Google இல் உங்கள் வலைப்பூவை எப்படி முதலாவதாக கொண்டுவருவது எப்படி என்பது குறித்து சில தகவல்களை முன்னர் ஒரு பதிவில் கூறி இருந்தேன். இன்று Meta tag எப்படி Add செய்வது என்று பார்க்கலாம். இதன் மூலம் உங்கள் வலைப்பூவை எளிதாக Search Engine களில் வரவைக்கலாம்.
முதலில் இந்த meta tag என்பது எதற்கு?
உங்கள் வலைப்பூவை யாராவது ஏதேனும் keywords பயன்படுத்தி தேடும்போது முதலில் வர வாய்ப்பு உள்ளது. அத்துடன் உங்கள் வலைப்பூ எந்த மாதிரியானது என்பதையும் அவர் தெரிந்து கொள்ள வேண்டும் அல்லவா? அகற்குதான் இந்த meta tag.
இந்த meta tag ஐ add செய்வதன் மூலம் உங்கள் வலைப்பூ எந்த மாதிரியானது என்பதையும் தெரிவிக்கலாம். இதன் மூலம் எளிதாக Search Engine களில் உங்கள் வலைப்பூ வரவைக்கப்படும்.
Facebook ஐ Google ளில் தேடினால் எப்படி வரும் என்பதை கீழே படத்தில் காணலாம்.
இதைதான் நான் நமது வலைப்பூக்களுக்கு எப்படிக் கொண்டுவருவது என்று கூறப்போகிறேன். இதற்கான ஐடியா கொடுத்தவர் பதிவர் நீச்சல்காரன்.
1. Dashboard----> Design
2. கீழே உள்ள கோடிங்கை கண்டுபிடிக்கவும்,
<head>
<b:include data="blog" name="all-head-content" />
<b:include data="blog" name="all-head-content" />
4. கீழே உள்ள கோடிங்கைநீங்கள் கண்டுபிடித்த coding கு அடுத்து சேர்க்கவும்.
<b:if cond='data:blog.url == data:blog.homepageUrl'>
<meta content='DESCRIPTION HERE' name='description'/>
<meta content='KEYWORDS HERE' name='keywords'/>
</b:if>
5. இப்போது DESCRIPTION HERE,
KEYWORDS HERE போன்றவற்றை உங்களுக்கு ஏற்றபடி மாற்றவும்.
6. இப்போது Template ஐ save செய்து விடவும்.
அவ்ளோதான் நண்பர்களே. நான் எனக்கு meta tag சேர்த்ததை கீழே படத்தில் கொடுத்து உள்ளேன்.
6. இப்போது Template ஐ save செய்து விடவும்.
அவ்ளோதான் நண்பர்களே. நான் எனக்கு meta tag சேர்த்ததை கீழே படத்தில் கொடுத்து உள்ளேன்.
(படத்தை பெரிதாகப் பார்க்க படத்தின் மீது கிளிக் செய்யவும்.)
டிஸ்கி: என்னைப் போன்று 3rd party template பயன்படுத்துவர்களுக்கு meta content இடம் பெற்றிக்க வாய்ப்பு உள்ளது. அதனை நீங்கள் Edit செய்தால் போதும்.
நன்றி: LK Magazine blogger Template.
No comments:
Post a Comment