Saturday 13 April 2013

ஆங்கில இணையதளங்களை தமிழிலும் படிக்கலாம்....

இணையதளத்தில் ஆங்கிலத்தில் இருக்கும் முக்கிய தகவல்கள் படித்தும் புரியவில்லை, எங்கே சென்று யாரிடம் கேட்பது என்று இனி கவலை வேண்டாம்.ஆம் இனி ஆங்கில மொழியில் உள்ள இணையதளங்களை தமிழில் மொழி பெயர்த்து படிக்கலாம்.ஒரு கிளிக்ல் குறிப்பிட்ட இணையதளத்தில் உள்ள அனைத்து பக்கங்களையும் தமிழில் மொழி பெயர்க்கலாம்.தமிழ் மட்டும் இல்லாமல் 62 மொழிகளில் மொழி பெயர்க்கலாம்.இதில் ஹிந்தி,தெலுங்கு,மலையாளம் போன்ற இந்திய மொழிகளும் அடங்கும்.இந்த வசதியை நமக்கு கூகுள் டிரான்சிலேட்(google Translate) தருகிறது.http://translate.google.com/translate_tools?hl=en என்ற இணையதள முகவரிக்கு சென்றவுடன் கீழ்ப்பகுதியில் வெப்சைட் டிரான்சிலேட் என்பதை கிளிக் செய்யவும்.அதன் பிறகு திரை ஒன்று தோன்றும்,அதில் முதலில் சொந்தமாக பிளாக்கர்(Blogger) நடத்துபவர்கள் எவ்வாறு இதை பயன்படுத்தலாம் என்ற தகவல் கொடுக்கப்பட்டிருக்கும்.பக்கத்தின் கடைசியில் கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் காண்பிக்கப்பட்டுள்ளது போல 62 மொழிகள் காணப்படும். 



அதில் நமக்கு தேவையான மொழியின் மீது கர்சரை வைத்து கிளிக் செய்தபடியே இழுத்து சென்று பிரவுசரின் மீது பொருத்திக் கொள்ளவும்.பிறகு ஏதேனும் ஒரு இணையதளத்திற்கு செல்லவும்.உதாரணமாக http://yahoo.com சென்றவுடன் பிரவுசரில் மீது வைத்துள்ள மொழியினை கிளிக் செய்யவும்.பிறகு நீங்கள் தேர்ந்தெடுத்த மொழியில் படிக்கலாம்.இந்த சேவை இன்னும் முழுமையடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

ஆன்லைன் வயது கால்குலேட்டர்


Udanz