Sunday, 21 April 2013

போலி Memory Card, USB Flash drive வை கண்டுபிடிக்க இலவச மென்பொருள்..!!

 முன் குறிப்பு: நேரடியாக மென்பொருளைப் பற்றிப்படிக்க இரண்டு முறை SPACE BAR -ஐ தட்டவும்.

வணக்கம் நண்பர்களே..! வணிகமயமாகிவிட்ட இந்த உலகில் தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப பொருட்களின் உற்பத்தி என்பது நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது.

நுகர்வோர்களின் எண்ணிக்கையும் கூடிக்கொண்டே இருப்பதால், பொருட்களை உற்பத்திசெய்யும் உற்பத்தியாளர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது..

இந்த வகையில் எலட்க்ரானிக் டிஜிட்டல் (Electronic Digital) சாதனங்களின் வரவும் வணிக சந்தையில் அதிகரித்த வண்ணம் உள்ளது. இத்தகைய சாதனங்கள் தற்காலத்தில் குப்பைப் போல குவிந்துகிடக்கிறது.



உதாரணமாக கணினி சார்ந்த பொருட்கள், யு.எஸ்.பி டிரைவ்(USB Flash Drive), மெமரி கார்ட் (Memory Card), செல்போன்கள்(Cell phones) போன்றவைகள் ஏகமாக உற்பத்தி ஆகி வருகின்றன.

இவைகள் நாளும் ஒரு புது தொழில்நுட்பத்துடன் வெளிவந்துகொண்டிருக்கிறது.

அதாவது இன்று வாங்கிய புது மாடல்(New Model), அடுத்த நாளே அது பழைய மாடல்(old Model) என்று சொல்லும் அளவுக்கு தொழில்நுட்பம் நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே உள்ளது.

நுகர்வோர்களின் தேவையைக் கருதி இத்தகைய எலக்ட்ரானிக்(Electronic)- டிஜிட்டல் சாதனங்கள்(Digital Device)  ஒரிஜினலைப் போன்றே தோற்றத்தில் உள்ள பல போலிகளையும் சந்தையில் வெளியிட்டு விற்றுக்கொண்டிருக்கின்றனர்.

இத்தகைய போலிகளை சந்தையில் விற்பனைக்கு கொண்டுவருவது சீனத் தயாரிப்புகள்தான்.

E Bay என்று சொல்லக்கூடிய ஆன்லைன் வர்த்தகத்தில்கூட இத்தகைய போலிகள் மலிந்து கொட்டிக்கிடக்கின்றன.

இத்தகைய போலி பிளாஸ் டிரைவ்கள்(duplicate flash drive), யு.எஸ்.பி(USB_pendrive), மெமரி கார்டுகள்(Memory Card) அனைத்தும் சோனி(Sony),கிங்ஸ்டன்(Kingston) போன்ற பிரபல நிறுவனங்களில் பெயர்களிலேயே கிடைப்பதால் நம்மவர்களும் இதை உண்மையானதென எண்ணி வாங்கிவிடுகின்றனர்.

குறிப்பாக சொல்லவேண்டுமானால், நாம் அடிக்கடிப் பயன்படுத்தும் USB Drive, Memory Card போன்றவற்றைக் கூறலாம்.

குறைந்த விலைக்கே 256GB, 512GB, 640GB என கிடைப்பதால்தான் இதை பலரும் வாங்கிவிடுகின்றனர்.

ஆனால் உண்மையான ஸ்டோரேஜ் அவ்வளவு இருக்காது. ஒரு 4GB அல்லது 6GB வரைதான் இருக்கும். அதனால் குறிப்பிட அளவிற்கு மேல் கோப்புகளை அதில் சேமிக்கும்போது அதனுடைய செயல்படும் திறன் அப்படியே ஸ்தம்பித்துப் போகும் அல்லது அத்தோடு அதனுடைய வாழ்நாள் முடிந்துவிடும்.

உதாரணமாக 256GB கொள்ளவு கொண்ட ஒரு யூ.எஸ்.பி உங்களிடம் இருக்கிறதென்று வைத்துக்கொள்வோம். கணினியில் நிறுவிப் பார்க்கும்போது அதனுடைய கொள்ளவு 256GB என்று காட்டும்.

ஆனால் அது உண்மையல்ல.அவ்வாறு கொள்ளளவை மாற்றிக் காட்டுவதற்கென  (அதவாது 256GB) என காட்ட அதில் ஒரு புரோகிராம் பதிந்து வைக்கப்பட்டிருக்கும். - பொய்யான தகவல்களை நமக்குக் காட்டும்.

Flash Driver, Memoy Card போலியானதா என கண்டுப்பிடிக்க:

இதற்கென வடிவமைக்கப்பட்ட மென்பொருளைக் கொண்டு நாம் எளிதாக இத்தகைய போலிகளை கண்டுபிடிக்கலாம்.

மென்பொருளின் பெயர்: H2testw

மென்பொருள் தரவிறக்க சுட்டி:

http://www.heise.de/ct/Redaktion/bo/downloads/h2testw_1.4.zip

இம்மொன்பொருளைப் பற்றிய மேலதிக விவரங்கள் காண சுட்டி:

http://www.heise.de/ct/Redaktion/bo/downloads/h2testw_1.4.zip

இம்மென்பொருளை தரவிறக்கி உங்கள் கணினியில் நிறுவிக்கொள்ளுங்கள்.

பிறகு உங்கள்  USB Flash Drive , Memory card போன்வைகளை முழுவதுமாக எந்த கோப்புகளில்லாமல் செய்து கணினியில் இணைத்துவிட்டு, மென்பொருளில் டார்கெட்டாக மெமரி கார்ட் அல்லது பிளாஸ் டிரைவ்வை கொடுங்கள்.

சிறிய நேர சோதனைக்குப் பிறகு உங்களுடைய பிளாஷ் டிரைவ் அல்லது மெமரிகார்ட் போலியானதா.. அல்லது உண்மையானதா.. உண்மையான கொள்ளவு எவ்வளவு என்பதை துல்லியமாக காட்டிவிடும்.

சோதனையின் முடிவில் Test finished without errors என்று காட்டினால் உங்களது பிளாஷ் டிரைவ், Memory card உண்மையானது என கண்டுகொள்ளலாம்.

The media is likely to be defective என்ற செய்தி கிடைத்தால்...

நான் சொல்லவும் வேண்டுமா? என்ன? போலியானது என்பது உறுதியாகிவிடும். எனவே இத்தகை கணினி சார்ந்த சாதனங்களை வாங்கும்போது நன்றாக தெரிந்தவர்களிடம் வாங்குவது ஒன்றேதான் இத்தகைய பிரச்னைகளைத் தவிர்க்கும். பணமும் விரயமாகாது.

குறைவான விலையில் கிடைக்கிறதே என வாங்கிவிட்டு பிறகு அவதிக்குள்ளாவது நாம் தான். கவனம் நண்பர்களே..!! எச்சரிக்கையாக இருப்பது என்றுமே நம் கையில்தான் இருக்கிறது. போலிகளைக் கண்டு ஏமாறாதீர்கள்..!!

No comments:

Post a Comment

ஆன்லைன் வயது கால்குலேட்டர்


Udanz