இணையத்தளம் (Website)அமைக்க என்ன செய்ய வேண்டும்? இதற்கு என்ன செலவாகும்..? இதனால் ஏதேனும் நன்மை உண்டா? இவ்வாறு வெப்சைட் தொடங்க யாரை அணுக வேண்டும்? இதற்கு உதவும் வெப்சைட் எது? அது தமிழ்நாட்டில் உள்ளதா? தமிழ்நாட்டில் உள்ள தளத்தின் மூலம் ஹோஸ்டிங் வாங்குவதால் விளையும் நன்மை என்ன? மற்றும் இந்த தளத்தின் மூலம் வெப்ஹோஸ்டிங் வாங்குவதால் உண்டாகும் நன்மைகள் மற்றும் வசதிகள் என்னென்ன? என்பதைப் பற்றியும், வெப்ஹோஸ்டிங் (webhosting)பெறுவதற்குரிய வழிமுறைகளையும் இப்பதிவில் பார்ப்போம்.
வெப்சைட் எதற்காக தொடங்கப்படுகிறது?
தங்களை பற்றி சொல்ல, தங்களுக்கு தெரிந்தவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள, செய்திகளை மக்களுக்கு கொண்டு செல்ல, நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை மக்களிடம் கொண்டு செல்ல மற்றும் பணம் சம்பாதிக்க என்று அனைத்திற்கும் இப்போது வலைத்தளங்கள் பயன்படுகின்றன. பலரும் தங்களுக்கென பலவிதமாக வெப்சைட்டுகளை அமைத்து பராமரித்து வருகின்றனர்.வலைத்தளங்களின் பயன்:
இணையத்தில் இன்று கிடைக்காததே இல்லை என்று சொல்லும் அளவுக்கு இணையம் மக்களின் மத்தியில் ஒரு அங்கமாகிவிட்டது. இணையத்திலுள்ள வலைத்தளங்களின் மூலம் நாம் தேடுகிற அனைத்தும் சில நொடிகளில் கிடைக்கிறது.
இவ்வாறு மக்கள் தங்களுக்கு வேண்டிய பொருட்களை வாங்கவும், வேண்டாத பொருட்களை விற்கவும், ஒரு செய்தியை தெரிந்து கொள்ளவும் மற்றும் பலவற்றையும் அமர்ந்த இடத்திலேயே இன்டர்நெட் மூலம் பெற்றுக்கொள்ள இணையதளங்கள் பயன்படுகின்றன.
இந்த வசதிகளை அனைத்தையும் ஏற்படுத்தித் தருபவைதான் வெப்சைட்டுகள்(Websites) என்று அழைக்கப்படும் இணையதளங்கள்.
நீங்கள் ஒரு பிசினஸ் மேனாக இருக்கலாம்.. உணவக நிறுவனராக இருக்கலாம். ஒரு தொழில்சாலையின் அதிபதியாக இருக்கலாம்.. கல்வி நிறுவனங்கள் நடத்துபவராக இருக்கலாம். கலைப்பொருட்கள் செய்பவராக இருக்கலாம்.. ஒரு சாதாரண வியாபாரியாக, சாதாரண மனிதராக இருக்கலாம்...
உங்கள் தொழில் எதுவாக இருந்தாலும், உங்கள் வியாபாரத்தைப் பெருக்க உங்களுக்கென இணையத்தளத்தை உடனே ஆரம்பியுங்கள்..கால ஓட்டத்திற்கு ஏற்ப உங்கள் வியாபாரத்தை உலகெங்கும் பரப்பி, வெற்றிக்கொடி நாட்டுங்கள்...!
கூகில்(Google) கூட அடிக்கடி இப்படியொரு விளம்பரத்தை வெளியிடும்.. தஞ்சாவூர் பெயிண்ட்டிங் தொழில் செய்து வரும் ஒரு கலைஞர்.. தன்னுடைய படைப்புகள் விற்காமல் மிகவும் சோர்வுற்றிருப்பார். அவர் ஒரு வலைத்தளம் ஆரம்பித்து, அதன்மூலம் நிறையப் பேருக்கு தஞ்சாவூர் பெயிண்டிங் பற்றிய தகவல்கள் கிடைத்து, அதை ரசித்து வாங்கிச் செல்வார்கள்.. இதனால் அந்த கலைஞர் மனதிலும் , மகிழ்ச்சி மலரும்..கைநிறைய பணத்தையும் பெற்று புன் சிரிப்பு சிரிப்பார் பாருங்கள்.. அத்தகைய மகிழ்ச்சியான சூழ்நிலையை நீங்களும் இணையதளம் ஆரம்பிப்பதால் உண்டாக்கலாம்.
இத்தகைய மகிழ்ச்சியான, வருமானம் தரக்கூடிய , திறமையை வெளிப்படுத்தக்கூடிய, உங்கள் நிறுவனத்தை உலகத்தில் உள்ள மக்களிடம் கொண்டுப் போய் சேர்க்க...நீங்களும் விளம்பரத்தில் வரும் மனிதரைப் போன்று மகிழ்ச்சியை அனுபவிக்க சொந்த இணையதளம் தொடங்கி நடத்துங்கள்.. உங்கள் வியாபாரத்தைப் பெருக்கலாம். கைநிறைய காசு பார்க்கலாம்.
நிறுவனம் மட்டுமல்ல... உங்கள் பகுதியில் கோயில்கள், வரலாற்றுச்சிறப்பு மிக்க இடங்கள்.. உங்கள் தனிப்பட்ட சொந்த தகவல்களை, ஆக்கங்களைப் பகிர இப்படி எதற்கு வேண்டுமானாலும் வலைப்பூ அல்லது வலைத்தளம் ஆரம்பிக்கலாம்.
யார் யாரெல்லாம் வெப்சைட் ஆரம்பிக்கலாம்?
இதற்கென்று ஒரு வரையறையெல்லாம் இல்லை.. யார் வேண்டுமானாலும் வெப்சைட் ஆரம்பிக்கலாம். நீங்கள் எந்த துறையைச் சார்ந்தவராக இருந்தாலும், ஏன் மளிகை கடை, பேக்கரி போன்ற லோக்கல் கடைகளுக்கு கூட இப்போது இணையதளங்களை ஆரம்பித்து நடத்துகின்றனர். உங்களுக்கென ஒரு தளம் அமைப்பதால் உங்கள் நிறுவனங்கள், கடைகள், தொழிற்கூடங்கள்,அலுவலகங்கள், நிறுவனங்கள், உற்பத்திப் பொருட்கள், பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், தோட்டம், துறவு, ஈமு பண்ணை, கோழிப்பண்ணை, இன்னும் உலகில் எத்தனை உண்டோ.. அத்தனை துறைகளையும் மேன்படுத்தி, லாபம் கொழிக்கச் செய்யலாம். இவைகளுக்குதான் வெப்சைட் ஆரம்பிக்க வேண்டும் என்ற வரையறையெல்லாம் கிடையாது. எதற்கு வேண்டுமானாலும் ஆரம்பித்து, அதை நல்ல முறையில் செயல்படுத்த முடியும்.
இணையதளம் அமைப்பதற்கும், Server Hosting வாங்குவதற்கும் என்னென்ன செய்யலாம் என கீழே நண்பர் சத்தியமூர்த்தி அவர்கள் கீழே தெரிவித்துள்ளார். அவரது எண்ண ஓட்டத்தையும் கீழே கொடுத்திருக்கிறேன். தொடர்ந்து படியுங்கள். உங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை கருத்துரையில் தெரிவியுங்கள்.. வெப்ஹோஸ்டிங் வாங்க நினைப்பவர்கள் நேரடியாக தளத்திலுள்ள Contact Form மூலம் தளத்தின் நிர்வாகியைத் தொடர்புகொள்ளலாம்.
ஏன் வெப்சைட் தொடங்க வேண்டும்?
நீங்களும் உங்களுக்கென ஒரு வெப்சைட் தொடங்கினால் உங்களைப்பற்றியும் உங்களின் தொழிலைப் பற்றியும் உலகம் முழுதும் உள்ளவர்களால் தெரிந்து கொள்ள முடியும். நிச்சயம் உங்கள் தொழில் வளர நீங்கள் உழைப்பதைப்போல் உங்கள் வேப்சைட்டும் உழைக்கும். தொழில் மட்டுமில்லைங்க உங்களின் சாதனைகள், உங்கள் ஊரில் நடந்த நிகழ்ச்சிகள் பற்றியும் உலகத்தாருக்கு தெரியப்படுத்த ஒரு கருவியாகவும் உபயோகப்படுத்தலாம். வெப்சைட்டை பற்றி இன்னும் சொல்ல வேண்டும் என்றால் இந்த பக்கம் போதாது. இன்னும் நூறு பக்கங்கள் எழுதவேண்டும். எழுதிக்கொண்டே இருக்கலாம்.
இனி வெப்சைட் எப்படி ஆரம்பிப்பது என்பதை பற்றி பார்ப்போம்
பல நிறுவனங்கள் இந்த சேவையை வழங்குகின்றன. என்னதான் பல நிறுவனங்கள் சேவை வழங்கினாலும் அந்த நிறுவனம் தமிழ்நாட்டில் இருந்தால் நன்றாக இருக்கும் அல்லவா?. ஏனென்றால் நாமெல்லாம் தமிழர்கள், நமக்கு ஏதேனும் பிரச்சினை என்னும்போதும் அல்லது ஏதாவது புரியவில்லை என்னும் போதும் ஒரு தமிழனிடம் எளிதாக புரியவைத்து விடலாம். ஆனால் ஒரு வட இந்தியனிடமோ வெளிநாட்டுக்காரனிடமோ புரியவைப்பது கஷ்டம்.
தமிழ்நாட்டில் யார் இந்த சேவையை வழங்குகிறார்கள் என்று நீங்கள் யோசிப்பது எனக்கு புரிகிறது. Thangampalani.com என்ற நமது வலைத்தளத்தின் மூலமாகவே இந்த சேவையைத் தற்போது பெற்றுத்தருகிறோம்.
1 comment:
புதிய தகவல் அருமையான பதிவு ! நன்றி !
வெப் டிசைனிங் - வெப் ஹோஸ்டிங்
Post a Comment