Sunday, 19 May 2013

கேள்விகளும் பதில்களும்

கேள்விகளும் பதில்களும்
கேள்வி: ஒருநாள் நான் கம்ப்யூட்டரில் பணியாற்றிக் கொண்டிருக்கையில் திடீரென ஒரு பாப் அப் விண்டோ வந்தது. அதனை அதுவரை நான் பார்த்தது இல்லை என்பதால் பக்கத்திலிருந்த என் நண்பனிடம் கேட்டேன். அவன் உடனே கம்ப்யூட்டரை ரீ பூட் செய்து கவலைப்படாதே, இதன் பெயர் புளு ஸ்கிரீன் ஆப் டெத் என்றான். இது குறித்து விளக்கம் தரவும்.

பதில்: புளு ஸ்கிரீன் ஆப் டெத் என்பது ஒருவகையான எர்ரர் மெசேஜ் எனப்படும் கம்ப்யூட்டர் இயக்க பிழை செய்தியாகும். இதனை ஸ்டாப் எர்ரர் என்றும் கூறுவார்கள். ஏதேனும் சிஸ்டம் எர்ரர் ஏற்பட்டு அதிலிருந்து எந்த வழியிலும் கம்ப்யூட்டர் மீள முடியவில்லை என்றால் இந்த புளு ஸ்கிரீன் ஆப் டெத் காட்டப்படும். விண்டோஸ் இயக்கத் தொகுப்பு 3.1 முதல் இந்த புளு ஸ்கிரீன் ஆப் டெத் உள்ளது. இயக்க செயல்பாடுகளில் ஏதேனும் இல்லீகல் ஆப்பரேஷன் ஏற்பட்டு அதிலிருந்து மீள முடியாமல் சிஸ்டம் தவிக்கும்போது இந்த செய்தி கிடைக்கும். எனவே ரீபூட் செய்வது ஒன்றுதான் இதற்கு தீர்வு. என்ன பிரச்னை என்றால் நீங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் பைல் கிராஷ் ஆகிவிடும். இறுதியாக சேவ் செய்த பைல் காப்பி மட்டுமே கிடைக்கும். சில அப்ளிகேஷன்களில் இதுவும் கிடைக்காமல் போகலாம். புளு ஸ்கிரீன் ஆப் டெத் விண்டோவில் ஒவ்வொரு விண்டோஸ் சிஸ்டத்திற்கும் ஏற்ற வகையில் டெக்ஸ்ட் இருக்கும். ஆனால் எல்லாமே ஒரே செய்தியைத்தான் தெரிவிக்கின்றன. இந்த பிரச்னை புதிய ஹார்ட்வேர் தொகுப்பு ஒன்றினால் ஏற்பட்டிருக்கலாம். அல்லது அண்மையில் இன்ஸ்டால் செய்த சாப்ட்வேர் தொகுப்பினால் உண்டாகியிருக்கலாம். வைரஸ் அல்லது வேறு தீங்கு விளைவிக்கும் மால்வேர் போன்ற புரோகிராம்களால் ஏற்பட்டிருக்கலாம். காரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். அவை உங்கள் கம்ப்யூட்டர், நீங்கள் பயன்படுத்தும் விதம், புழக்கத்தில் உள்ள சாப்ட்வேர்களைப் பொறுத்தது. இது ஒரு துரதிர்ஷ்டமான ஒன்றுதான். இருந்தாலும் வேறு வழியில்லை. ஆனால் நிரந்தரமாகக் கம்ப்யூட்டரை முடக்கும் அளவிற்கு பிரச்னை இருக்காது.
கேள்வி: என் மானிட்டரில் சில காலம் மஞ்சள் கலர் ஒரு ஓரத்தில் தெரிந்தது. மீண்டும் பாதி மானிட்டரில் ஒரு கலர் தெரிந்தது. சில வேளைகளில் நன்றாக இருக்கிறது. பல வேளைகளில் மக்கர் செய்கிறது. இது எதனால்?
பதில்: பல ஆண்டுகள் தொடர்ந்து பயன்படுத்திய பின்னர் மானிட்டர் தன் திறனை இழக்கும். அதன் முதல் அறிகுறிதான் இந்த கலர் வேறுபாடுகள். இந்த மானிட்டரின் ஆயுட்காலம் அவ்வளவுதான். எழுத்துக்கள் தெரிகிறதே என்று சொல்லி தொடர்ந்து இதனைப் பயன்படுத்த வேண்டாம். கண் பார்வை கெட்டுவிட வாய்ப்புகள் உண்டு. எனவே புதிய மானிட்டர் வாங்கிப் பயன்படுத்தத் தொடங்குங்கள்.
கேள்வி: எனது இமெயில் அக்கவுண்ட்டில் Change Password  மூலம் யாரேனும் என்னுடைய பாஸ்வேர்டை மாற்ற முடியுமா?
பதில்: உங்களது இமெயில் அக்கவுண்ட்டில் நுழைந்திட முதலில் உங்கள் பாஸ்வேர் டைப் பயன்படுத்திய பின்னர் தானே  Change Password  வசதியைப் பெற முடியும். எனவே உங்கள் பாஸ்வேர்டை அடுத்தவருக்குத் தெரியாமல் கையாளவும். அப்படியே தெரிந்திருக்குமோ என நீங்கள் சந்தேகப்பட்டால் உடனே அதனை மாற்றிவிடவும்.

பார்முலா எந்தவித மாற்றமும் இன்றி பேஸ்ட் செய்திட

எக்ஸெல் தொகுப்பில் ஒரே பார்முலாவினை பல செல்களில் பயன்படுத்த என்ன செய்கிறீர்கள்? ஒரு இடத்தில் அமைத் துவிட்டு அப்படியே மற்ற இடங்களில் காப்பி செய்கிறீர்களா? அப்படி காப்பி செய்கையில் செல் எண்களில் மாற்றம் ஏற்படாமல் இருக்கிறதா? மாற்றம் ஏற்படுகிறது, இல்லையா? எந்த இடத்தில் பேஸ்ட் செய்கிறோமோ அந்த செல்லுக்கு ஏற்றவகையில் மாறுகிறது. எந்த மாற்றமும் இல்லாமல் பேஸ்ட் செய்திட என்ன செய்யலாம்? இதற்கு பல வழிகளில் தீர்வு இருந்தாலும் கீழே தரப்பட்டுள்ள வழி ஓரளவிற்குச் சிறந்ததாக உள்ளது. அதனைப் பார்ப்போமா!
முதலாவதாக செல்லை செலக்ட் செய்வதைக் காட்டிலும் செல்லில் உள்ள பார்முலாவினை செலக்ட் செய்திடுங்கள். இதற்கு செல் உள்ளாகச் சென்று பார்முலாவினை மட்டும் செலக்ட் செய்திடலாம்; அல்லது கர்சரை செல் உள்ளே சென்று எப்2 கீயை அழுத்தினால் பார்முலா மட்டும் செலக்ட் செய்யப்படும்; அல்லது நேராக மேலே பார்முலா பார் சென்று அதனை செலக்ட் செய்திடலாம். இதனை செலக்ட் செய்து விட்டால் பின் காப்பி செய்திடுங்கள். இனிதான் முக்கியமான வேலை உள்ளது. இம்முறையில் காப்பி செய்தவுடன் பின்னர் எஸ்கேப் கீ அல்லது என்டர் கீயை ஒரு முறை அழுத்தவும். இந்த செயல்பாடு அவசியம் சரியாக மேற்கொள்ளப்பட வேண்டும்.
ஏனென்றால் இதன் மூலம் எக்ஸெல் தொகுப்பிற்கு செல்லில் உள்ளதனுடன் உங்கள் வேலை முடிந்து விட்டது என்று அறிவிக்கிறீர்கள். இதனை மேற்கொள்ளவில்லை என்றால் எக்ஸெல் இன்னும் நீங்கள் செல்லில் உள்ளவற்றை எடிட் செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று எண்ணிக் கொண்டிருக்கும். இனி புதிய செல்களுக்குச் சென்று பார்முலாவினை எளிதாக பார்மட்டிங் எதுவுமின்றி, செல் எண்கள் மாற்றமின்றி பேஸ்ட் செய்திடலாம்.

No comments:

Post a Comment

ஆன்லைன் வயது கால்குலேட்டர்


Udanz