Wednesday 20 March 2013

உங்கள் வயது Youtube தளத்தில் தெரிகிறது


நமது Youtube Channel-ஐ பிரபலப்படுத்தும் வகையில் Subscribe Widget-ஐ நம் ப்ளாக்கில் வைப்பது பற்றி நேற்று பார்த்தோம் அல்லவா? இன்றும் யூட்யூப் பற்றிய பதிவு தான். யூட்யூபில் பலர் கவனிக்கத் தவறிய ஒன்று, உங்கள் வயது உங்கள் Youtube Channel-ல் தெரிகிறது. அதை மறைப்பது எப்படி? என்று பார்ப்போம்.

1. Youtube.com தளத்திற்கு சென்று உங்கள் கூகுள் கணக்கில் உள்நுழையுங்கள்.

2. இடது புற Sidebar-ல் உங்கள் ப்ரொபைல் படத்திற்கு அருகே "My Channel" என்பதை கிளிக் செய்யுங்கள்.

3. வலது புற Sidebar-ல் உங்கள் சேனலின் About பகுதி இருக்கும். அதன் பக்கத்தில் உள்ள Edit பட்டனை அழுத்துங்கள்.

4. அங்கே About பகுதியை மாற்றம் செய்யும் வசதி வரும். அதன் கீழே உங்கள் Age இருக்கும். அதன் பக்கத்தில் உள்ள Hide என்பதை கிளிக் செய்யுங்கள்.

5. பிறகு Apply என்பதை கிளிக் செய்யுங்கள்.

அவ்வளவுதான். உங்கள் வயது யூட்யூபில் தெரியாது.

இதை  எப்படி செய்வது? என்பது பற்றி நான் உருவாக்கிய வீடியோ:

Youtube தளத்தில் உங்கள் வயதை மறைப்பது எப்படி?


என்னுடைய யூட்யூப் சேனலில் விருப்பமுள்ளவர்கள் Subscribe செய்துக் கொள்ளலாம். இதற்கு கூகுள் கணக்கு இருந்தால் போதும்.

No comments:

Post a Comment

ஆன்லைன் வயது கால்குலேட்டர்


Udanz