Tuesday 19 March 2013

பதிவுகளை பட்டியலிடுவது எப்படி?

நமது ப்ளாக்கில் பதிவிட்ட அனைத்து பதிவுகளையும், பிரிவு (Labels)  வாரியாக  ஒரே பக்கத்தில் பட்டியலிடுவது  Sitemap எனப்படும். அவற்றை ப்ளாக்கரில் அழகிய வடிவில் வைப்பது எப்படி? என்று பார்ப்போம்.

அவ்வாறு செய்வதற்கு நீங்கள் முதலில் பதிவிற்கு குறிச்சொற்களை (Labels) பயன்படுத்தியிருக்க வேண்டும். ஒரே பதிவிற்கு இரண்டு, மூன்று குறிச்சொற்களை பயன்படுத்தியிருந்தால், அந்த இரண்டு பிரிவுகளிலும் அந்த பதிவு வரும் என்பதனை நினைவில் கொள்ளவும்.

செய்முறை: (Updated)

1. கடந்த பதிவில் சொன்னது போல, புதிதாக ஒரு பக்கத்தை (Static Page) உருவாக்கவும்.

2. அதில் Compose mode-ற்கு பதிலாக,  Edit Html Mode-ஐ தேர்வு செய்யவும்.

3. Page Title என்ற இடத்தில் உங்களுக்கு விருப்பமான தலைப்பிட்டு, Content பகுதியில் பின்வரும் Code-ஐ பேஸ்ட் செய்யவும்.



<link href="http://abu-farhan.com/script/acctoc/acc-toc.css" media="screen" rel="stylesheet" type="text/css"></link>

<script src="http://abu-farhan.com/script/acctoc/daftarisiv2-pack.js"></script>

<script src="http://bloggernanban.blogspot.com/feeds/posts/summary?max-results=1000&alt=json-in-script&callback=loadtoc"></script>

<script type="text/javascript">

var accToc=true;

</script>

<script src="http://abu-farhan.com/script/acctoc/accordion-pack.js" type="text/javascript"></script>

***மேலுள்ள Code-ல் சிவப்பு நிறத்தில் உள்ள  http://bloggernanban.blogspot.com என்பதற்கு பதிலாக உங்கள் ப்ளாக்கின் முகவரியை கொடுக்கவும்.

4. பிறகு Publish Page என்பதை க்ளிக் செய்யவும்.

5. பிறகு வரும் பக்கத்தில் நாம் உருவாக்கிய பக்கத்தை எப்படி வைக்க வேண்டும்? என்று கேட்கும். அந்த பக்கத்தை நாம் மூன்று விதமாக வைக்கலாம்.




Blog sidebar    -   Sidebar-ல் வைக்க இதனை தேர்வு செய்யவும்.
Blog tabs         -   Header-க்கும், பதிவிற்கும் இடையில் வைக்கஇதனை தேர்வு செய்யவும்.
No gadget       -  நாமாகவே சுட்டியாக (Link) வைக்க இதனை தேர்வு செய்யவும்.


7. பிறகு Save and Publish பட்டனை அழுத்தவும்.

ப்ளாக்கர் நண்பன் தளத்தின் அனைத்து பதிவுகளையும் பார்க்க இங்கே க்ளிக் செய்யவும்.

நன்றி: http://abu-farhan.com/

No comments:

Post a Comment

ஆன்லைன் வயது கால்குலேட்டர்


Udanz