Tuesday 19 March 2013

ஒவ்வொரு பதிவிற்கும் தனித்தனி META TAG


தேடுபொறி ரகசியங்கள் பற்றிய பதிவில் Meta Tag பற்றி சொல்லியிருந்தேன். Meta Tag என்பது தேடல்பொறி உகப்பாக்கத்தில் (Search Engine Optimization) முக்கிய பங்கு வகிக்கிறது. நம்முடைய தளத்தில் Meta Tags சேர்ப்பது பற்றி வாசகர்களை அதிகரிக்க Meta Tags என்ற பதிவில் பார்த்தோம்.

இரண்டு நாட்களுக்கு முன் கூகிள் வெப்மாஸ்டர் சென்று ப்ளாக்கர் நண்பன் பற்றி பார்வையிட்ட பொழுது, Duplicate Meta Descriptions- 72 என்று காட்டியது. அதற்கான காரணத்தை இணையத்தில் தேடிய பொழுது விடை கிடைத்தது. நாம் சேர்த்த Meta Tag-ல் Description பகுதியில் உள்ளதை அனைத்து பதிவிற்கும் எடுத்துக் கொண்டதால், Duplicate Meta Descriptions என்று காட்டியது. அதனை சரி செய்ய நம்முடைய ஒவ்வொரு பதிவிற்கும் பிரத்யேக Meta Tag சேர்ப்பது தான் வழியாகும்.



அதற்கு  முன் ப்ளாக்கின் தலைப்பை மாற்றிவிட்டீர்களா? என்ற பதிவிற்கு சென்று, அங்கு சொல்லியுள்ள மாற்றத்தை செய்யவும். அதன் பின் பின்வரும் மாற்றத்தை செய்யவும்.

தனித்தனி Meta Tag சேர்க்க:

1. முதலில் Blogger Dashboard => Template => Backup/Restore Template என்ற பகுதிக்கு சென்று, Download Full Template என்பதை க்ளிக் செய்து உங்கள் டெம்ப்ளேட்டை பேக்கப் எடுத்துக் கொள்ளுங்கள்.


2. பிறகு அதே பக்கத்தில் Edit Html பகுதிக்கு சென்று, அங்கு
<title><data:blog.pageName/> | <data:blog.title/></title>
என்ற Code-ஐ தேடி அதற்கு பின்னால் பின்வரும் Code-ஐ சேர்க்கவும்.
<meta expr:content='data:blog.pageName' name='description'/>


3. பிறகு Save Template என்பதை க்ளிக் செய்யவும்.

இவ்வாறு செய்வதன் மூலம், நம்முடைய பதிவின் தலைப்பையே அந்த பதிவிற்கான Meta Description ஆக காட்டும். இதன் மூலம் Duplicate Meta Descriptions என்பதை தவிர்க்கலாம்.

No comments:

Post a Comment

ஆன்லைன் வயது கால்குலேட்டர்


Udanz