http://anbhudanchellam.blogspot.com/2011/08/20-adsense-keywords.html
Google Adsense சேவை மூலம் இணையத்தில் பலரும் சம்பாதித்து வருகின்றனர். விளம்பரதாரர்கள் கூகிளின் Adwords சேவை மூலம் விளம்பரங்களை கூகிளிடம் கொடுக்கிறார்கள். அதனிடமிருந்து வலைத்தளம் வைத்திருப்பவர்கள் விளம்பரங்களை தமது வலைப்பக்கங்களில்
இட்டு அதன் மூலம் சம்பாதிக்கிறார்கள் என்பது தெரிந்தவை. இதில் நன்றாக சம்பாதிக்க பொருத்தமான குறிச்சொற்களுடன் (Keywords) கட்டுரைகள் இருக்க வேண்டும். குறிச்சொற்கள் என்றால் வித்தியாசமாக நினைக்க வேண்டாம். அதாவது முக்கியமான சொற்களே குறிச்சொற்கள் எனப்படும். முக்கிய சொற்களை கட்டுரையில் தேவையான அளவில் பயன்படுத்தல் வேண்டும். அதுவும் கூகிள் எதிர்பார்க்கிற சொற்கள் இருப்பின் வருமானம் அதிகளவில் வரும்.
கூகிள் நிறுவனம் தனது வருமானத்தில் 97 சதவீதம் ஆட்சென்ஸ் மூலமாகவே ஈட்டுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. விளம்பரங்களில் ஒருவகையானது CPC Ads (Cost per Click). இந்த முறையில் ஒரு விளம்பரத்தை ஒரு தடவை கிளிக் செய்தால் இவ்வளவு காசு எனக் கணக்கிடப்படும். இதில் தான் வருமானம் அதிகளவில் வரக்கூடும். மற்றொரு முறையானது CPM Ads (Cost per Impressions) இதில் அந்த விளம்பரம் எத்தனை முறை பார்க்கப்பட்டிருக்கிறது என்பதற்கு ஏற்ப பணம் நிர்ணயிக்கப்படும். ஆட்சென்சில் பொதுவாக 1000 முறைக்கு இவ்வளவு காசு என வழங்கப்படுகிறது. இதன் மூலம் கிடைக்கிற வருவாய் குறைவாகவே இருக்கும்.
மேலெ சொன்ன CPC விளம்பரங்கள் மூலம் நன்றாக வருவாய் வரவேண்டுமெனில் முக்கிய குறிச்சொற்கள் நமது கட்டுரைகளில் தேவையான அளவில் பயன்படுத்தியிருக்க வேண்டும். அதுக்காக இந்த குறிச்சொற்களை அதிகமாக போட்டோ அல்லது இந்த குறிச்சொற்களை மட்டுமே மனதில் நினைத்து கட்டுரைகளை எழுதக்கூடாது. WordStream என்ற நிறுவனம் நீண்ட நாட்கள் ஆராய்ந்து கூகிள் ஆட்சென்சில் அதிக பணம் தரும் குறிச்சொற்கள் எவையெவை எனப் பட்டியல் தயாரித்துள்ளது. இந்த குறிச்சொற்களை மையமாக வைத்து வலைப்பூவை நடத்தி வந்தால் உங்களுக்கும் வருமானம் அதிகளவில் வரும். வலைத்தளம் கண்டிப்பாக ஆங்கிலத்தில் இருப்பது அவசியம்.

No comments:
Post a Comment