Monday, 11 March 2013

பிளாக்கருக்கான பீட்பர்னர் அமைத்து வாசகர்களை அதிகரிக்க செய்ய..

http://www.usilampatti-chellappa.blogspot.in/2012/07/creat-feed-for-your-blogger-blog.htmlவணக்கம் நண்பர்களே..! புதிய பதிவர்கள்(New Bloggers) புற்றீசல் போல நாள்தோறும் தோன்றிக்கொண்டே இருக்கின்றனர். இவர்களில் ஒரு சில நண்பர்கள் தங்களின் பிளாக்கை மாற்றிக்கொடுக்கும்(Alter)சொல்லிக் கேட்டுக்கொண்டு வருகின்றனர்.. அவர்களில் அனைவருக்கும் என்னால் நேரடியாக உதவ இயலாமையால், அவர்கள் கேட்கும் சந்தேகங்களை பதிவுகளாக இட்டு வருகிறேன். இதன் மூலம் இத்தகைய சந்தேகங்கள் உள்ள  புதிய நண்பர்களும், புதிய வலைப்பதிவர்களும் (New Bloggers) தங்களது சந்தேகத்தை போக்கிக்கொள்ள முடியும். . நண்பர் திரு ராஜேந்திரன் அவர்கள் தனது பதிவுகள் முழுவதும் மின்னஞ்சலில் சென்றுவிடுவாதல் பதிவுகளைப் படிக்க தளத்திற்கு அதிக வாசகர்கள் வரவில்லை. இதைத் தடுப்பது எப்படி? எனக் கேட்டிருந்தார். அவர் கேட்ட சந்தேகத்தையே பதிவாகப் பகிர்கிறேன்.

ஃபீட்பர்னர்(Feed burner) பற்றி ஓரளவுக்கு நாம் அறிந்து வைத்திருப்போம். பீட்பர்னர் என்பது நமது தளத்தை வாசகர்கள் RSS , E-mail மூலம் தொடர பயன்படுவது. மின்னஞ்சல் கொடுத்து நமது தளத்தை தொடர்வதால் அவர்களுக்கு பதிவுகள் மின்னஞ்சலில் புதிய பதிவுகள் தானாகவே சென்றடையும்.

பீட்பர்னர் கணக்குத் தொடங்க என்ன செய்யவேண்டும்?

Feed burner -கணக்குத் தொடங்க உங்களுக்கு நிலையான ஜி-மெயில் முகவரி இருந்தாலே போதும். நீங்கள் ஒரு ஜிமெயில் பயனர் என்றால் உங்கள் மின்னஞ்சலை பயன்படுத்தி பீட்பர்னர் தளத்தில் உள்நுழையலாம். இல்லையெனில் புதிய கணக்கு ஒன்றைத் தொடங்க வேண்டும்(sign up).

ஃபீட்பர்னர் தளத்திற்கு செல்ல முகவரி: FeedBurner

இந்த தளத்தில் உங்கள் G-mail முகவரி கொடுத்து உள்நுழைந்து(login) கொள்ளலாம். பீட்பர்னர் கணக்கைத் தொடங்கியவுடன் உங்களுக்கு இவ்வாறான ஒரு பக்கம் தோன்றும். அதில் உங்கள் வலைப்பூவின் முகவரியைத் தரவும். அதாவது  www.tnpscgks.blogspot.com என உங்கள் பிளாக் முகவரியைத் தரவும். இங்கு tnpscgks என்பதற்குப் பதில் உங்களுடைய பிளாக் முகவரியைத் தரவும்.

உதாரணத்திற்கு கீழுள்ள பெட்டியில் www.tnpscgks.blogspot.com  என உள்ளிட்டிருக்கிறேன் பாருங்கள். இங்கு என்னுடைய வி.ஏ.ஓ தளத்திற்கு ஃபீட்பர்னர் கணக்கைத் துவங்கும்போது எட்டு Screen Shot -ஐ பகிர்ந்துள்ளேன்..

enter blog url to create feedburner

அடுத்த பக்கத்தில் வரும் இரண்டு Feed URL-களில் ஏதேனும் ஒன்றை மட்டும் செலக்ட் செய்யுங்கள்.
select feed url for feedburner


4. அடுத்து உங்கள் Feed-க்கு Title மற்றும் முகவரி தர வேண்டும். இதில் Feed Address மிகவும் முக்கியமானது. இதை யோசித்து நிரந்தரமாக இருக்கும்படி கொடுக்க வேண்டும். இப்படி கொடுத்த பிறகு, மீண்டும் தேவைப்படும்போது பீட் அட்ரசை மாற்ற நினைக்கலாம். அவ்வாறு மாற்றும்போது இதற்கு முன் உள்ள பீட் அட்ரசில் தொடர்ந்த நண்பர்கள் அனைவரையும் நீங்கள் இழக்க நேரிடும். எனவே இதில் கவனமுடன் செயல்பட்டு, நிரந்தரமாக ஒரே அட்ரஸ் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். சுருக்கமாக சொல்வதென்றால் பீட் அட்ரஸ் முதல் முறை கொடுத்தை மாற்றக்கூடாது.

enter feed title, feed adress to create feedburner


5. அவ்வளவுதான் இப்போது உங்கள் Feed தயாராகிவிட்டது. மேலும் உங்கள் பீட்பர்னரில்  ஒரு சில வசதிகளை ஆக்டிவேட்செய்ய Next கொடுக்கவும்.
final steps of creating feedburner


6. அடுத்து வரும் பக்கத்தில் 1. Click throughs, 2. I want more! Have FeedBurner Stats also track என்பவைகளை கிளிக் செய்யுங்கள்.

இப்போது உங்கள் Feedburner கணக்கு பயன்படுத்த தயாராகிவிடும்.

ஃபீட்பர்னர் தளத்தில் நீங்கள் செய்ய வேண்டியவை:

  • Optimize என்பதில் கிளிக் செய்து Feedflare கிளிக் செய்து உங்களுக்கு விருப்பமானவற்றை டிக் செய்துகொள்ளவும். தேவையில்லையெனில் அப்படியே விட்டுவிடலாம்.
  • Publicize என்ற டேபைக் கிளிக் செய்யவும். அதிலுள்ள 1. Email Subscriptions என்பதைக் கிளிக் செய்து Activate என்பதைக் கிளிக் செய்யவும். இப்போது தோன்றும் நிரல்வரிகளை உங்கள் பிளாக்கரில் Add gadget==>Html/Javasctript சென்று பேஸ்ட் செய்துகொள்ளுங்கள். அந்த விட்ஜெட்டிற்கு தலைப்பு இமெயில் மூலம் பதிவுகளைப்பெற என தலைப்பிட்டுக்கொள்ளுங்கள். 2. Pingshot, 3. Feedcount,4. Creative Commons போன்றவற்றையும் ஒவ்வொன்றாக கிளிக் செய்து Activate செய்துகொள்ளுங்கள்.
  • Activate செய்த Email Subscriptions பகுதியில் உள்ள கோடிங்கை காப்பி செய்து புதிய Gadget ஆக உங்கள் வலைப்பூவில் சேர்க்கவும். இது மின்னஞ்சல் மூலம் உங்கள் வலைத்தளத்தை தொடர விரும்பும் நண்பர்களுக்கு பயன்படும். அதாவது மற்றவர்கள் Email Subscriptions செய்வதற்குரிய கோடிங்தான் இது.
பிளாக்கரில் செய்ய வேண்டிய மாற்றம்: 
  • இப்போது பிளாக்கர் கணக்கில் Settings சென்று site feed என்பதை கிளிக் செய்யுங்கள். அதில் Post Feed Redirect URL என்பதில் http://feeds.feedburner.com/ tnpscgks எனக் கொடுக்கவும். இதில்  tnpscgks என்பதற்கு பதிலாக உங்களின் Feed Address இருக்க வேண்டும்.
  • அடுத்து செய்ய வேண்டிய முக்கியமான ஒன்று Allow Blog Feed என்பதில் Short அல்லது until jumb break என்று கொடுக்கவும். இப்படி கொடுப்பதால் மின்னஞ்சல் அல்லது RSS Feed மூலம் உங்கள் பதிவுகளை வாசிப்பவர்களுக்கு பதிவின் ஆரம்ப பகுதி மட்டுமே சென்றடையும்.
  • முழுப் பதிவையும் படிக்க வாசகர்கள் உங்கள் தளத்திற்கு வந்துதான் படிக்க முடியும். அதனால் உங்களுடைய தளத்தில் Page views அதிகரிக்கும். (இந்த சந்தேகத்தைத்தான் நண்பர் திரு. ராஜேந்திரன் அவர்கள் என்னிடத்தில் கேட்டார். ராஜேந்திரன் அவர்களுக்குப் புரிந்திருக்கும் என நினைக்கிறேன்.)

இவ்வாறு நீங்கள் உருவாக்கிய பீட்பர்னர் மூலம் தளத்திற்கு வரும் வாசகர்கள் உங்கள் தளத்தைத் தொடர முடியும். ஒவ்வொரு முறையும் புதிய பதிவுகளை நீங்கள் வெளியிடும்போது உங்கள் பதிவுகளானது பீட்பர்னர் மூலம் உங்கள் தளத்தை தொடரும் ஒவ்வொருவருக்கும் மின்னஞ்சல் வழியே சென்றுவிடும். நன்றி நண்பர்களே..!


இந்த பதிவு உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள். நண்பர்களுக்கும் தளத்தை அறிமுகம் செய்து வையுங்கள்.ஏதேனும் சந்தேகம் எனில் மின்னஞ்சல் செய்யுங்கள்.நன்றி நண்பர்களே.. மற்றுமொரு புதிய பயனுள்ள பதிவின் வழி சந்திப்போம்.

No comments:

Post a Comment

ஆன்லைன் வயது கால்குலேட்டர்


Udanz