பூமியும் கண்டங்களும்
சூரிய மண்டலத்தில் ஐந்தாவது பெரிய கோள் பூமி. இது சுமார் 450 கோடி ஆண்டுகளுக்கு முன்னால் தோன்றியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இந்த பூமி துவக்கத்தில் சூரிய மண்டலத்திலிருந்து ஒரு உருகிய தீக்கோளமாக இருந்தது. அதைச் சுற்றிலும் கரியமில வாயுவும், அண்ட வெளியிலிருந்த பல்வேறு வாயுக்களும் சேர்ந்த காற்றுமண்டலம் இருந்தது. அப்போது உருகிய பாறைகள் வழிந்தோடிய பூமியின் மேற்பரப்பு விண்கற்களால் தொடர்ந்து தாக்குதலுக்கு இலக்காகி வந்தது.
தொடர்புடைய காணொளி
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=QDqskltCixA
பூமியை விட்டு வெளியேறிய நீராவியும், பிற வாயுக்குகளும் கரிய மேகங்களாகக் கவிய, சூரிய ஒளியற்ற பூமியின் மேற்பரப்பு மெதுவாகக் குளிர்ச்சி அடைந்தது.
மேகக் கூட்டங்கள் இடைவிடாமல் மழையாகப் பெய்தன. உருகிய பாறைகள் கொண்ட சூடான பூமியின் மேற்பரப்பில் விழுந்த மழை நீர், மீண்டும் நீராவியாக மாறி, மேகக்கூட்டங்களாகச் சென்று மறுபடியும் பெருமழையாக இடைவிடாது பெய்ய, பூமி குளிர்ந்தது. நீர் நிலைகள் பெருகின. பின்னர் சூரியன் காற்று, நீர் போன்றவற்றாலும் நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு, கண்டங்களின் பெயர்ச்சி, மடிப்புமலைகள் உருவாதல் போன்றவற்றாலும் இன்றைய பூமியின் பரப்பு மலைகள், மடுக்கள், குளங்கள், குட்டைகளை, ஓடைகள், ஆறுகள், பரந்த கடல்கள், பணிப்பரப்புகள், பாலைவனங்கள் என உருமாறியது. இது பூமியின் சுருக்க வரலாறு...
No comments:
Post a Comment