Saturday, 16 March 2013

ரயில் பயணத்திற்கான விபரங்கள் தரும் இணையதளங்கள்

http://anbhudanchellam.blogspot.in/2011/12/indian-railway-info-website.htmlஇந்திய ரயில்வே இணைய தளமான https://www.irctc.co.in தளத்தைப் போலவே சிறப்பாக அமைந்த மற்றொரு இணைய தளம் http://www.indiarailinfo.com (இந்தியா ரயில் இன்போ டாட் காம்) ஆகும்.
http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcTRXn1ImR8mlq-mG4K3jO9Uw4dfthEASNVsOtlGG3SM4dtpLUOA இத்தளத்தில்  பிஎன்ஆர் ஸ்டேட்டஸ், பயணச் சீட்டு விபரம், இருக்கைகள், வண்டி நேரம், அத்தடத்தில் செல்லும் பிற ரயில்களின் எண், நேரம் எனப் பல்வேறு உபயோகமான விபரங்கள் கிடைக்கின்றன. இத்தளத்தை கூகுள் குரோம் பிரௌசர் வழியாக பயன்படுத்துவோருக்கு எளிமையான எக்ஸ்டென்சன் மென்பொருளையும் இத்தளம் வழங்குகிறது. இதனை குரோம் பிரௌசரில் கீழ்க்கண்ட இணைப்பு மூலம் பெறலாம்.


http://goo.gl/iTIv3 இந்த இணைப்பிலிருந்து பதிவிறக்கி நிறுவியதும் அட்ரஸ் பாருக்கு அருகில் சிறிய பல்பு போன்ற படம் காட்டப்படும். இதனைக் கிளிக் செய்தால் புறப்படும் இடம், சேரும் இடம் ஆகியவற்றைக் கொடுத்து அந்த வழியில் பயணிக்கும் ரயில் வண்டியின் விபரத்தையும், முன்பதிவு எண்ணைக் கொடுத்து (PNR Status) அதுகுறித்த விபரத்தையும் அறியமுடியும்.
இது தனியார் தளமாக இருந்தாலும் விளம்பரத் தொல்லைகள் இல்லாமல் ரயில்வே இணைய தளத்திற்கு இணையாக சிறப்பாகவே இயங்குகிறது.

No comments:

Post a Comment

ஆன்லைன் வயது கால்குலேட்டர்


Udanz