வலைப்பூ வைத்துள்ள நமக்கு பிளாக்கர் அடிக்கடி இன்ப அதிர்ச்சி அளிக்கும் வகையில் சில வசதிகளை தருவதுண்டு. அந்த வகையில் இப்போது உங்கள் வலைப்பூ அகலத்தை மேலும் அதிகரிக்க வாய்ப்பு கொடுத்துள்ளது.அது என்ன அப்படின்னு கேக்குறீங்களா வாங்க பாப்போம்.
இதுவரை பிளாக்கர் ஆனது அதன் அகலமாக அதிகபட்சம் 1000 Pixel மட்டுமே வைத்து இருந்தது. ஆனால் நாம் டிசைன் செய்த Template களை வேறு தளத்தில் இருந்து பெற்று இருந்தால் இது மாறும்.
ஆனால் பிளாக்கர் கொடுத்துள்ள Template பயன்படுத்துபவர்கள் இனி 1500 Pixel வரை அகலப்படுத்திக் கொள்ளலாம். மிக எளிய இது.
முதலில்
பழைய பிளாக்கர் :
DashBoard-->
Design-->Edit HTML சென்று உங்கள் தற்போதைய Template ஐ டவுன்லோட் செய்து கொள்ளவும். பின்னர். Template Designer செல்லவும்.
புதிய பிளாக்கர் :
DashBoard-->Template-->
Backup/Restore Template-->Download Full Template சென்று உங்கள் தற்போதைய Template ஐ டவுன்லோட் செய்து கொள்ளவும். பின்னர். Template
Designer செல்லவும். பின்னர் Layout--> Template
Designer செல்லவும்.
இதில் சென்று Adjust
Width என்பதை தெரிவு செய்யவும். இது உங்கள் தளத்தின் இப்போதைய அகலத்தைக் காட்டும். அதில் உங்களுக்கு ஏற்றபடி அதிகரித்துக் கொள்ளலாம்.
இதன் பலன் என்ன?
1. பிளாக்கர் தரும் Template பயன்படுத்தினால் மட்டுமே இது பலனுள்ளது
2. இரண்டு பக்கமும் SideBar வைக்க முடியும். இதனால் போஸ்ட் போடும் இட அளவு குறைக்க தேவை இல்லை.
3. Content இடத்தை மேலும் அகலமாக்க இயலும். இதனால் படங்கள் SideBar க்கு இடைஞ்சல் தராமல் இருக்கும்.
1200 Pixel க்கு மேல் போக வேண்டாம் என்பது என் கருத்து. அதற்கு மேல் போனால் உங்கள் தளம் மிக அதிக அகலம் உள்ளதாக மாறிவிடும்.
நண்பர்களே இந்த பதிவு பிடித்து இருந்தால் கருத்து சொல்லுங்கள், சந்தேகம் இருந்தால் கேளுங்கள்.
◘பலே ட்வீட் ◘
யோஹன் அத்தியாயம் ஒன்று படபிடிப்பு முழுக்கவே வெளிநாட்டில் தான் - கெளதம் மேனன் #படத்தையும் அங்கேயே ரிலீஸ் பண்ணிடுங்க புண்ணியமா போவும்.
_DKCBE@twitter.com
Engg,
Medical, PG படிக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு கல்வி உதவித் தொகை : http://t.co/OzgYeCJ 04425392345 9940345704
_karaiyaan@twitter.com
No comments:
Post a Comment