Sunday, 14 April 2013

இணையப் பக்க​ங்களை குறித்த நேர இடைவெளியில் Auto Refresh செய்வதற்கு

இணையப் பக்க​ங்களை குறித்த
தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சியில் உலகினை சுருக்கி கிராமமாக மாற்றிய பெருமை இணையங்களையே சாரும். இந்த அடிப்படையில் இன்று பல லட்சக்கணக்கான இணையத்தளங்கள் தோற்றம் பெற்றுள்ளன.

இவ்வாறு இணையத்தளங்களை பார்வையிட்டுக் கொண்டிருக்கும் போது பதிவேற்றப்படும் புதிய தகவல்களை அறிவதற்கு குறித்த இணைப்பக்கத்தினை Refresh செய்ய வேண்டியது அவசியமாகும்.
இதற்காக F5 கீயினை பயன்படுத்த முடியும் அல்லது உலாவியில் காணப்படும் Refresh செய்வதற்கான பொத்தானை அழுத்துதல் வேண்டும்.
இவ்வாறில்லாது Auto Refresh செய்வதற்கான நீட்சிகள் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
Google Chrome மற்றும் Firefox போன்ற உலாவிகளில் செயற்படக்கூடியவாறு தனித்தனியாக வெளியிடப்பட்டுள்ள இந்த நீட்சிகளை நிறுவிய பின்னர், Auto Refresh செய்ய வேண்டிய நேர இடைவெளியினை தந்தால் போதும். ஒவ்வொரு இணையப்பக்கங்களும் அந்நேர இடைவெளியில் Auto Refresh ஆகிவிடும்.
Chrome - தரவிறக்க சுட்டி
Firefox - தரவிறக்க சுட்டி

No comments:

Post a Comment

ஆன்லைன் வயது கால்குலேட்டர்


Udanz