Sunday 10 March 2013

சும்மா 'கிர்ர்ர்ர்ர்ர்ர்ன்னு' தண்ணி குடிங்க..! (Benefits of Drinking Water)

 
 
Benefits of Drinking Water

எப்போதெல்லாம் நமது உடம்பு கூடுதல் தண்ணீருக்காக ஏக்கம் கொள்கிறதோ, அப்போதே நமக்கு தாகம் ஏற்பட்டு விட்டது என்றே பலரும் இன்று வரை நம்பிக் கொண்டுள்ளனர். அது உண்மைதான்.

ஆனாலும், உடம்பில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்ட தென்பதை அறிந்து கொள்ளும் பொருட்டு, உடம்பின் ஒரு சில அல்லது அனைத்துப் பாகங்களிலிருந்தும், பல்வேறு அறிவிப்புகள் மற்றும் அறிகுறிகளை நாம் காணலாம்.

இந்த அறிகுறிகளை அறிவிப்புகளை நாம் கண்டு கொள்ளாமல் வெறுமனே இருந்துவிட்டால் அதுவே பலவிதப் பெரும் வியாதிகளை (Major Diseases) வரவழைத்துவிடும். இதற்கென மருந்துகள் இருந்தாலும் அவையெல்லாம் குணப்படுத்துமேயன்றி சிகிச்சை அளிக்கவியலாது.

Benefits of Drinking Water

எல்லோருக்குமே நன்றாகத் தெரியும். நிறைய தண்ணீர் குடித்தால் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதென்று. இதற்கு என்ன காரணம்-? போதுமான அளவில் உடம்புக்கு நீர் கிடைக்காவிட்டால் அங்கே என்ன நிகழும் என்ற விவரம் பெரும்பாலானவர்களுக்கு தெரியாது.

உடல்நிலையில் ஏற்படும் பல்வேறு கோளாறுகளை தடுத்து நிறுத்தும் பணியில் பெரும்பங்கை தண்ணீரே ஏற்றுக் கொண்டுள்ளது. இதனால் பெரும் வியாதிகள் தொடக்கத்திலே அடக்கப்படுகின்றன. தவிர, பல்வேறு இயற்கையான நிவாரண யுக்திகளில், தண்ணீர்தான் பெரும்பங்கை ஏற்றுள்ளது.

தண்ணீர் அதிக அளவு குடிப்பதால் சிறுநீரக பாதிப்பு (Kidney damage) தவிர்க்கப்படுகிறது.

உடலின் மொத்த எடையில் தண்ணீரின் பங்கு மட்டுமே எழுபது சதவிகிதமாகும். உடலின் அனைத்துப் பாகங்களிலும் அது வியாபித்திருந்தாலும், மூளை மற்றும் நுரையீரல்(Lung) போன்ற உறுப்புகளிலும், இரத்தம், உமிழ்நீர்(Saliva), நிணநீர்(Lymph) போன்ற திரவங்களிலும், ஜீரண முறையில் உள்ள உறுப்புகளின் சுரப்பிகளிலும் அதிகப்படியாகவே அடங்கியுள்ளது.

Benefits of Drinking Water

பிரிட்டன் தேசிய நலவாழ்வு சேவை (The UK National Health Service) ஆலோசனைப்படியும் ஊட்டச்சத்து நிபுணர்கள் மருத்துவர்கள் அறிவுரைப்படியும் தினமும் 1-2 லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. எனவே குறைந்த பட்சம் ஒரு நாளைக்கு 2 லிட்டர் அளவுக்கு குறைவாக தண்ணீர் அருந்த வேண்டும்.

மாணவர்களுக்கு:

தேர்வு எழுதும் மாணவர்கள் தண்ணீர் ஒரு டம்பளர் தண்ணீர் குடித்துவிட்டு தேர்வு எழுதுவது நல்லது. தண்ணீர் குடிக்காமல் எழுதியவர்களையும் விட தண்ணீர் குடித்து எழுதியவர்களின் மதிப்பெண்கள் கூடுதலாக இருந்ததாக பிரித்தானியாவின் வெஸ்ட்மினிஸ்டர் பலகலைக்கழக ஆய்வாளர்கள்(Britain's Westminster University researchers) மாணவர்கள் மத்தியில் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. தேர்வுக்கு முன்னர் தண்ணீர் குடித்த மாணவர்களின் புள்ளி முடிவுகளையும் தண்ணீர் குடிக்காத மாணவர்களின் புள்ளி முடிவுகளையும் ஒப்பிட்டுப் பார்த்து தான் குறித்த முடிவுக்கு வந்துள்ளனர்.

உடலில் தண்ணீர் அளவு சீராக இருந்தால் மூளை செல்களுக்கு இடையில் தகவல் வேகமாகப் பரவும். இதனால் பதட்டமின்றி, தேர்வறையில் படித்ததை நினைவில் கொண்டுவந்து எழுதுவது சாத்தியப்படுகிறது.

நிறைய தண்ணீர் குடிப்பவர்களின் உடலில் தேவையில்லாத கொழுப்பு சேர்வது குறையும். மாறாக குறைவாக தண்ணீர் குடித்தால் அதிக கொழுப்பு தேங்கி உடல் எடை அதிகரிக்கும்.

போதுமான தண்ணீர் உடலில் இல்லை என்றால் சீராக சிறுநீரகம் (கிட்னி) செயல்படாது. சிறுநீரகம் சரியாக செயல்பவில்லை என்றால் கல்லீரலின் செயல்பாட்டிலும் பிரச்சினை உண்டாகும்.

நாம் உண்ணும் உணவில் இருந்து உடல் இயக்கத்திற்குத் தேவையான புரதத்தை சேமிப்பதே கல்லீரலின் முக்கிய பணி. ஆனால், சிறுநீரக இயக்க குறைபாட்டால் கல்லீரலின் செயல்பாடும் பாதித்து தேவையற்ற கொழுப்பு உடலில் சேர்ந்து உடல் எடை அதிகரிக்கும்.

மலச்சிக்கல் ஏற்படுவதை தடுக்க, உடலில் உப்பு சேர்வதை குறைக்க, , அதிக தண்ணீர் குடிக்க வேண்டும். இதனால், உடலுக்கு தேவையான புரதத்துடன் தண்ணீர் சேரும்போது அதில் உள்ள கழிவுகள் வெளியேறும். இதன் பயனாக தேவையற்ற கொழுப்பு குறைந்து உடல் அழகான ஒல்லியான தோற்றத்தை பெறும்.

எனவே தாகம் எடுக்கும்போதெல்லாம் போதிய தண்ணீரைக்குடிக்க வேண்டும். தாகமெடுக்கும்போது தவறாமல் தேவையான அளவு தண்ணீர் குடித்தாலே போதுமானது. உடல் என்றும் ஆரோக்கியத்துடன் இருக்கும்.

No comments:

Post a Comment

ஆன்லைன் வயது கால்குலேட்டர்


Udanz