கடந்த பதிவில்
சொன்னது போல், நம்முடைய வலைப்பதிவை எத்தனை பேர் பார்க்கிறார்கள்?
எங்கிருந்தெல்லாம் வந்திருக்கிறார்கள்? எந்த பதிவை அதிகம்
படித்திருக்கிறார்கள்? போன்றவற்றை தெரிந்துக் கொள்ள பயன்படுவது Stats
Counter. அந்த வசதியை பல தளங்கள் தந்தாலும் அவற்றில் முக்கியமானது கூகிளின்
Analytics.
1. முதலில் Google.com/analytics சென்று உங்கள் கூகிள் கணக்கு மூலம் உள்நுழையவும்.
2. Sign Up என்ற பட்டனை க்ளிக் செய்யவும்.
4. உங்கள் முதல் மற்றும் கடைசி பெயர், நாடு ஆகிய தகவல்களை கொடுத்து Continue பட்டனை அழுத்தவும்.
5. Terms of service பக்கத்தின் கீழே உள்ள Check Box-ஐ க்ளிக் செய்து, Create New Account பட்டனை க்ளிக் செய்யவும்.
6. உங்கள்
தளத்திற்கான பிரத்யேகமான Code-ஐ அது கொடுக்கும். அதனை Copy செய்து
கொள்ளுங்கள். பிறகு Save and Finish என்ற பட்டனை அழுத்தி Save செய்யவும்.
7. பிறகு Blogger தளத்தில் Blogger Dashboard=>Design=>Edit Html செல்லவும்.
Download Full Template
என்பதை கிளிக் செய்து ஒரு காப்பி எடுத்து வைத்து கொள்ளுங்கள். நாம்
டெம்ப்ளேட்டில் மாற்றம் செய்யும் போது தவறு ஏதாவது ஏற்பட்டால் மீண்டும் அதை
Upload செய்து கொள்ளலாம்.
8. பிறகு Cntrl+F அழுத்தி
என்பதை தேடவும். தேடிய பின் அதற்கு மேலே ஏற்கனவே Copy செய்து வைத்திருந்த Code-ஐ Paste செய்யவும்.
</head>
பிறகு Save Template என்பதை க்ளிக் செய்யவும்.
9. பிறகு மீண்டும் google.com/analytics தளத்திற்கு செல்லவும்.
அங்கு உங்கள் தளத்தின் தகவல்களின் வலதுபுறம் உள்ள Edit என்ற பட்டனை அழுத்தவும்.
10. பிறகு Check Status என்பதை க்ளிக் செய்யவும்.
11. பிறகு Save and Finish என்ற பட்டனை அழுத்தவும்.
அவ்வளவு தான்... இனி உங்கள் ப்ளாக்கின் நிலவரங்களை நீங்கள் google analytics மூலம் அறிந்துக் கொள்ளலாம்.
No comments:
Post a Comment