Tuesday, 19 March 2013

ப்ளாக்கரில் பக்கங்களை உருவாக்குவது எப்படி?


ப்ளாக்கர் தளத்தில் Static Pages எனப்படும் தனி பக்கங்களை உருவாக்குவது எப்படி? என்று பார்ப்போம். இதன் மூலம் ABOUT US, CONTACT US போன்ற பக்கங்களை உருவாக்கலாம். (இறைவன் நாடினால்) அடுத்த பதிவு Static Page எனப்படும் இந்த தனி பக்கத்தை அடிப்படையாகக் கொண்டதால், புதியவர்களுக்காக இந்த பதிவு.



பக்கங்களை உருவாக்க:


1. Blogger Dashboard => Edit Posts => Edit Pages என்பதை க்ளிக் செய்யவும்.


2. பிறகு New Pages என்பதை க்ளிக் செய்யவும்.


3.பிறகு வரும் பக்கத்தில், சாதரணமாக புதிய பதிவு எப்படி எழுதுவோமோ, அப்படி எழுதவும்.



குறிப்பு: இந்த பக்கங்களுக்கு நாம் குறிச்சொற்கள் கொடுக்க முடியாது.


4. பிறகு கீழே, Post Options என்பதை க்ளிக் செய்து, அதில் Reader Comments என்ற இடத்தில் வாசகர்கள் பின்னூட்டம் இடலாமா வேண்டாமா? என்பதனை தேர்வு செய்யவும்.

5.  பிறகு Preview பட்டனை அழுத்தி முன்னோட்டம் பார்க்கலாம், அல்லது Publish Page பட்டனை அழுத்தி Publish செய்துவிடலாம்.


6. பிறகு வரும் பக்கத்தில் நாம் உருவாக்கிய பக்கத்தை எப்படி வைக்க வேண்டும்? என்று கேட்கும். அந்த பக்கத்தை நாம் மூன்று விதமாக வைக்கலாம். 



Blog sidebar    -   Sidebar-ல் வைக்க இதனை தேர்வு செய்யவும்.
Blog tabs         -   Header-க்கும், பதிவிற்கும் இடையில் வைக்கஇதனை தேர்வு செய்யவும்.
No gadget       -  நாமாகவே சுட்டியாக (Link) வைக்க இதனை தேர்வு செய்யவும்.


7. பிறகு Save and Publish பட்டனை அழுத்தவும்.

அவ்வளவுதான். பக்கம் உருவாகிவிடும். 



அந்த பக்கத்தின் முகவரியை தெரிந்துக் கொள்ள, View Page என்பதை க்ளிக் செய்து, Address Bar-ல் உள்ள முகவரியை பார்க்கவும்.

குறிப்பு: அதிகபட்சம் நீங்கள் பத்து பக்கங்களை மட்டுமே உருவாக்க முடியும்.

No comments:

Post a Comment

ஆன்லைன் வயது கால்குலேட்டர்


Udanz