Friday 12 April 2013

இனி நீங்களும் கை நிறைய சம்பாதிக்கப் போகிறீர்கள்.! --வேலை வாய்ப்புகள்

மாங்கு மாங்கென்று எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்து, கணவர், குழந்தைகள் எல்லோரையும் பார்த்துப் பார்த்துக் கவனித்துக் கொண்டாலும், வேலைக்குப் போகும் பெண்களைப் பார்த்தால், குடும்பத் தலைவி களின் மனதில் சின்னதாய் ஒரு ஆதங்கம் இருக்கத்தான் செய்கிறது, அவர்களைப் போல் குடும்பத்திற்காக நாமும் சம்பா திக்க முடியவில்லையே என்று.

கவலையை விடுங்கள். இனி நீங்களும் கை நிறைய சம்பாதிக்கப் போகிறீர்கள். என்ன நம்ப முடியவில்லையா? உங்களை மாதிரியே குடும்பம், குழந்தைகள் என்றிருந்த குடும்பத் தலைவியான கவிதா வீராசாமி இன்று கை நிறைய சம்பாதித்துக் கொண்டிருக்கிறார். உங்களுக்கும் அந்த வித்தையை இதோ கற்றுத் தருகிறார்.

எல்லோர் மாதிரியும் சாதாரணமாகத்தான் என்னுடைய வாழ்க்கையும் இருந்தது. நான் கல்யாணத்துக்கு முன்னால் ‘டிப்ளமோ இன் கம்ப்யூட்டர் சயின்ஸ்’ படித்திருந்தேன் ஆனால் வேலைக்குப் போகவில்லை. திருமணம் முடிந்து குழந்தைகள் பிறந்து அவர்கள் சற்றுப் பெரியவர்களானதும்தான் பொருளாதார ரீதியாக நம் குடும்பத்திற்கு நாமும் சில உதவிகள் செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டேன். என் கணவர் டிஃபென்ஸ் துறையில் பணி புரிகிறார். எங்கள் வீட்டில் கம்ப்யூட்டரும், இன்டர்நெட் கனெக்ஷனும் இருக்கிறது. இதை வைத்துக் கொண்டு ஏதாவது செய்யலாமே என்று யோசித்தேன். என் யோசனைக்கு என் கணவரும் உறுதுணையாய் இருந்தார். வீட்டிலிருந்தபடியே கம்ப்யூட்டர் மூலம் சம்பாதிக்க ஏற்கெனவே மெடிக்கல் டிரான்ஸ்க்ருப்ஷன், டைப்பிங் ஜாப் போன்ற பல வழிகள் இருக்கின்றன. ஆனால் அதை விட சுலபமாக நிறைய வருமானம் தரும் விஷயத்தைக் கண்டு பிடிப்பதில்தான் என் ஆர்வம் இருந்தது.

என் ஆர்வத்திற்குத் தீனி போடும் விதத்தில் அமைந்தது தான்  (ஆட்ஸென்ஸ் ப்ரோகிராம்)

 
ஆட்ஸென்ஸ் ப்ரோகிராம் என்றவுடன் என்னவோ ஏதோ என்று பயப்பட்டு விடாதீர்கள்.

கூகிள், யாஹ§ போன்ற பெரிய பெரிய வெப்ஸைட் நிறுவனங்கள் ‘ஆட்ஸென்ஸ்’ எனப்படும் ‘வெப்சைட் ப்ரோக்ராம்’ மூலம்தான் எந்த ஒரு நிறுவனத்தின் பொருளையும் விளம்பரப்படுத்துகிறார்கள். இதன் மூலம் விளம்பரம் கொடுக்கும் நிறுவனங்கள் அதிக அளவில் சம்பாதிக்கிறது. எல்லாம் சரி... இதனால் மற்றவர்களுக்கென்ன லாபம் என்கிறீர்களா? இந்த விளம்பரங்களைக் காண்பிக்கும் தனி நபர் வெப்ஸைட் உரிமையாளரும் இதனால் கணிசமான வருவாய் ஈட்ட முடியும். அதனால் நாமும் ஒரு வெப்ஸைட் உரிமையாளராகி விட்டால், போதும், சம்பாதிக்க ஆரம்பித்து விடலாம்.

‘‘எங்கள் வீட்டில் கம்ப்யூட்டரும் இருக்கிறது இன்டர்நெட் கனெக்ஷனும் கொடுத்திருக்கிறோம். ஆனால் ஒரு வெப்சைட்டிற்கு உரிமையாளராக மாறுவது எப்படி?’’ என்று கேட்கிறீர்களா?

சிம்பிள்... நீங்கள் உங்களுக்கென்று ஒரு வெப்சைட்டைக் கிரியேட் பண்ணிக் கொள்ள வேண்டும். எந்தத் தலைப்பிலும், எந்தப் பெயரில் வேண்டுமானாலும் நீங்கள் வெப்சைட்டை உருவாக்கலாம். இலவசமாக வெப்சைட்டை உருவாக்கிக் கொள்ள இன்டர்நெட்டில் நிறைய வசதிகள் இருக்கின்றன. ஒரு வெப்சைட்டை உருவாக்க அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை மட்டுமே தேவைப்படும். மிகவும் நேர்த்தியாக பல வண்ணங்களில், அமைப்புகளில், தோற்றங்களில் உருவாக்கலாம். வெப்சைட்டை உருவாக்குவது என்பது ஆரம்ப காலங்களிலெல்லாம் ஒரு வெப் டிஸைனர் மூலம்தான் செய்யப்பட்டு வந்தது. ஆனால் தற்பொழுதோ, ரெடிமேட் வெப் டூல்ஸ் மூலம் மிக எளிதாக வெப் சைட்டை உருவாக்கி விடலாம்.

கணக்கிடமுடியாத எண்ணிக்கையில் விதவிதமான தலைப்புகளில் எண்ணற்ற வெப்ஸைட்டுகள் தினம் தினம் உருவாக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. அதையும் லட்சகணக்கான பேர் பார்வையிட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள் பிஸினஸில் நீங்கள் ஜெயிக்க மிகவும் தேவை...

இந்த பிஸினஸ் செய்வதற்குத் தேவையான விஷயங்கள்

 அடிப்படை ஆங்கில அறிவு அவசியம். : பன்னிரண்டாம் வகுப்பு படித்திருந்தால் போதும்.

 வீட்டில் பர்சனல் கம்ப்யூட்டர் இருப்பது நல்லது ( எதுவாகயிருந்தால் பரவாயில்லை.)

 இன்டர்நெட் கனெக்ஷன் வேண்டும். ஹோம் பிளான் இன்டர்னெட் கனெக்ஷன் கொடுத்தால் மாதம் 250 தான் செலவாகும்.

No comments:

Post a Comment

ஆன்லைன் வயது கால்குலேட்டர்


Udanz