Saturday, 9 March 2013

Microsoft office இல் tab வசதியினைக் கொண்டு வருவது எப்படி?

 
 

தற்போது உள்ள Browser களில் tab வசதியானது மிகச் சிறந்த ஒரு வசதியாக கருதப்படுகிறது. இதற்குக் காரணம் ஒரு browser இல் பல tab களைத் திறப்பதன் மூலம் Browsing இலகுவாகின்றது அத்துடன் எமது நேரமும்
சேமிக்கப்படுகின்றது.
இதே போன்ற Tab வசதியை Microsoft office இல் கொண்டுவந்தால் எவ்வளவு வசதியாக இருக்கும் Microsoft Word, Microsoft Excel, Microsoft powerpoint இல் தனித் தனி Window இல் திறந்து வைத்து ஒவ்வொரு Window ஆக மாற்றி மாற்றி வேலை செய்வதற்குப் பதில் ஒரே Window இல் வெவ்வேறு Tab இல் திறந்து வைத்து வேலை செய்வதனால் இலகுவாக எமது வேலைகளை செய்து முடிக்கக் கூடியதாக இருக்கும். அத்துடன் அதிகளவு நேரத்தையும் மிச்சப்படுத்திக் கொள்ள கூடியதாக இருக்கும்.
இவ்வசதியை உங்கள் கணணியில் உள்ள Microsoft office இல் செயற்படுத்துவதற்க்கு கீழ் உள்ள சுட்டியில் இருந்து OfficeTab என்ற சிறிய Microsoft Office plug-in ஐ தரவிறக்கி உங்கள் கணணியில் Install பண்ணிக் கொள்ளவும்.
இதை Install பண்ணியதும் வரும் OfficeTab Setting இல் உங்களுக்கு விருப்பமான Tab Style, மற்றும் Tab இன் நிறம் போன்றவற்றை மாற்றிக் கொள்ள முடியும்.
மென்பொருளைத் தரவிறக்க : http://www.box.net/shared/m2fluoza87
 
 
 

No comments:

Post a Comment

ஆன்லைன் வயது கால்குலேட்டர்


Udanz