காப்சா(captcha) என்றால் என்ன? என்று முதலில் தெரிந்துகொள்வோம்.
படத்தைப் பாருங்கள்.. இதிலிருக்கும் எழுத்துகள் குறுக்குமாக ஒரு ஒழுங்கற்ற, சரியான வடிவில் இல்லாமல் இருக்கிறதல்லவா? இதுதான் காப்சா டெக்ஸ்ட் என்பது.
பெரும்பாலான பெரிய வலைதளங்களில், இணையம் வழியே பொருட்களை வாங்கும் தளங்களில் (online shopping sites) மற்றும் நாம் பயன்படுத்தும் மின்னஞ்சல் கணக்குகளை (உம்.Gmail, yahoo mail, hotmail) தொடங்குகையில் படிவத்தின் இறுதியில் இத்தகைய படங்கள்(captcha text) இருக்கும். படத்திற்கு கீழிருக்கும் பெட்டியில் படத்தில் உள்ள எழுத்துகளை சரியாக தட்டச்சிட்டால் மட்டுமே கணக்கு முடிவுபெறும்.
பெரும்பாலும் பலர் இதை சரியாக தட்டச்சு செய்துவிடுகின்றனர். ஒரு சிலசமயம் இது சற்று கடினமாக இருக்கும். இருப்பினும் இதிலுள்ளதை தட்டச்சு செய்து முடித்தால்தான் ஒருதளத்தில் நமது பெயரில் கணக்கு ஒன்றைத் தொடங்க முடியும்.
கணினி சார்ந்த விஷயங்களைக்கொண்டு (உதாரணம்: Robot என்னும் புரோகிராம்கள்), மனிதன் செய்வதைப் போன்றே செய்யக்கூடிய புரோகிராம்கள் இணைய உலகில் இருக்கின்றன.
இவை சுலபமாக இத்தகைய படிவங்களைத் தானாகவே புரிந்துகொண்டு , படிவத்தை நிரப்பி புதிய கணக்குகளை உருவாக்கிவிடும். இதைத் தடுக்கும் முகமாக இத்தகைய காப்சா டெக்ஸ்ட்டை பிரபல தளங்களில் அமைக்கின்றனர்.
குறிப்பாக Online Shopping செய்யும் தளங்களில் இதுபோன்று Captcha test நிச்சயம் இருக்கும்.
உதாரணத்திற்கு கூகுள் தளத்தையே எடுத்துக்கொள்வோம். .இதில் நீங்கள் புதிதாக பிளாக் ஒன்றை ஆரம்பிக்கிறீர்கள் என்றால் கணக்கை முடிக்கும்போது இத்தகைய காப்சா டெஸ்ட் நிச்சயம் இருக்கும்.
(Blogger Blogspot)பிளாக் வைத்திருப்பவர்கள் உங்கள் பிளாக்கரின் பிளாக்கர் தளத்தில் கூட settings==>Publishing சென்று அந்த பக்கத்தை சற்றே கீழிறக்கிப் பார்த்தால் இதுபோன்றதொரு காப்சா டெக்ஸ்ட் படம் இருக்கும்.
படத்தில் இருப்பதைப்போன்று (Please prove you're not a robot) என்றிருப்பதை கவனியுங்கள்..
இதுதான் முக்கியமாக இந்தப்பதிவின் வழி கூற வந்தது ஆகும். மனிதனைப் போன்றே இந்த வகை ரோபோட் புரோகிராம்கள் படிவத்தை எளிமையாக நிரப்பிவிடும். ஆனால் இதுபோன்ற சிதறிய, அழிந்து, தேய்ந்து போன நிலையில், ஒழுங்கற்று இருக்கும் இத்தகைய எழுத்துகளை அவைகளால் படித்தறிய இயலாது. இத்தகைய எழுத்துகளை மனிதனால் மட்டுமே கண்டுணர முடியும். எனவேதான் இத்தகைய காப்சா டெக்ஸ் டெஸ்ட் வைத்திருக்கின்றனர்.
ஒருசிலர் இந்த எழுத்துகளை சரியாக புரிந்துகொண்டு தட்டச்சிட முடியாமல், சில சமயம் இத்தகை கணக்குகளை உருவாக்காமலேயே சென்றுவிடுவதும் உண்டு. இது நம்முடைய முழுபாதுக்காப்பிற்கே அன்றி வேறில்லை. எனவே கொஞ்சம் பொறுமையாக படித்துணர்ந்து அதிலுள்ள எழுத்துக்களை தட்டச்சிட்டு உங்கள் கணக்கை நிறைவு செய்யுங்கள்.
இனி நீங்கள் இணையத்தில் புதிய பாதுகாப்புடன் கூடிய கணக்கை உருவாக்குங்கள். வாழ்த்துகள்.. மற்றுமொரு இதுபோன்றதொரு தொழில்நுட்ப பதிவின்வழி சந்திப்போம். நன்றி எனதருமை நண்பர்களே..!

இது எதற்கு?

No comments:
Post a Comment