Sunday 10 March 2013

எளிய தமிழில் HTML கற்றுக்கொள்ள - BGSOUND Tag(குறிஒட்டு)

 
வணக்கம் நண்பர்களே..!!

கடந்த எளிய தமிழில் HTML கற்றுக்கொள்ள தொடர் பதிவில்
Image குறி ஒட்டில் align, border மற்றும் HIGHT AND WIDTH பண்புகள் - எளிய தமிழில் HTML கற்க என்ற பதிவைப் பார்த்தோம். இதில் IMG Tag-ல் பயன்படுத்தும் பண்புகளைப் பற்றிப் பார்த்தோம். தவறவிட்டவர் இந்த இணைப்பைச் சொடுக்கி படித்துக்கொள்ளுங்கள்.

இனி இப்பதிவில் <BGSOUND>என்னும் குறிஒட்டைப் பற்றிப் பார்க்க இருக்கிறோம். இந்த குறிஒட்டானது வலைப்பக்கத்தில் ஒலியைச் சேர்க்கப் பயன்படுகிறது. ஒலிக்கோப்புகள் கணிப்பொறியில் பல வடிவங்களில் சேமித்து வைக்கப்படுகின்றன. இவற்றில் வேவ்(wav) வகை, Audio வகை மற்றும் MID வகை பரவலாகப் பயன்படுத்தப்படும் ஒலிக்கோப்புகளாகும்.

இந்தக் கோப்புகளின் பெயர் முறையே .wav, . au, .mid என்ற விரிவுகளைக்(Extension) கொண்டு முடியும். வலைபக்கத்தில் நம் கணிப்பொறியில் இருக்கும் ஒலிக் கோப்புகளைப் பயன்படுத்துவது மட்டுமல்லாமல் நுண்பேசியைக் கொண்டு நாமே தயாரிக்கும் ஒலிக்கோப்புகளையும் பயன்படுத்தலாம்.

<BGSOUND> குறிஒட்டில் SRC, LOOP போன்ற பண்புகளைப் பயன்படுத்தலாம்.

முதலில் இவற்றிற்கான விளக்கங்களைப் பார்ப்போம்.

SRC பண்பு

SRC பண்பு ஒலிக்கோப்பினை வரையறை செய்யப் பயன்படுகிறது. <BGSOUND> குறி ஒட்டில் SRC என்னும் பண்பின் மதிப்பாக ஒலிக்கோப்பின் பெயரைக் கொடுக்க வேண்டும். ஒலிக்கோப்பு வேறொரு கோப்புறையில் இருந்தால் அதன் முழு வழியையும் கொடுக்க வேண்டும்.

இதன் பொதுவடிவம் இவ்வாறு இருக்கும்.
<BGSOUND SRC="file name with path" LOOP="the number of times of the file should be played"></BGSOUND>

LOOP பண்பு

LOOP என்னும் பண்பு, ஒலிக் கோப்பு எத்தனை முறை ஒலிக்க வேண்டும் என்பதைக் கொடுக்கப் பயன்படுகிறது. LOOP என்னும் பண்பிற்கு "infinite" என்னும் மதிப்பைக் கொடுத்தால் ஒலிக் கோப்பானது முடிவில்லாமல் ஒலித்துக்கொண்டே இருக்கும். இதை நிறுத்துவதற்கு விசைப்பலகையில் Esc பொத்தானை அழுத்த வேண்டும்.

உதாரண நிரல்வரிகளை கீழேக் காண்போம்.

<HTML>
<HEAD>
<TITLE>Inserting Sound</TITLE>
</HEAD>
<BODY>
<H3>Hear Music</H3>
<BGSOUND SRC="E:\music.wav" LOOP="2"></BGSOUND>
</BODY>
</HTML>

மேற்கண்ட நிரல்வரிகளில் சிவப்பு நிறத்திலுள்ளவற்றிற்கு பதில் உங்கள் கணினியிலுள்ள ஒலிக்கோப்பின் File Path கொடுக்கவும்.

இந்த நிரல்வரிகளை நோட்பேடில் எழுதி .htm அல்லது .html என்ற விரிவுடன் சேமித்து, உங்கள் இணைய உலவியில் கோப்பைத் திறந்து சோதித்துப் பாருங்கள். நீங்கள் BGSOUND SRC சேர்த்த ஒலிக்கோப்பானது உங்கள் வலைப்பக்கத்தின்(Webpage) பின்னணியில் ஒலித்துக்கொண்டிருக்கும். பதிவில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் தெரிவிக்கவும்.

முற்றிலும் (கணினி மற்றும் இணையத்திற்கு) புதியவர்களுக்குப் பயன்படும் நோக்கில் இத்தொடர் வெளிவந்துக்கொண்டிருக்கிறது. உங்கள் நண்பர்களுக்கும் இத்தொடரைப் பற்றியும், தளத்தையும் அறிமுகம் செய்யுங்கள். அவர்களுக்கும் பயனுள்ளதாக அமையட்டும். நன்றி நண்பர்களே...!!!

பதிவு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள். நன்றி நண்பர்களே..!!
புதிய பதிவுகளை இலவசமாக மின்னஞ்சலில் பெற..!

No comments:

Post a Comment

ஆன்லைன் வயது கால்குலேட்டர்


Udanz