாக உடம்பு மற்றும் தலையில் எண்ணெயை ஊற்றி மசாஜ் செய்து, நன்றாக ஊறிய பிறகு சீயக்காய் போட்டுக் குளிப்பதன் மூலம் உடலில் வலி, சோர்வு நீங்கி, உற்சாகம் பிறக்கும்.
  குளியல் அறையில், கொதிக்க கொதிக்க வெந்நீரை ஊற்றி கதவை இரண்டு நிமிடம் மூடிவிடுங்கள், பிறகு குளிக்க செல்லுங்கள். நன்றாக வியர்த்து, உடலில் உள்ள கழிவுகள் தோல் வழியாக வெளியேறும்.
  தினமும் சூரிய வெளிச்சம் படும்படியாக 15 நிமிடங்கள் நில்லுங்கள்.   இது மனதை ஒரு நிலைப்படுத்தும்.  சருமத்தில் வைட்டமின் டி சத்தும் ஊடுருவும்.
 வறண்டுபோன பாதத்தில் பெப்பர்மின்ட் ஆயிலைத் தடவி வந்தால் பஞ்சு போன்று மென்மையாக இருக்கும்.  
  கைக்குட்டையில் ரோஜா எண்ணெய் 3 சொட்டுகள் விட்டு அடிக்கடி நுகர்ந்து பாருங்கள்.  மனமும் உடலும் புத்துணர்ச்சி பெறும்.
 கடலை மாவுடன், நன்றாகப் பொடித்த காய்ந்த ரோஜா மொட்டு, ஆவாரம்பூ, சம்பங்கி, மல்லி இவற்றை சேர்த்து வைத்துக்கொள்ளுங்கள். இந்த பொடியை உடம்பில் தடவி, மென்மையாக மசாஜ் கொடுங்கள். சென்ட் அடித்தது போன்று அன்று முழுவதும் உடல் வாசமாக இருக்கும்.  
 உடலுக்குப் புத்துணர்ச்சியைத் தருகிறது தெரப்பி... அதேபோல், நாம் உட்கொள்ளும் உணவிலும் அக்கறை காட்டினால்.. ஆரோக்கியம் அரவணைக்கும்.  
அன்றாட உணவுடன் சேர்த்துக்கொள்ளவேண்டிய சில ஊட்டச்சத்துக்கள்...
  காலை  5 .30 மணிக்கு :தேன் கலந்து ஒரு தம்ளர் எலுமிச்சை ஜூஸ் பருகுங்கள். இதனால், அன்று முழுவதும், வயிறு லேசாக இருக்கும்.  எந்தப் பிரச்னையும் சீக்கிரத்தில் அண்டாது.
  காலை 7.30 மணிக்கு வெரைட்டியான மூன்று வகை பழத்துண்டுகள், ஒரு தம்ளர் பால் அருந்துங்கள். மூளை புத்துணர்ச்சி பெறும்.
  காலை 9.30 மணிக்கு ஒரு டம்ளர் கேரட் ஜூஸ்  கண்ணை பிரகாசமாக வைத்திருக்கும்.  
 காலை 11.30 மணிக்கு ஒரு கிண்ணம் வேகவைத்த காய்கறிகள், முளைவிட்ட பயிறு கலந்து தயிர் சாலட்.  இது சருமத்தை பளபளவென வைத்திருக்கும்.
  மதியம் 2.30 மணிக்கு ஒரு டம்ளர் மோர். மாலை 4.30 மணிக்கு ஜூஸ், பழங்கள். 6 மணிக்கு ஒரு டம்ளர் கேரட் ஜூஸ். இப்படி நீர்சத்து நிறைந்த மோர், ஜூஸ், வகைகளை அதிகம் எடுத்துக்கொள்ளும்போது உடலுக்கு குளிர்ச்சியும், மனதுக்கு மகிழ்ச்சியும் கிடைக்கும்.
  இரவு 7.40 மணிக்கு இரண்டு எண்ணெய் சேர்க்காத சப்பாத்தி, பழங்கள், தயிர்சாலட். சிறிது தால். வயிறை மிதமாக வைத்திருக்கும்.
இப்படி, ஒரு மாத உணவை பட்டியலிட்டு சாப்பிடும்போது, உடலில் உள்ள நச்சுப் பொருட்கள் வெளியேறிவிடும். உடலில் எடை கூடாது.  சருமத்தில் நிறமும் பொலிவும் கூடும். உடலும் உள்ளமும் உற்சாகத்தில் மிதக்கும். 
சம்பளத்தில் ஒரு மேஜிக்! வேலையில் சேரும்போதே உங்கள் வெற்றிக்கு உத்தரவாதம்
வேலை பார்க்கும் அனைத்துப் பணியாளர்களுக்கும் சம்பளம் என்பது அடிப்படையான விஷயம்தான். இந்தச் சம்பளத்தை அலுவலகம் கொடுக்க நினைக்கிறபடி பெற்றுக்கொள்வது பொதுவான நடைமுறை. அப்படி இல்லாமல், வருமான வரிச் சலுகைகளை முழுவதுமாக அனுபவிக்கிறபடி நம் சம்பளத்தை மாற்றித் தரும்படி அலுவலகத்திடம் கேட்பது இன்னொரு அணுகுமுறை.
ஒரு நிறுவனம் பணியாளர்களை வேலைக்குச் சேர்க்கும்போது உங்களுக்கு இவ்வளவு சம்பளம், இதில் இது எல்லாம் அடங்கும் என்று சொல்லும். இந்த மொத்தச் சம்பளத்தை அதாவது பணியாளருக்கு நிறுவனம் செய்யும் செலவை ஆங்கிலத்தில் சி.டி.சி. - காஸ்ட் டு  கம்பெனி (Cost to Company) என்பார்கள்.   ஒருவர் வேலைக்குச் சேரும்போதே, இந்த சி.டி.சி.யிலிருந்து அதிக சம்பளத்தைப் பெறுகிற மாதிரி  நிறுவனத்திடம் கேட்டுப் பெறலாம்.  
வருமான வரிச் சலுகைகளை பயன்படுத்தி நமது சம்பளத்தை இன்னும் அதிகமாக வீட்டுக்கு எடுத்துக்கொண்டு போக முடியுமா?  நாம் வாங்குகிற சம்பளத்தில் எந்தெந்தவற்றுக்கு எவ்வளவு வரிச் சலுகை இருக்கிறது? நிறுவனத்திடம் வரிச் சலுகைக்கு தக்கபடி சம்பளத்தை எப்படி கேட்டுப் பெற வேண்டும்? வருமான வரியை மிச்சப்படுத்த சம்பளக் காரணிகளில் எவை எவை எவ்வளவு சதவிகிதத்தில் இருக்கவேண்டும்? வரிச் சலுகை பெற நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டியவை என்னென்ன? என்பது போன்ற பல கேள்விகளுடன் ரான்ஸ்டாட் நிறுவனத்தின் சி.இ.ஓ. பாலாஜியிடமும் மற்றும் சாட்டர்டு அக்கவுன்டன்ட் கீதா குமாரிடமும் பேசினோம்.  அவர்கள் தெளிவான விளக்கத்தைத் தந்தார்கள். அந்த விளக்கம் இதோ உங்களுக்காக...
''பத்து வருடங்களுக்கு முன்பாக சம்பள படிவத்திற்கென்று யூனிஃபார்ம் ஸ்ட்ரக்சர் எதுவும் கிடையாது. ஆனால், இன்று சம்பளப் படிவங்களில் வருமான வரி விதிகளுக்கு உட்பட்டு பல வறைமுறைகள் வகுக்கப் பட்டுள்ளன.
சம்பளத்தில் 35-50% வரை அடிப்படை சம்பளம் (Basic Salary) இருக்கலாம். இந்த பேசிக் மற்றும் பஞ்சப் படியிலிருந்து (டி.ஏ - Dearness Allowance) 12 சதவிகிதம்தான் பி.எஃப். அதே போல ஹெச்.ஆர்.ஏ. (House Rent Allowance) மற்றும் சிறப்புச் சலுகைகள் போன்றவற்றை நிறுவனங்கள் ஒத்துழைக்கும்பட்சத்தில் அவரவர்களின் தேவைக்குத் தக்கபடி கேட்டு பெறலாம்.  
முக்கியமானவை மூன்று !
ஒருவர் வாங்குகிற சம்பளத்தில் அடிப்படைச் சம்பளம், ஹெச்.ஆர்.ஏ. மற்றும் டி.ஏ. ஆகிய மூன்று காரணிகள்தான் மற்ற விஷயங்களுக்கு ஆதாரமாக இருக்கின்றன. இந்தக் காரணிகளில் அடிப்படைச் சம்பளம் அதிகமாக இருப்பதுதான் நல்லது என்றாலும், இதை பெரும்பாலான நிறுவனங்கள் ஏற்றுக்கொள்வதில்லை.  ஆனால், பெரும்பாலான ஐ.டி. நிறுவனங்கள் பணியாளர்களின் சம்பளத்தை அவர்களின் வரிக்குச் சாதகமாக அமைத்துத் தருகின்றன. இனிவரும் காலத்தில் வேறு துறை நிறுவனங்களும் இந்த அணுகுமுறையைப் பின்பற்றலாம்.  
அடிப்படைச் சம்பளம் முழுவதும் வரிக்கு உட்பட்டதுதான் என்றாலும், இந்தச் சம்பளத்திலிருந்துதான் பி.எஃப். சேமிப்பு கணக்கிடப்படுவதால் நம்மிடமிருந்து பிடிக்கப்படும் பி.எஃப். தொகை அதிகமாக இருக்கும். இதனால் நிறுவனம் தரும் பி.எஃப். சேமிப்புத் தொகையும் அதிகமாகவே இருக்கும். நீண்டகால நோக்கில், அடிப்படைச் சம்பளம் அதிகமாக இருப்பது ஜூனியர் நிலையில் இருக்கும் பணியாளர்களுக்கு லாபகரமானதாகவே இருக்கும். ஆனால், உயர்பதவியில் இருப்பவர்களுக்கு நிறுவனம் தரும் சம்பளம் அதிகமாகத்தான் இருக்கும். இதனால் அவர்கள் அடிப்படைச் சம்பளத்தை நிறுவனத்திடம் சொல்லி குறைவாக வைத்துக் கொள்வதன் மூலம் வருமான வரியைக் குறைக்கலாம். மற்றபடி மற்ற காரணிகளுக்கான தொகை விகிதம் அதிகமாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளலாம். இதனால் வரிச் செலுத்துவது கட்டுப்படுத்தப்படும்.
ஜூனியர் நிலையில் வேலை செய்துகொண்டே அடிக்கடி நிறுவனம் மாறுகிறவர்களுக்கு சம்பளத்தில் நீண்டகால சேமிப்பு என்பது இல்லாமல் இருக்கும். ஆகையால் அவர்கள் குறுகியகால அடிப்படையில் மாதம் கையில் கிடைக்கும் சம்பளத்தை அதிகப்படுத்திக்கொள்வது நல்லது.
முக்கிய காரணிகளில் இரண்டாவதாக இருப்பது பஞ்சப்படி; அடுத்தது, ஹெச்.ஆர்.ஏ. இந்த இரண்டும் பேசிக் சம்பளத்தின் அடிப்படையில் கணக்கிடப்படுவதால் அடிப்படைச்  சம்பளம் அதிகமாக இருக்கும்போது அதிகமாகவும், குறைவாக இருக்கும்போது குறைவாகவும் கிடைக்கும்.
பஞ்சப்படி கன்ஸ்யூமர் பிரைஸ் இன்டெக்ஸைப் பொறுத்து, கூட அல்லது குறையும்படியாகவே ஒருவரின் சம்பளத்தில் நடைமுறைப்படுத்தப் பட்டிருக்கும்.
அடுத்தது, ஹெச்.ஆர்.ஏ. இது அடிப்படைச்  சம்பளத்தில் இருந்து 40-50% வரை இருக்கலாம். ஹெச்.ஆர்.ஏ. என்பது பணியாளர்கள் வாடகை வீட்டில் குடியிருந்தால் அதற்கு வரிச் சலுகை உண்டு. கிராமமோ, நகரமோ பணியாளர்கள் தங்கி இருக்கும் இடத்திற்கு தகுந்தாற்போல ஹெச்.ஆர்.ஏ. விகிதம் மாறுபடும்.
நிறுவனத்திடம் கேட்டுப் பெறுங்கள் !
அலுவலகத்தில் இருந்து கிடைக்கும் சலுகை களுக்கான ரசீதுகள் காண்பிக்கப்படாமல் இருக்கும்பட்சத்தில் கண்டிப்பாக அதன் மீது வரி விதிக்கப்படும். எனவே, அலுவலகம் தரும் சலுகைகளை பயன்படுத்துவதோடு, அதற்கான ரசீதுகளை அலுவலகத்திடம்  சமர்ப்பிப்பது அவசியம். இந்த செலவினங்கள் வரையறையைத் தாண்டக்கூடாது. உதாரண மாக, செல்போன் கட்டணச் சலுகை, தொழில் முன்னேற்றப் படிப்புக்கான ரசீதுகளை  அலுவலகத்தில் சமர்ப்பித்து வரிச் சலுகை பெறலாம். இதுபோல, வேறு என்னென்ன இருக்கிறது?    
விடுமுறைச் சுற்றுலா:                    
உங்கள் சம்பளத்தில்  சுற்றுலாச் செல்வதற்கான எல்.டி.ஏ. கணக்கில் கொள்ளப்பட்டிருந்தால் நான்கு ஆண்டுகளில் இரண்டு முறை இந்தியாவுக்குள் சுற்றுலாச் சென்று வரலாம். இதற்கான செலவினங்களை ரசீதுடன் அலுவலகத்தில் க்ளைம் செய்துகொள்ள முடியும். உங்களுக்கு வழங்கப்படும் தொகைக்கு சுற்றுலாச் செல்லவில்லை அல்லது முழு தொகைக்கு ரசீதுகள் தரவில்லை எனில், அத்தொகை வருமான வரிக்கு உட்பட்டதாகும்.
மருத்துவச் செலவுகள்:
ஆண்டுக்கு ரூ.15,000 வரை மருத்துவச் செலவுக்கான ரசீது தந்து வரிச் சலுகை  பெறலாம்.
போக்குவரத்துச் செலவுகள்:
மாதத்திற்கு ரூ.800,  ஊனமுற்றவர்களுக்கு ரூ.1,600-க்கு பில் தந்து கொடுக்கவேண்டும் என்கிற அவசியம் கிடையாது.
பொழுதுபோக்குச் சலுகைகள்:
வருடத்திற்கு ரூ.5,000 வரை அரசுப் பணியாளர்களுக்கு மட்டும்.  
மொபைல் அல்லது தொலைபேசி கட்டணச் சலுகை:
நிறுவனத்தின் தேவைக்கு ஏற்றபடி தொகையின் அளவை அந்தந்த நிறுவனங்களே நியமிக்கும். இந்தச் சலுகை அலுவலகப் பயன்பாடுகளுக்கு மட்டும்.
கல்விச் செலவிற்கான சலுகைகள்:
பணியாளர்களின் குழந்தைகளுக்கான கல்விச் செலவுகளுக்குத் தரப்படும் சலுகைத் தொகை ஒரு குழந்தைக்கு மாதம் 100 ரூபாய் வீதம் இரண்டு குழந்தைகளுக்கான செலவினங்களைச் சம்பளத்தில் காட்டலாம்.
ஹாஸ்டல் செலவுக்கான சலுகைகள்:
பணியாளர்களின் குழந்தைகள் விடுதியில் தங்கி படிப்பவர்களாக இருந்தால் அதையும் தனது சம்பளத்தில் காட்டிக்கொள்ளலாம். ஒரு குழந்தைக்கு மாதம் 300 ரூபாய் வீதம் இரண்டு குழந்தைக்கான செலவினங்களைக் காட்டலாம்.
பணியாளர்களுக்கு நிறுவனங்கள் வழங்கும் பங்குகள்:
சலுகைகளுக்கு உட்பட்டு வரி வசூலிக்கப்படும்.
போனஸ்:
பணியாளர்களுக்கு அலுவலகம் தரும் போனஸ்களுக்கு வருமான வரி உண்டு.
தங்குமிடம் சார்ந்தவை!
வேலை செய்யும் நிறுவனம் தனது பணியாளர்களுக்கு வீடு ஒதுக்கியிருக்கும். இது வாடகை வீடாகவோ அல்லது கம்பெனியின் சொந்த இடமாகவோ இருக்கலாம். ஒரு நிறுவனம் பணியாளர்களின் தங்கும் வசதிக்காக தங்குமிடத்தைக் குத்தகையாக எடுத்திருக்கும்பட்சத்தில் பணியாளர்கள் சம்பளத்தில் 15% அல்லது வீட்டுக்கான வாடகை, இதில் எது குறைவோ அது அவர்களின் வரிக்கு உட்பட்ட வருமானத்தில் சேர்க்கப்படும். அதுவே, நிறுவனத்தின் சொந்த இடமாக இருக்கும்பட்சத்தில் அந்த நகரத்தின் மக்கள் தொகையைப் பொருத்து மதிப்பீடு விகிதம் மாறுபடும். நகரத்தின் மக்கள் தொகை 25 லட்சத்திற்கும் அதிகமாக இருந்தால், சம்பளத்தில் 15%, 10-25 லட்சம் வரை மக்கள் தொகை இருந்தால் 10%, அதற்கும் கீழ் மக்கள் தொகை இருந்தால் 7.5% தங்குமிடத்தின் மதிப்பீடாக எடுத்துக்கொள்ளப்படும்.
மெடிக்கல் இன்ஷூரன்ஸ்!
பொதுவாகப் பணியாளர் களுக்கும், அவர்களின் குடும்ப உறுப்பினர் களுக்குமான மெடிக்கல் இன்ஷூரன்ஸ்களுக்கும், மருத்துவச் செலவுகளுக்கும் வரி கிடையாது. இது சில விதிமுறைகளுக்கு உட்பட்டவையாக இருக்கின்றன.
அதேபோல, ஒரு நிறுவனம் சொந்தமாக மருத்துவமனை அமைத்து செயல்பட்டு வந்தால் அங்கு மருத்துவம் பார்த்தாலோ அல்லது அரசு சார்ந்த மருத்துவமனைகளில் மருத்துவம் செய்து கொண்டு அதற்கான செலவை கம்பெனி ஏற்றுக்கொண்டால் அந்த தொகைக்கும் வரி கிடையாது. இதற்கு எந்த விதிமுறைகளும் கிடையாது. அதேபோல வெளிநாடுகளுக்குச் சென்று மருத்துவம் செய்துகொண்டால் ஆர்.பி.ஐ. அனுமதிக்கும் தொகை வரை வரி கிடையாது. வருட வருமானம் இரண்டு லட்சம் ரூபாய்க்குள் இருந்தால் மருத்துவம் பார்க்க வெளிநாடுகளுக்குச் சென்று வந்த பயணத் தொகைக்கும் வரிச் சலுகை உண்டு.
நீண்டகால அடிப்படையில் கிடைப்பவை!
* ஓய்வூதியத் திட்டம்;
இத்திட்டங்களுக்கு நிறுவனங்கள் செலுத்தும் தொகைக்கு வரிச் சலுகை அதிகபட்சம் ஒரு லட்சம் ரூபாய் வரை உண்டு. பணியாளர்களே செலுத்தும் தொகைக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை 80சி பிரிவின் கீழ் வரிச் சலுகை கிடைக்கும்.
* பணிக்கொடை;
அரசுப் பணியாளர்களுக்கு பணிக்கொடை தொகை முழுவதற்கும் வரி கிடையாது. மற்றவர் களுக்கு அதிகபட்சம் 10 லட்சம் ரூபாய் வரை பணிக்கொடை தொகைக்கு வரி கட்ட வேண்டிய அவசியம் இல்லை.
* என்.பி.எஸ்;
80சிசிடி பிரிவின் கீழ் வரிச் சலுகை உண்டு. முதிர்வின்போது வரியைக் கட்டவேண்டும்.
உணவு மற்றும் பரிசு பொருட்கள் சார்ந்தவை!
அலுவலக நேரங்களில் உட்கொள்ளும் உணவுகளுக்கு நாள் ஒன்றுக்கு 50 ரூபாய்க்கு  வருமான வரிச் சலுகை பெறலாம். சில ஐ.டி. நிறுவனங்கள் சொடக்ஸோ (ஷிஷீபீமீஜ்ஷீ) பாஸ் போன்றவற்றை தந்து பணியாளர்களின் வரியைக் குறைக்கின்றன. அதேபோல, பணியாளர்கள் வருடம் 5,000 ரூபாய் வரை நிறுவனத்திடமிருந்து பரிசு பொருளாகவோ அல்லது பரிசு கூப்பன் களாகவோ பெற்றுக்கொண்டால் வருமான வரியைக் கட்டுப்படுத்தலாம். இதற்கான தொகை பணமாகச் சம்பளத்தோடு வரும் போது வரி கட்டுவது அவசியமாகிறது.  
வரிச் சலுகை பெற நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டியவை:
* செய்யும் வேலையின் தன்மைக்கு ஏற்ப தனது திறமைகளை மேம்படுத்திக்கொள்ள வாங்கும்  புத்தகங்கள் மற்றும் பயிற்சி கருவிகளுக்கான பில்களை அலுவலகத்தில் ஒப்படைக்கவேண்டும்.
* வீட்டுக் கடன் வாங்கியிருந்தால் அது சார்ந்த விவரங்களை நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டும்.
* வாடகை வீட்டில் குடியிருப்பவராக இருந்தால் வீட்டு உரிமையாளர்களிடம் வாடகை ரசீதை பெற்று அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.
* அலுவலகம் இல்லாமல் தனிப்பட்ட முறையில் மெடிக்கல் இன்ஷூரன்ஸ் எதாவது எடுத்திருந்தாலும் அந்த விவரங்களை அல்லது பாலிசி பத்திர நகலை அலுவலகத்திடம் கொடுக்கவேண்டும்.
மேலே சொன்ன விஷயங்கள் அத்தனையையும் மனதில் நிறுத்தி வேலைக்குச் சேரும்போதே தங்களின் சம்பளத்தை சாதகமாக அமைத்துக் கொண்டால், உங்களின் வாழ்க்கையின் வெற்றிக்கு உத்தரவாதம் உறுதியே!


சின்ன விஷயங்களின் அற்புதம்! -- உணவே மருந்து,


Friday, February 15, 2013 0 comments

வியாதிகளை விழுங்காதீர்கள்! -- மருத்துவ டிப்ஸ்,

''போர்த்திக்கொண்டு படுத்தால் என்ன? படுத்துக்கொண்டு போர்த்தினால் என்ன? சாப்பாடும் வயிற்றுக்குள் போகிறது. மாத்திரையும் வயிற்றுக்குள் போகிறது. இதில் முன் பின் என்ன வேண்டி இருக்கிறது?' 'விருந்தும் மருந்தும் மூன்று நாள்’ என தங்களுக்குத் தாங்களே வியாக்கியானம் பேசும் அசால்ட் ஆறுமுகங்களின் கனிவான கவனத்திற்கு இந்தக் கட்டுரை. 
மருந்து மாத்திரைகள் முறையாக எடுத்துக்கொள்வது எப்படி என்ற கேள்விகளுக்கு கோவை அரசு பொதுமருத்துவமனைப் பேராசிரியர்    த.ரவிக்குமார் பதில் அளிக்கிறார். ''உடனடியாக வேலை செய்யவேண்டிய மருந்துகளை மட்டும், சாப்பிடும் முன் எடுத்துக்கொள்ளச் சொல்வார்கள். அமிலத் தன்மை உள்ள மாத்திரைகள் வெறும் வயிற்றில் எளிதில் உறிஞ்சப் படும் (அது வயிற்றுப் புண் ஆற்றும் மருந்தாகவோ, ரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைக்கும் மருந்தாகவோ இருக்கலாம்). எந்த மாத்திரைச் சாப்பிட்டால் வயிறு எரியுமோ அல்லது வயிற்றில் புண் ஏற்படுமோ, அந்த மாத்திரைகளை உணவுக்குப் பின் சாப்பிடச் சொல்வார்கள். சாதாரணமாக மருந்துகள் வயிற்றில் இருந்து உறிஞ்சப்பட்டு கல்லீரலுக்குச் சென்று ரத்தத்தில் கலந்து வேலை செய்ய மணிக்கணக்கில் ஆகும். மிக விரைவாக வேலை செய்யவேண்டிய உயிர் காக்கும் மருந்துகளை (மாரடைப்புக்குத் தரப்படும் சார்பிட்ரேட் போன்றவை) நாக்கின் அடியில் வைத்தால், எச்சில் வழியாக நேராக ரத்தத்தில் கலந்து, சில நொடிகளில் உயிரைக் காக்கும். வலி நிவாரணி, வாந்தி தடுப்பு மருந்துகளும் இதுபோல கிடைக்கின்றன.
அதுபோலவே ஆஸ்துமா போன்ற நோய்களுக்கான மருந்தை வாய் மூலம் உறிஞ்சுவதன் மூலம், மருந்து நேரடியாக நுரையீரலுக்கு உள்ளேயே சென்று ஊசியைவிடவும் மிக விரைவாக வேலை செய்யும். எந்த மருந்தையும் டீ, காபி, அல்லது காற்று அடைக்கப்பட்ட குளிர்பானங்களுடன் சாப்பிடக் கூடாது. அவை மருந்துகளுடன் வினைபுரியக்கூடியவை. டீ, இரும்புச் சத்து உறிஞ்சப்படுவதைத் தடுக்கும்.
டாக்டர் மருந்து எழுதித் தரும்போது மருந்துகளை உட்கொள்ளவேண்டிய நேரத்தையும் கேட்டுக் கொள்ளவேண்டும். மருந்துக் கடை விற்பனையாளர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்வதைவிட டாக்டரிடம் கேட்பதே சரியானது.
குழந்தைகளுக்கான சில மருந்துகளைத் தண்ணீர் விட்டுக் கரைத்துக் கொடுக்கச் சொல்வார்கள். அதுபோன்று தண்ணீர் கலக்கிய மருந்துகளை அதிகபட்சம் 5 நாட்கள் வரையே கொடுக்கலாம். காய்ச்சல், தலைவலி போன்ற நோய்களுக்கு அவ்வப்போது தேவைப்படும்போது மட்டும் கொடுக்கச் சொன்னால், மருத்துவர் சொன்னபடி அவ்வப்போது மட்டும் கொடுக்க வேண்டும். அலோபதி, சித்தா, ஆயுர்வேதா, ஹோமியோபதி மருந்துகளை ஒன்றாகக் கொடுக்க வேண்டாம். மது, புகையிலை, பான் போன்றவை மருந்துகளின் வீரியத்தைக் குறைக்கவோ, அதிகரிக்கவோ செய்யும். எனவே மருந்து சாப்பிடும்போது, அவை வேண்டவே வேண்டாம்'' என விளக்கமாகச் சொன்னவர் வயதுவாரியானவர்கள் மாத்திரைகளை எடுத்துக்கொள்ள வேண்டிய விதம் குறித்தும் விளக்கினார்.
''குழந்தைகளுக்கு, பெரியவர்களின் மாத்திரைகளை உடைத்துத் தர வேண்டாம். ஆயுள் முழுக்க சாப்பிட வேண்டிய உயிர் காக்கும் மாத்திரைகள் எப்போதும் கைவசம் இருக்கவேண்டும். மருந்துகளை நேரடி வெயில் படாத ஈரம் இல்லாத குளிர்ச்சியான இடத்தில் வையுங்கள்.
மாத்திரையின் ஆயுள் (காலாவதி தேதி) பார்த்து உறுதிசெய்த பிறகே சாப்பிடுங்கள். ஒரு குறிப்பிட்ட மருந்தை மூன்று மாதங்களுக்கு டாக்டர் அறிவுறுத்தி இருந்தால், ஒரே நாளில் மூன்று மாதங்களுக்கும் தேவையான மருந்தை வாங்கி ஸ்டாக் வைக்காமல், மாதம் ஒருமுறை அல்லது இருமுறை என வாங்குவது நல்லது. மாத்திரையின் ஆயுள் தேதி தெரியாத அல்லது, பெயர் சரியாகத் தெரியாத மாத்திரைகளை எந்தக் காரணம் கொண்டும் வாங்க வேண்டாம். மற்றவர்களுக்குக் கொடுத்த மருந்தை சாப்பிட வேண்டாம்.
மருத்துவர் குறிப்பிட்ட காலத்துக்குக் குறைவாகவோ, அதிகமாகவோ... முக்கியமாக ஆன்டியாட்டிக்  மற்றும் வலி நிவாரண மருந்துகளைச் சாப்பிட வேண்டாம். மருந்து ஒவ்வாமை ஏற்பட்டால், மருந்தை நிறுத்திவிட்டு உடனடியாக மருத்துவரைப் பாருங்கள்.'' என்றார் பேராசிரியர் த.ரவிக்குமார்.
மாத்திரைகளை விழுங்கி வியாதிகளைத் தீர்க்கும் நிலை மாறி, மாத்திரைகளை விழுங்குவதனாலேயே வியாதிகளைத் தேடிக்கொள்வது, எத்தகைய வேதனை?!

Friday, February 15, 2013 0 comments

முதல் உதவி செய்வது எப்படி? -- உபயோகமான தகவல்கள்,

முதல் உதவி செய்வது எப்படி?
ந்தியாவில் விபத்துகளால் உயிர் இழப்பவர்களில் 80 சதவிகிதம் பேர், மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட முதல் ஒரு மணி நேரத்தில் பலியாகிறார்கள். சமீபத்தில் அதிரவைத்த புள்ளிவிவரம் இது. இத்தகைய விபத்தில் சிக்கியவர்களுக்கு முறையான முதல் உதவி கிடைத்திருந்தால், அவர்கள் நிச்சயம் காப்பாற்றப்பட்டு இருப்பார்கள். அந்த அளவுக்கு முதல் உதவி என்பது தேவையானதாகவும், பலருக்கும் தெரியாததாகவும் இருக்கிறது. ஆபத்தான தருணங்களில் எத்தகைய முதல் உதவிகளைச் செய்வது, பயம் நீக்கி எப்படி தன்னம்பிக்கை ஊட்டுவது, உயிரைக் காப்பாற்ற எத்தகைய வழிமுறைகளை மேற்கொள்வது என இந்த இணைப்பு இதழில் விரிவாக விளக்குகிறார்கள் பொதுநல மருத்துவர்கள் கு.கணேசன், ஏ.பிரபு, இதய நோய் சிகிச்சை நிபுணர் நாராயணஸ்வாமி மற்றும் 'அலெர்ட்’ அமைப்பைச் சேர்ந்த ராஜேஷ் திரிவேதி ஆகியோர். உயிரைக் காக்கும் உன்னதப் பணிக்கு இந்த இணைப்பிதழ் நிச்சயம் உங்களைத் தயாராக்கும்.
முதல் உதவி என்றால் என்ன?
காயம் அல்லது நோய் காரணமாக உடல் நலப் பாதிப்பு அடைந்த ஒருவருக்கு, முறையான மருத்துவ சிகிச்சை கிடைக்கும் வரை, இருப்பதை வைத்துக்கொண்டு, அவசரநிலைப் பராமரிப்பை மேற்கொண்டு உயிரைக் காப்பாற்றுவதே முதல் உதவி. காயங்கள் மோசமான நிலையை அடையாமல் தடுப்பதும் முதல் உதவியே.  
முதல் உதவி செய்யும்போது தவிர்க்க வேண்டியவை:
 ஒருவருக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டுவிட்டது என்றால், உடனடியாக அவரைச் சூழ்ந்துகொண்டு நிற்பது தவறு. காற்றோட்டத்திற்கு வழி செய்ய வேண்டும்.
 ஒருவர் மயக்க நிலையை அடைந்துவிட்டால், அவருக்கு சோடா, தண்ணீர் போன்றவற்றைக் கொடுக்கக் கூடாது. தண்ணீரானது உணவுக் குழாய்க்குப் பதில், மூச்சுக் குழாய்க்குள் சென்று அடைத்து, அதனால் உயிரிழப்பு ஏற்படும் அபாயமும் உருவாகும்.
 கை, கால்களில் ரத்தம் வந்துகொண்டு இருந்தால், ரத்தம் வரும் பகுதியை மேல் நோக்கி உயர்த்திப் பிடித்து, ஒரு துணியால் அந்த இடத்தை அழுத்திப் பிடித்துக் கட்ட வேண்டும். இதனால் ரத்தப்போக்கு குறையும்.
முதல் உதவியில் இருக்கும் அடிப்படை விஷயங்கள்:
 முதலில், பாதிப்பு அடைந்தவர் உணர்வுடன் இருக்கிறாரா என அவரின் இரண்டு பக்கத் தோள்களின் மீதும் தட்டிப் பரிசோதிக்க வேண்டும்.
 மற்றவர்களை உதவிக்கு அழையுங்கள். இதனால், பாதிப்பு அடைந்த நபரை உடனடியாகக் காப்பாற்றுவதுடன், உங்களுக்கு இருக்கும் மனப் பதட்டத்தையும் தணித்துக்கொள்ள முடியும்.
 ஆம்புலன்ஸ் அல்லது அவசர உதவிக்கு 108 என்ற எண்ணைத் தொடர்புகொள்ளுங்கள்.
 ஆம்புலன்ஸ் வர எவ்வளவு நேரம் ஆகும் என்பதைப் பொருத்து முதல் உதவி செய்வதற்கு முயற்சியுங்கள்.
 ஆம்புலன்ஸ் உதவி மிக விரைவாகக் கிடைக்கும் என்றால், அவர்கள் வரும் வரை காத்திருங்கள். நேரம் ஆகும் என்றால் அல்லது நிலைமை மோசம் அடைந்தால், அவருக்கு 'கேப்’ (CAB - C: CIRCULATION, A:AIRWAY, B:BREATHING) எனப்படும், அடிப்படை விஷயங்கள் உள்ளதா எனப் பார்க்க வேண்டும். அவை, ரத்த ஓட்டம், சுவாசப் பாதையில் அடைப்பு, சுவாசம் உள்ளதா எனப் பார்க்க வேண்டும்.
இந்த மூன்று சோதனைகளும் அடிப்படையானவை. எந்த வகையான பாதிப்பாக இருந்தாலும் இந்த மூன்று சோதனைகளையும் செய்த பின்னரே, முதல் உதவி செய்ய வேண்டும்.
எப்படிச் செய்ய வேண்டும்?
ரத்த ஓட்ட சோதனை:
 பாதிப்பு அடைந்தவரை சம தளத்தில் படுக்கவைத்து அவரது குரல்வளையின் மத்தியில் இருந்து, வலது அல்லது இடதுபக்கமாக இரண்டு அங்குலம் அளவு தள்ளி இதயத்திற்கு மிகவும் நெருக்கமான பகுதியில், உங்களது இரண்டு விரல்களை வைத்தால், ரத்த ஓட்டம் இருப்பதை உணர முடியும்.
சுவாசப் பாதை சோதனை:
 பாதிப்பு அடைந்தவரை சமதளத்தில் படுக்கவைத்து அவர் நெற்றியின் மீது ஒரு கையை வைத்துக்கொண்டு மறு கையால் தாடையைச் சிறிது மேல் நோக்கி உயர்த்தவும். இதனால் சுவாசப் பாதையில் ஏதேனும் பாதிப்பு இருந்தால் சீராகும்.
சுவாச சோதனை:
பாதிப்பு அடைந்தவரை சமதளத்தில் படுக்க வைத்து வாய் அருகே உங்களது காது மடல்களைக் கொண்டுசென்று, சுவாசத்திற்கு உரிய ஏதேனும் சத்தம் வருகிறதா என்பதைக் கவனிக்கவேண்டும். அதே சமயம், பாதிப்பு அடைந்தவரின் மார்பு ஏறி, இறங்குகிறதா என்பதையும் கவனிக்க வேண்டும்.
 இந்தப் பரிசோதனையில் பாதிப்பு அடைந்தவருக்குச் சுவாசம் இருப்பது தெரிய வந்தால், உடனடியாக ஆம்புலன்ஸை வரவழைத்து, சிகிச்சைக்கு அனுப்ப வேண்டும்.
 ஒருவேளை சுவாசம் இல்லை என்றால், சி.பி.ஆர் (Cardio-pulmonary Resuscitation) எனப்படும் இதய செயற்கை சுவாசமூட்டல் முதல் உதவியைச் செய்ய வேண்டும்.
சி.பி.ஆர். இதய சுவாசமூட்டல்:
 பாதிப்பு அடைந்தவருக்கு சுவாசம் நின்றுபோனாலோ, நாடித்துடிப்பு இல்லாமல் இருந்தாலோ, சி.பி.ஆர். செய்வதன் மூலம் அவரது உடலில் ரத்த ஓட்டத்தை இயல்பு நிலைக்குக் கொண்டுவர முடியும். இதனால் ஆக்சிஜன் இழப்பால் ஏற்படும் இறப்பு மற்றும் மூளை சேதத்தையும் தடுக்க முடியும்.
எப்படிச் செய்வது?
 பாதிப்பு அடைந்தவரைச் சமதளத்தில் படுக்கவைத்து, அவருக்குப் பக்கவாட்டில் அமர்ந்துகொண்டு, இடது மார்புப் பகுதியில், நம்முடைய இரண்டு கைகளின் உள்ளங்கைப் பகுதியை ஒன்று சேர்த்து அரை செ.மீ. அளவுக்கு மென்மையாக அழுத்த வேண்டும்.
 மூன்று முறை அழுத்திய பிறகு அவரது வாயோடு வாய்வைத்துக் காற்றை ஊத வேண்டும். (மீட்பு சுவாசம் பார்க்கவும்) இதேபோன்று தொடர்ந்து செய்ய வேண்டும்.
 அழுத்தும்போது வேகமாக அழுத்தினால் விலா எலும்பு உடைவதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே கவனம் தேவை.
 குழந்தைகளுக்கு: குழந்தைகளுக்கு சி.பி.ஆர். முதல் உதவி செய்யும்போது, உள்ளங்கையைக் கொண்டு அழுத்தம் கொடுக்காமல், இரண்டு விரல்களால் கொடுக்க வேண்டும். அதேபோல 15 முறை மட்டும்தான் அழுத்தம் தர வேண்டும்.
மீட்பு சுவாசம்:
 பாதிப்பு அடைந்தவரைப் படுக்கவைத்துத் தாடையைச் சிறிது உயர்த்தி, அவரது மூக்கின் நுனிப்பகுதியை மூடி அழுத்திப் பிடித்துக்கொண்டு, அவரது வாயை நன்கு திறந்துகொள்ளவும்.
 பிறகு உங்களது வாயை நன்கு திறந்து, காற்றை நன்கு உள் இழுத்துக்கொண்டு, அவரது வாயோடு வாய்வைத்து மூடி பிறகு உள் இழுத்த காற்றை வெளிவிடவும். இதனால் பாதிப்பு அடைந்தவருக்குச் சுவாசம் கிடைக்கும்.
மின்சாரம் தாக்கினால்...
பவர்கட் பிரச்னை இருந்தாலும், பவர் இல்லாமல் நம்மால் இருக்க முடிவது இல்லை. எங்கேயும், எதிலும் மின்சாரத்தின் தேவை என்பது நீக்கமறக் கலந்துவிட்டது. கரன்ட் ஷாக் வாங்காத நபர்கள் ஒருவர்கூட இருக்க மாட்டார். சிறிய அளவில் நாம் அனைவரும் ஷாக் வாங்கியிருப்போம்.
 மின்சாரம் தாக்கியவர்களுக்கு முதலில் மின் இணைப்பைத் துண்டிப்பதே, நாம் செய்யும் முதல் உதவி.
 மின்சாரத் தாக்குதலுக்கு உள்ளானவர் மின் கம்பியைத் தொட்டுக்கொண்டு இருந்தால், முதலில் 'மெயின் ஸ்விட்ச்’-ஐ அணைக்க வேண்டும்.
 ஸ்விட்ச் எது எனக் கண்டறிய முடியவில்லை என்றால், மொத்த மின் இணைப்பையே துண்டிக்கலாம்.
 அதுவும் முடியவில்லை என்றால், நன்கு உலர்ந்த மரக்கட்டை போன்ற மின் கடத்தாப் பொருட்களைப் பயன்படுத்தி, மின் கம்பியில் இருந்து அவரது கையை நகர்த்தி மின் ஓட்டத்தைத் தடை செய்யலாம்.
 மின் கடத்தாப் பொருட்களைக்கொண்டு மின் ஓட்டத்தைத் தடைச் செய்யும்போது, அப்படிச் செய்கிறவர் கண்டிப்பாக ரப்பர் செருப்பு அல்லது ரப்பர் கையுறைகளை அணிந்து இருக்கவேண்டும்.
  உலோகப்  பொருட்களைக் கொண்டு மின் இணைப்பைத் துண்டிக்கக் கூடாது.
 பிறகு பாதிக்கப்பட்டவரின் நாடித்துடிப்புப் பரிசோதனை, சுவாசப்பாதை சோதனை போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும்.
 மின்சாரத்தால் கருகிப்போன உடல் பாகத்தைச் சுமார் 10 நிமிடங்கள் சுத்தமான ஈரத் துணியால் மூடி வைக்க வேண்டும். பின்னர் நீர் உறிஞ்சும் சுத்தமான துணியால் ஒன்றால் மூடிக் கட்ட வேண்டும்.
 கழுத்துப் பகுதியைத் தொங்கவிடாமல், சீரான முறையில் முட்டுக்கொடுத்து மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.
 ஷாக் அடிபட்டவருக்கு வெளிப்படையாகப் பாதிப்பு ஏதும் தெரியாமல் இருக்கலாம். மின்சாரம் நம் உடலில் பாயும்போது, உள் உறுப்புகளைப் பாதிக்கச் செய்யலாம். எனவே, டாக்டரைச் சந்தித்து ஆலோசனை பெறுவது நல்லது.
இடி மின்னல் தாக்கல்
மின்சாரம் தாக்கினால் ஒருவருக்கு என்ன முதல் உதவி செய்யப்படுகிறதோ, அதேதான் மின்னலுக்கும்!
 மின்னலில் காயம்பட்டால், முதல் உதவி செய்வதாக நினைத்து அவர்கள் மீது இங்க், டூத் பேஸ்ட், தோலில் தடவப்படும் மருந்து போன்றவற்றைச் சிலர் தடவுவார்கள். இதனால் காயத்தின் தன்மை அறிய முடியாமல் போய் சிகிச்சை தாமதம் ஆகக்கூடும். எனவே, மின்னலில் காயம் அடைந்தவரை அப்படியே மருத்துவமனைக்குக் கொண்டுவருவதுதான் அவருக்கு நாம் செய்யும் முதல் உதவி.
 வெட்டவெளியில் மின்னல் தாக்காது. மின்னல் பாய அதற்கு ஒரு கடத்தி தேவை. எனவே, மழைக்கு மரத்தடியில் ஒதுங்க வேண்டாம்.
 மழை பெய்யும்போது வெறும் காலுடன் நடக்க வேண்டாம். செருப்பு அணிந்து நடக்கும்போது பூமிக்கும் உங்களுக்கும் இடையே தொடர்பு துண்டிக்கப்படுவதால், இடி உங்கள் மீது விழுவதற்கான வாய்ப்பு குறைகிறது.
 குடை பிடிப்பவர்கள் குடையின் பிளாஸ்டிக் பகுதியை மட்டுமே பிடிக்க வேண்டும். இரும்பு பகுதியில் மின்னல் பாய வாய்ப்பு உள்ளது.
 இடி மின்னல் சமயத்தில் மின்சாரத்தை அதிகம் பயன்படுத்த வேண்டாம்.
மாரடைப்பு ஏற்பட்டால்:
யாரோ நம்முடைய மார்புப் பகுதியை அழுத்துவதுபோன்ற கடுமையான வலி ஏற்படும். அதிக வியர்வை மற்றும் மயக்கம் வருவதுபோன்று இருக்கும். இப்படி ஏதேனும் அறிகுறிகள் தென்பட்டால், அது மாரடைப்பாகக்கூட இருக்கலாம்.
 20 நிமிடங்களுக்குள் இந்த அறிகுறிகள் நின்றுவிட்டால், அது மைனர் ஹார்ட் அட்டாக்.
 20 நிமிடங்களுக்கு மேல் நீடித்தால் அது சிவியர் ஹார்ட் அட்டாக்.
 இதில் எந்த வகையாக இருந்தாலும் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்குச் செல்வது நல்லது.
மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்போதே பாதிக்கப்பட்டவருக்கு ஆஸ்பிரின் மாத்திரையைக் கொடுக்க வேண்டும். இந்த மாத்திரை ரத்தம் உறைதலைத் தடுப்பதுடன், கட்டிப்போன ரத்தத்தைச் சரிசெய்ய முயற்சிக்கும்.
 மருத்துவமனைக்குக் கொண்டுசெல்ல நேரம் ஆகும் என்றால், அவருக்கு சி.பி.ஆர். முதல் உதவி அளிக்கலாம்.
 மாரடைப்பின்போது, இதயத் தசைகளுக்குச் செல்லும் ரத்தம் தடைபடுகிறது. எனவே, எவ்வளவு சீக்கிரம் அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சிகிச்சைபெற நடவடிக்கை எடுக்கிறோமோ, அந்த அளவுக்கு அவரது இதயத் தசைகளைக் காப்பாற்ற முடியும்.
நீரில் மூழ்கியவர்களுக்கு:
தண்ணீரில் மூழ்கியவர்களைக் கரைக்குக் கொண்டுவந்து அவரது வயிற்றில் அழுத்தி தண்ணீரை உமிழ்வதுபோல சினிமாக்களில் காட்சி அமைப்பார்கள். இது தவறானது. தண்ணீரில் மூழ்கியவர் தண்ணீர் குடிக்கும்போது அது நுரையீரல் மற்றும் வயிற்றுக்குள் செல்லும். வயிற்றுக்குள் செல்லும் நீரால் பாதிப்பு இல்லை. இதை அழுத்தி வெளியே எடுப்பதால் எந்தப் பயனும் இல்லை.
 நுரையீரலுக்குச் சென்ற தண்ணீரே உயிர் இழப்புக்குக் காரணம். நுரையீரலுக்குள் சென்ற தண்ணீரை வெளியேற்றும் சிகிச்சையை மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களால் மட்டுமே செய்ய முடியும்.
 நீரில் மூழ்கியவருக்கு முதல் உதவி செய்யும்போது, அவரைத் தரையில் படுக்கவைத்து மூச்சு உள்ளதா எனப் பார்க்க வேண்டும். சுவாசம் இல்லை எனில், அவருக்குச் செயற்கை சுவாசம் அளிக்கலாம்.
 தண்ணீரில் மூழ்கியவருக்கு மூச்சும் நாடித் துடிப்பும் இல்லை என்றால், இறந்துவிட்டார் என நீங்களாக முடிவுகட்டிவிட வேண்டாம்.
 மயக்க நிலையில் இருப்பவருக்கு சி.பி.ஆர். முதல் உதவி அளித்து எவ்வளவு முடியுமோ, அவ்வளவு விரைவாக மருத்துவமனைக்குக் கொண்டுசெல்ல வேண்டும்.
காயங்கள், சிராய்ப்புகள் ஏற்பட்டவர்களுக்கு:
விபத்தில் காயம் அடைந்தவர்களைக் கையாளும்போது அதிகக் கவனம் தேவை. பதட்டத்தில் காயம் அடைந்தவரை நாம் தூக்கும்போது அதுவே எலும்பு முறிவு உள்ளிட்ட பிரச்னைகளுக்குக் காரணமாகிவிடக்கூடும்.
 காயம்பட்டவரைப் பாதுகாப்பான இடத்துக்குக் கொண்டுவந்ததும், காயம் ஏற்பட்ட புண்ணில், மண் அல்லது வேறு ஏதேனும் பொருட்கள் ஒட்டி இருக்கிறதா என்பதைப் பார்த்து, அவற்றைச் சுத்தமான, உலர்ந்த துணியைக்கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.
 காயம் அடைந்த பகுதியைத் துணியைக்கொண்டு அழுத்திப் பிடித்துக்கொள்ள வேண்டும். இதனால் ரத்தம் கட்டிக்கொள்வதைத் தவிர்க்கலாம்.
 காயம் அடைந்தவரைப் படுக்கவைத்து, கை மற்றும் கால்களை இதய மட்டத்துக்கு மேல் உயர்த்திக்கொள்ள வேண்டும்.
 கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருந்தால், ஒரு துணியை எடுத்து, சிறு சிறு துண்டுகளாகக் கத்தரித்து, முறிவு ஏற்பட்ட கையோடு ஒரு ஸ்கேலையோ அல்லது சுருட்டிய செய்தித்தாளையோ வைத்துக் கட்ட வேண்டும்.
 காலில் எலும்பு முறிவு ஏற்பட்டால், முறிவு ஏற்பட்ட காலுடன் இன்னொரு காலையும் சேர்த்து ஆங்காங்கே கட்ட வேண்டும்.
 இதைத் தவிர நாமாகவே முறிந்த எலும்புகளைச் சேர்க்க நினைக்கவோ, எலும்பின் நிலையை இயல்பு நிலைக்குக் கொண்டு செல்லவோ முயற்சிக்கக் கூடாது. இதனால் பாதிப்புகள் அதிகரிக்க நேரிடலாம்.
மயக்கம் அடைந்தவர்களுக்கு:
நம் மூளை செயல்பட ஆக்சிஜனும் குளுகோஸும் தேவை. மூளைக்குத் தேவையான ஆக்சிஜன் மற்றும் குளுகோஸை ரத்தம் கொண்டுசெல்கிறது. மூளைக்குப் போதுமான ரத்தம் கிடைக்காதபோது மூளையின் செயல்பாட்டில் பாதிப்பு ஏற்பட்டு, அதனால் மயக்கம் ஏற்படுகிறது. தற்காலிக மயக்கத்துக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைவது, ரத்த அழுத்தம் குறைவது, நீர் இழப்பு போன்றவை முக்கியக் காரணங்கள். அதிகப் பயம், அழுகை, வெயிலில் நிற்பது போன்றவையும் மயக்கத்தை ஏற்படுத்தலாம். பொதுவாக மயக்கம் தானாகவே சில நிமிடங்களில் சரியாகிவிடும்.
 மயக்கம் அடைந்தவரை தரையில் மெதுவாகப் படுக்கவைத்து, கால்களை ஒரு அடிக்கு உயர்த்திப் பிடிக்க வேண்டும்.
 அவருக்கு நன்கு காற்றோட்டம் கிடைக்கச் செய்ய வேண்டும்.
 கழுத்து வளையாமலும் திரும்பாமலும் பார்த்துக்கொள்ள வேண்டும். இதனால் சுவாசத் தடை இல்லாமல் காப்பாற்ற முடியும்.
 இறுக்கமான ஆடை அணிந்திருந்தால், அவற்றை சற்றுத் தளர்த்த வேண்டும். குடிப்பதற்கு எதையும் கொடுக்க வேண்டாம்.
 அதன் பிறகும் அவர் எழவில்லை எனில், 'கேப்' என்ற அடிப்படையைப் பாருங்கள். உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லுங்கள்.
 மயக்கமானவர் இயல்பு நிலைக்குத் திரும்பியதும், அவரை உடனடியாக எழுந்து நிற்க அனுமதிக்கக் கூடாது. திரும்பவும் மயக்கம் அடைந்து கீழே விழ நேரிடலாம்.
 ஐந்து நிமிடங்கள் வரை படுக்கவைத்து, அதன் பிறகு ஐந்து நிமிடங்கள் வரை உட்கார்ந்து இருக்கச்செய்து, அதன் பிறகே எழுந்து நிற்க வைக்க வேண்டும்.
நீரிழப்பு ஏற்பட்டால்:
வருவது கோடைக்காலம். இந்தக் காலத்தில் வெயிலில் அலைபவர்கள் திடீரென மயக்கம்போட்டு விழுவதற்கான வாய்ப்பு உள்ளது.  உடலில் போதுமான அளவு நீர்ச் சத்து இல்லாமல்போவதே காரணம். வயிற்றுப்போக்கு ஏற்படும்போதும் நம் உடலில் நீர் இழப்பு ஏற்படும்.
 நீரேற்றம் (ரீஹைட்ரேஷன்) உங்கள் உயிரைக் காப்பாற்றும்.
 அதற்காக லிட்டர் கணக்கில் தண்ணீர் அருந்துதல் கூடாது. நம் உடலில் நீரிழப்பு ஏற்படும்போது, அதனுடன் அத்யாவசியத் தாது உப்புக்களும் வெளியேறிவிடுகின்றன.
 நீர் இழப்பு அறிகுறி தென்பட்டதும், உடனடியாக, சர்க்கரை, உப்பு நீர்க் கரைசலை அளிக்க வேண்டும். கொதிக்கவைத்து ஆறவைத்த ஒரு லிட்டர் தண்ணீரில் எட்டு டீஸ்பூன் சர்க்கரை, ஒரு டீஸ்பூன் உப்பு என்ற அளவில் கலந்து குடிக்கக் கொடுக்க வேண்டும்.
எவ்வளவு சீக்கிரம் நீரிழப்பை சரிசெய்கிறோமோ, அந்த அளவுக்கு உயிர் இழப்பைத் தவிர்க்கலாம்.
 தவிர, இளநீர் கொடுக்கலாம். இளநீரில் அதிக அளவில் எலக்ட்ரோலெட் உள்ளது.
 பாக்கெட்டில் விற்கப்படும் எலெக்ட்ரோலெட்டை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து கொடுப்பதன் மூலம் நீர்ப்பற்றாக்குறையைச் சரிசெய்ய முடியும்.
 மூச்சுத் திணறல் ஏற்பட்டவர்களுக்கு:
மூச்சுத் திணறல் ஏற்பட்டவர்களுக்கு, 'ஹெய்ம்லீக் மேன்யூவர்’ எனும் முதல் உதவியைச் செய்ய வேண்டும்.
 மூச்சுத் திணறலுக்கு ஆளானவரின் பின்பக்கமாக நின்று அவரது விலா எலும்புகளுக்குக் கீழாக, அதாவது வயிற்றின் மத்தியில் இரண்டு கைகளாலும் உள்நோக்கி அழுத்தியவாறு மேலே தூக்க வேண்டும். இப்படிச் சில முறைகள் செய்ய வேண்டும். இதனால், வயிற்றுப் பகுதியில் இருந்து கிளம்பும் வாயு, தொண்டையில் சிக்கியுள்ள உணவை வாய் வழியாக வெளியேத் தள்ளிவிடும்.
 அந்த நிலையிலேயே, அவரைத் தூக்க முயற்சிப்பதுபோலச் செய்ய வேண்டும். அப்போது சுவாசப் பாதையில் ஏதேனும் பாதிப்பு இருந்தால், நிவாரணம் கிடைக்கும்.
 ஒரு வயதுக்கும் குறைவான குழந்தைகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டால்?
 குழந்தைகள் காசு, பட்டாணி என கண்டதையும் எடுத்து வாயில் போட்டுக்கொள்ளும். குழந்தைகளின் உணவுக் குழாய், மூச்சுக் குழாய் இரண்டுமே மிகவும் குறுகிய விட்டத்தில் இருக்கும். இதனால், இந்த மாதிரியான பொருட்கள் மிக எளிதாக மூச்சுக் குழாயை அடைத்துக்கொள்ளும் வாய்ப்பு உள்ளது.
 குழந்தையின் மூச்சுக் குழாய் அல்லது உணவுக் குழாயில் பொருட்கள் அடைத்துக்கொண்டால், பாதிக்கப்பட்ட குழந்தையை முன்பக்கம் குனியவைத்து, ஒரு கையால் தாங்கியபடி, ஒரு தோள்பட்டை எலும்புகளுக்கு இடையில் உள்ளங்கையின் அடிப்பாகத்தில் ஓங்கித் தட்ட வேண்டும்.
 இப்படிச் சில முறைகள் தட்டினால், தொண்டையில் சிக்கியுள்ள பொருள் வாய் வழியாக வெளியேவந்துவிடும்.
 பொதுவாக மூச்சுத்திணறலில் அவதிப்படுபவர்களுக்குக் குடிப்பதற்கு எதுவும் கொடுக்கக் கூடாது. இது தொந்தரவை அதிகப்படுத்தும்.
தீக்காயம் அடைந்தவர்களுக்கு:
வீடுகளில் சமைக்கும்போது, கொதிக்கும் வெந்நீர் அல்லது எண்ணெய் கை தவறி உடம்பில் பட்டுவிட்டால் பாதிக்கப்பட்ட பகுதியில் ஐஸ் கட்டிகளை வைப்பதும் ஃப்ரிட்ஜில் இருந்து குளிர்ந்த தண்ணீரை எடுத்துக் காயத்தின் மீது மெள்ள ஊற்றுவதும் வலி- எரிச்சலைக் குறைக்கும்.
 அதன் பிறகு 'சில்வரெக்ஸ் ஆயின்மென்ட்’ தடவி பாதிக்கப்பட்டவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லலாம்.
 ஒருவரின் ஆடையில் தீப்பற்றிவிட்டால், உடனே தண்ணீரை அவர் மேல் ஊற்றி, தீ பரவாமல் அணைக்கலாம். தண்ணீர் ஊற்றும்போது தோல் குளிர்ச்சியடைந்து திசுக்கள் சேதமடைவது குறைக்கப்படுகிறது.
 கம்பளி, ஜமக்காளம் போன்ற தடிமனான துணிகள் கொண்டு பாதிக்கப்பட்டவரைப் போர்த்தித் தரையில் உருளச் செய்யும்போது, அந்த வெப்பத்தில் திசுக்கள் வெந்துவிடுவதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே, முடிந்தவரை தண்ணீர் ஊற்றித் தீயை அணைக்க முயற்சியுங்கள். தண்ணீர் இல்லை, வேறு வழியே இல்லை என்ற சூழ்நிலையில் கம்பளி, ஜமக்காளத்தைப் பயன்படுத்தலாம்.
 தீயை அணைத்த பிறகு, தீக்காயங்களின் மீதும், தீக்காயமுற்றவர் மீதும் நம் இஷ்டத்துக்குக் கைகளை வைக்கக் கூடாது. தோல் நழுவிவிடும் வாய்ப்பு இருக்கிறது.
 தீக்காயம் அடைந்தவரைக் காப்பாற்றச் செல்பவர்களே பல நேரங்களில் தீ விபத்துகளில் சிக்கிக்கொள்வது உண்டு. எனவே காப்பாற்றச் செல்பவர் தன்னுடைய முன்புறத்தில் பாதுகாப்பாக ஜமக்காளத்தை நன்றாக விரித்துப் பிடித்துக்கொண்டே பாதிக்கப்பட்டவரை அணுக வேண்டும்.
தூக்குப்போட்டுத் தற்கொலைக்கு முயற்சிப்பவர்களுக்கு:
சாதாரண மன உளைச்சலைக்கூடத் தாங்கிக்கொள்ள முடியாமல் தூக்குப் போட்டுக்கொள்பவர்களைப் பற்றி தினந்தோறும் படிக்கிறோம். இப்படி யாரேனும் முயற்சித்தால் நான்கு நிமிடங்களுக்கு உள்ளாக, அவர்களைக் காப்பாற்றி சிகிச்சை அளித்தால்தான் நல்ல பலன் கிடைக்கும்.
 முதலில், தூக்கு மாட்டியவரைத் தாங்கிப்பிடித்து மேலே தூக்க வேண்டும். இதனால், தூக்குக் கயிறானது தளர்ந்து அவரது கழுத்தை இறுக்காது. உடனடியாக மற்றொருவர் மேலே ஏறித் தூக்குக் கழுத்தில் இருந்து தூக்குக் கயிற்றை அகற்ற வேண்டும்.
 பாதிக்கப்பட்ட நபரின் கழுத்துப் பகுதியானது எந்த ஒரு பக்கத்திலும் சாய்ந்துவிடாதவாறு பிடித்துக்கொண்டே கீழே இறக்க வேண்டும். கயிறு இறுக்கியதில் கழுத்தில் உள்ள எலும்பு உடைந்து சிறுமூளையில் குத்துவதால்தான் உடனடி உயிரிழப்பு ஏற்படுகிறது. இதைத் தடுப்பதற்காகவே இப்படிச் செய்ய வேண்டும்.
 பாதிக்கப்பட்ட நபரை படுக்கவைத்த நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்ல வேண்டும்.
 ஒருவேளை தூக்கில் தொங்கிய நபர் நினைவு இழந்த நிலையில், நாடித்துடிப்பு இல்லாமல் இருந்தால், அவரது முகத்தில் தண்ணீர் தெளிப்பதோ, தண்ணீர் குடிக்கக் கொடுப்பதோ கூடாது.
 வாயோடு வாய் வைத்துக் காற்றை ஊதுவது, மார்பில் அழுத்துவது போன்ற 'சிஆர்பி’ வகை முதல் உதவிகளை மேற்கொள்ள வேண்டும்.
மணிக்கட்டுப் பகுதியில் ரத்தக் குழாயைத் துண்டித்துக் கொள்பவர்களுக்கு:
 கை மணிக்கட்டு ரத்தக் குழாயைத் துண்டித்திருப்பவரைக் கண்டால், உடனடியாகக் கயிறு அல்லது துணியினால் மணிக்கட்டுப் பகுதியில் அழுத்தமான கட்டுப் போட்டு கையை மேலே தூக்கி நிறுத்திய நிலையிலேயே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.
விஷம் அருந்தியவர்களுக்கு:
எலி மருந்து, பூச்சிக்கொல்லி மருந்து என விஷத்தை ஒருவர் சாப்பிட்டு இருந்தால், விஷம் ரத்தத்தில் கலப்பதற்கு முன்பு அதை வாந்தியாக வெளியேற்ற வேண்டும். விஷம் ரத்தத்தில் கலந்துவிட்டால் உடல் முழுக்கப் பரவி உடல் இயக்கத்தை முடக்குவதோடு, உடனடி மரணத்துக்கும் வழிவகுத்துவிடும்.
 விஷம் சாப்பிட்டவரின் வாயினுள் விரலை நுழைத்துச் செயற்கையாக வாந்தி எடுக்கச் செய்யலாம்.
 வேப்ப எண்ணெய் அல்லது சமையல் உப்புக் கரைசலைக் குடிக்க வைத்தால், வாந்தி மூலம் இரைப்பையில் தங்கி இருக்கும் விஷம் வெளியேறிவிடும். உடனடியாக அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டுசென்று சிகிச்சை அளிக்க வேண்டும்.
 விஷம் அருந்தியவர் நினைவு இழந்த நிலையில் இருந்தால், அவருக்கு வேப்ப எண்ணெய் அல்லது உப்புக் கரைசலைக் கொடுக்கக் கூடாது. ஏனெனில், அது மூச்சுக்குழாய்க்குள் சென்று உயிர் இழப்பை ஏற்படுத்திவிடலாம்.
 பாதிக்கப்பட்டவரின் கால்களை மேடான பகுதியிலும் தலைப்பகுதியைத் தாழ்வாகவும் இருக்கும்படி படுக்கவைக்க வேண்டும். தலையை ஒருபக்கமாகச் சாய்ந்த நிலையில் வைத்துக்கொண்டு, அவரது வாயினுள் விரலை நுழைத்து வாந்தி எடுக்கச் செய்யலாம்.
 மருத்துமனைக்குக் கொண்டு செல்லும்போது கூடவே மறக்காமல் பாதிக்கப்பட்டவர் பயன்படுத்திய விஷப் பாட்டிலையும் எடுத்துச் செல்ல வேண்டும். எந்த வகையான விஷத்தை அவர் உட்கொண்டார் என்பது தெரிந்தால், அவருக்கு சிகிச்சை அளிக்க உதவியாக இருக்கும் என்பதால் இதை மறக்க வேண்டாம்.
பாம்பு கடித்தவர்களுக்கு:
கிராமப்புறங்களில் பாம்புக்கடி என்பது சாதாரணமாக நிகழக்கூடியது. ஆனால், முதல் உதவி பற்றித் தெரியாததால் உயிரிழப்பு அதிகமாக உள்ளது.
 பாம்பு கடித்த இடத்தில் பாம்பின் பற்கள் பதிந்த அடையாளம் இருக்கும். அந்த இடத்தைச் சுத்தமான தண்ணீரால் சோப்புப் போட்டுக் கழுவ வேண்டும். கடிபட்ட இடத்தைச் சற்றுத் தூக்கி உயரமாக வைத்திருக்க வேண்டும்.
 காயத்துக்கு இரண்டு முதல் நான்கு அங்குலம் மேலாக உள்ள பகுதியில், ஈரமானத் துணிகளைக் கொண்டு அழுத்திக் கட்டு போட வேண்டும்.
 காயத்தின் மீது மஞ்சள் போன்றப் பொருட்களைப் பூசக் கூடாது. உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.
 பாம்பு கடித்த இடத்தில் வாய் வைத்து உறியவும் கத்தியால் கீறவும் கூடாது.
தேள், பூரான் போன்ற விஷக்கடி ஏற்பட்டவர்களுக்கு:
 முதலில் கடிபட்ட இடத்தை நன்கு கழுவி, கொட்டுப்பட்ட இடத்திற்கு ஐஸ் ஒத்தடம் கொடுப்பதுதான் சிறந்த முதல் உதவி.
வீட்டில் வைத்திருக்க வேண்டிய முதல் உதவிப் பொருட்கள்:
டி.வி, ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின், செல்போன்கள் என வீடு முழுக்க நிறைந்துகிடக்கும் பொருட்கள் அதிகம். ஆனால், உயிர் காக்கும் முதல் உதவிப் பொருட்கள் ஏதேனும் நம் வீட்டில் இருக்கிறதா? இதோ அத்தியாவசியமாக வீட்டில் வைத்திருக்க வேண்டிய முதல் உதவிப் பொருட்கள். வீட்டில் மட்டும் அல்ல, வாகனங்களிலும் இதை வைத்திருக்கலாம்.
 கிருமிநாசினி (Antiseptic liquid): தினசரி வாழ்க்கையில் உடலில் நோய்த்தொற்று ஏற்படாமல் இருக்க, கை கழுவும்போது கிருமிநாசினி பயன்படுத்தலாம். உடலில் காயம் ஏற்படும் பட்சத்தில் உடனடியாக கிருமிநாசினி பயன்படுத்திக் காயத்தைச் சுத்தப்படுத்துவது பாக்டீரியா மற்றும் கிருமித் தொற்றுகள் வராமல் தடுக்கும். இதேபோல் டிங்சர் வைத்திருப்பதும் முக்கியம்.
 பாராசெட்டமால் மாத்திரை (Antiseptic liquid):பொதுவாக நாம் பயன்படுத்திவரும் வலி நிவாரண மாத்திரை இது. டாக்டரைச் சந்திக்க முடியாத அசாதாரணச் சூழ்நிலைகளில் ஏற்படும் காய்ச்சல், தலைவலி, கால்வலி, உடல்வலி போன்ற உடல்நலக் குறைவுகளுக்கு நிவாரணம் அளிக்க பாராசெட்டமால் மாத்திரைகள் தேவைப்படும். இது தற்காலிக நிவாரணிதான். நோயின் தன்மையைப் பொருத்து டாக்டரை சந்தித்து சிகிச்சை எடுத்துக்கொள்வது அவசியம்.
 க்ரிப் பாண்டேஜ் (Crepe bandage) வீக்கத்தைக் கட்டுப்படுத்த அல்லது குணப்படுத்தப் பயன்படும். காயம்பட்டு வீக்கம் ஏற்பட்டால், அந்த வீக்கத்தைக் கட்டுப்படுத்த அல்லது வீக்கத்தைக் குணப்படுத்த, இந்த க்ரிப் பேண்டேஜ் (Crepe bandage)  உதவும். காயம்பட்ட இடத்தைச் சுத்தம் செய்து, மருந்து போட்டவுடன் கட்டுப் போடவும் பயன்படும்.
 தெர்மாமீட்டர் (Clnical thermometer)  - காய்ச்சலின்போது உடலின் வெப்பநிலையைக் கண்டறியப் பயன்படும். கண்ணாடியினால் செய்யப்பட்ட தெர்மாமீட்டரைக் குழந்தைகள் கடித்துவிட வாய்ப்பு அதிகம். அதனால், விலை கொஞ்சம் அதிகமாக இருந்தாலும் எலக்ட்ரானிக் தெர்மாமீட்டர் வாங்குவதே சிறந்தது.
 அடிசிவ் டேப்(Adesive tape) - காயம்பட்ட இடத்தில், கட்டுப் போட முடியாதபட்சத்தில், இந்த டேப் பயன்படும். பேப்பர் பிளாஸ்டர் என்றும் இதைச் சொல்வார்கள்.
 பருத்தி பஞ்சு (Cotton wool) - காயம்பட்ட இடத்தைப் பஞ்சின் மூலம் சுத்தம் செய்வதே சிறந்தது. காயம்பட்ட இடத்தில் இருக்கும் மண், தூசிகள் படிவதைத் தவிர்ப்பது எவ்வளவு அவசியமோ அதேபோல், வேறு ஏதேனும் துணிகள் மூலம் சுத்தப்படுத்துவதைத் தவிர்ப்பதும் அவசியம். எனவே, சுகாதாரம் நிறைந்த சுத்தமான பஞ்சினால் மட்டுமே காயத்தை சுத்தம் செய்யவேண்டும். 'அப்சார்பென்ட் காட்டன் உல்’ (Absorbent cotton wool) ரத்தத்தையோ, மருந்தையோ உறிஞ்சும் தன்மை கொண்ட சுத்தமான பஞ்சு.
 ஆஸ்பிரின் மாத்திரை (Aspirin Tablet)  தலைவலி மற்றும் இதர உடல் வலிகளுக்கான நிவாரணியாகச் செயல்படுவதோடு, ரத்தம் உறைதலைத் தவிர்த்து ரத்த ஓட்டத்தைச் சீராக்கும் தன்மை கொண்டது ஆஸ்பிரின். இதயத்தின் ரத்த ஓட்டம் பாதிக்கும்பட்சத்தில் மாரடைப்பு ஏற்படக்கூடும் என்பதால், அந்த நிமிடத்தில் ஆஸ்பிரின் சிறந்த முதல் உதவியாகப் பயன்படும். ஆனால், மருத்துவரின் ஆலோசனையோடு எடுத்துக் கொள்வதே நல்லது. நெஞ்சு எரிச்சல் ஏற்படுவதைத் தவறுதலாக, நெஞ்சு வலி என நினைத்து ஆஸ்பிரின் எடுத்துக்கொள்வது பக்க விளைவுகளை உண்டாக்கும். குறிப்பாக சர்க்கரை நோயாளிகள், பக்கவாதம், ரத்த அழுத்தம், மாரடைப்பு, ரத்தம் உறைவதில் பிரச்னை உள்ளவர்கள் மருத்துவர்கள் ஆலோசனை இல்லாமல் ஆஸ்பிரினைப் பயன்படுத்தக் கூடாது.
 ஆன்டிபயாட்டிக் க்ரீம் (Antibiotic cream)- காயங்களைக் குணப்படுத்த முதல் உதவியாக இந்த க்ரீமைப் பயன்படுத்தலாம்.
 ஆன்டி-இன்ஃபிளமேட்டரி மருந்து (Anti - inflammatory ointment)    - உடல்வலி, முதுகுவலி, சுளுக்கு போன்றவற்றுக்கு நிவாரணமாகப் பயன்படும் ஆயின்ட்மென்ட். இவை அடிக்கடி வரும் உடல் உபாதைகள் என்பதால், வீட்டில் இருப்பது நல்லது.
 கத்தரிக்கோல் - கட்டுப் போட வேண்டிய பஞ்சு, பேண்டேஜ் போன்றவைகளை வெட்டியெடுக்க பிரத்யேகமாக, சுகாதாரமாக ஒரு கத்தரிக்கோல் இருப்பது நல்லது.


No comments:

Post a Comment

ஆன்லைன் வயது கால்குலேட்டர்


Udanz