Sunday 14 April 2013

இனிமேல் பேஸ்புக்கின் மூலம் வருமானம் ஈட்டலாம்


இனிமேல் பேஸ்புக்கின் மூலம்
நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியுமாக மக்கள் மத்தியில் பிரபல்யம் அடைந்து வரும் சமூகவலைத்தளமான பேஸ்புக் தற்போது விளம்பர சேவையை அறிமுகப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது. தற்போது நடைமுறையிலுள்ள கூகுள் விளம்பரங்களின் அடிப்படையில் பேஸ்புக் நிறுவனத்தினால் எதிர்வரும் வாரங்களில் அறிமுகப்படுத்தப்படவுள்ள Facebook Exchange எனப்படும் இந்த இணைய விளம்பரத்தை செய்யவுள்ள நிறுவனங்கள் பேஸ்புக்கில் குறிப்பிட்ட இடத்தை தமெக்கென ஒதுக்கி உடனுக்குடன் விளம்பரம் செய்யும் வசதியைப் பெற்றுக்கொள்ள முடியும்.
மேலும் பயனர்களின் அடிப்படையில் விளம்பரங்களைக் காட்சிப்படுத்த முடியும் எனவும், இதற்கான வருவாயை ஆயிரம் பயனர்களுக்கு என்ற அடிப்படையில் தீர்மானிக்கப்படவுள்ளதாகவும் பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

ஆன்லைன் வயது கால்குலேட்டர்


Udanz