பக்கவாத நோயை தடுக்கும் சிட்ரஸ் அமில பழங்கள்
சிட்ரஸ்
அமிலம் அதிகம் உள்ள பழங்களை உட்கொண்டால் பக்கவாத நோயை தடுக்கலாம் என
ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து கிழக்கு ஏஞ்சிலியா பல்கலைகழகத்தின் நார்விச் மெடிக்கல் ஸ்கூல்
ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
அதிகளவு பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடும் 69,622 பெண்களிடம் 14 ஆண்டுகளாக
மேற்கொண்ட சோதனையில் இருந்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகிறது.
சீரான ரத்த ஒட்டத்திற்கு பிளேவோனாய்ட் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்த
காய்கறிகள், பழங்கள், அடர் நிறமுள்ள சொக்லேட்டுகள் துணைபுரிவதாக
தெரியவந்துள்ளது.
திராட்சை மற்றும் ஆரஞ்சு பழங்களை குறைந்த அளவில் சாப்பிடுபவர்களை காட்டிலும்
அதிக அளவில் சாப்பிடுபவர்களுக்கு 19 சதவீதம் குறைந்த அளவிலேயே பக்கவாதம் ஏற்படுவதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment