அப்படி என்ன வசதி?
நமது வலைப்பூவில் ப்ளாக்கின் பெயருக்கு கீழே Header Bar இருப்பதை பார்த்திருப்போம் அல்லவா? நாம் உருவாக்கும் பக்கங்கள் அங்கு வரும். ஆனால் நம்மில் பலர், பக்கங்களுக்கு பதில் நாம் விரும்பும் சுட்டிகளை (Links) வைக்கவே விரும்புவோம். மற்ற தளங்கள் மூலம் பதிவிறக்கம் செய்யப்படும் சில டெம்ப்ளேட்களில் அந்த வசதிகள் இருக்கும். ஆனால் அந்த வசதி இல்லாத டெம்ப்ளேட்டில் சுட்டிகள் வைப்பது எப்படி?
அதற்கான வழிமுறைகள் பற்றி இணையத்தில் கற்று, பதிவிட வந்த பொழுது, புதிய ப்ளாக்கரில் அந்த வசதி இருப்பதை கண்டேன். தற்போது அந்த வசதி எளிதாகிவிட்டது.
செய்முறை:
1. முதலில் Pages பக்கத்திற்கு செல்லுங்கள்.
2. அங்கு New Page என்பதை க்ளிக் செய்தால் இரண்டு விருப்பங்கள்(Options) வரும்.
அ. Blank Page - புதிய பக்கங்கள் உருவாக்குவதற்கு
ஆ. Web Address - சுட்டிகள் இணைப்பதற்கு
Web Address என்பதை தேர்வு செய்யவும்.
3. பிறகு வரும் பக்கத்தில் தலைப்பு ஏதாவது கொடுத்துவிட்டு, Web Address(URL) என்ற இடத்தில் நீங்கள் விரும்பும் தள முகவரியை அல்லது இணைய பக்கத்தின் முகவரியை கொடுத்து Save என்பதை க்ளிக் செய்யவும்.
4. நாம் உருவாக்கிய பக்கங்களை Header Bar-ல் தெரிய வைக்க "Show pages as" என்ற இடத்தில் க்ளிக் செய்தால் அங்கு மூன்று விருப்பங்கள் வரும்.
அ. Top Tabs - Header Bar-ல் வைக்க
ஆ. Side Links - Side Bar-ல் வைக்க
இ. Dont Show - பக்கங்களை எங்கும் தெரியாமல் இருக்க (உங்கள் டெம்ப்ளேட்டில் Default-ஆக header Bar Link வசதி இருந்தால் இதனை க்ளிக் செய்யவும்)
அதில் Top Tabs என்பதை தேர்வு செய்யவும்.
5. பிறகு மேலே, Save Arrangements என்பதை க்ளிக் செய்யவும்.
அவ்வளவு தான்!
No comments:
Post a Comment