Sunday 10 March 2013

பணிபுரியும் இடங்களில் பிரச்னையா?

http://www.usilampatti-chellappa.blogspot.in/2011/03/letter-for-friend-or-colleague.html

 நாம் பணிபுரியும் இடத்தில் ஏற்படும் பிரச்னைகளும் அதை சுமூகமாக (நண்பனுக்கு கடிதம் பகுதி )தீர்ப்பதைப் பற்றிய பதிவு இது..!

அன்பு நண்பனுக்கு ஒரு கடிதம்..!

அருமை நண்பனே..!

ஒரு நிறுவனத்தில் வேலைசெய்யும்போது.. ஏதாவது ஒரு சூழ்நிலையில் மனஸ்தாபம் வரக்கூடும். அதுவே நிலையானது அல்ல. அது சிறுப்பிள்ளைத்தனமானது.. அதற்காக மனதில் அதையே வைத்துக்கொண்டு நாம் செய்யும் வேலையில் அதைக்காட்டக்கூடாது..

அதனால் வேலைசெய்யும் நிறுவனம்தான் பாதிக்கப்படும்..நமது முன்னேற்றம் தடைபடும்.. ஒரு வித அர்ப்பணிப்போடு(Dedication) பணியில் ஈடுபடும்படும்போது நிறுவனமும் வளரும்... நாமும் வளருவோம்..
சரியாக சொல்லவேண்டுமென்றால் குழு மனப்பான்மை(Group mentality) வேண்டும்.. குழுவாக சேர்ந்து செய்யும் பணியானது மிகச் சரியாக நிறுவனத்தின் வளர்ச்சிக்கு போய்ச்சேரும்.. அவ்வாறு சேரும்போது நிறுவனம் வளரும்.. அதனால் நாமும் வளர்ச்சிப்பெறலாம்...

'எனக்கென்ன, உனக்கென்ன.. நான் ஏன் அதைச் செய்யவேண்டும்.. நீங்கள் செய்யுங்களேன்' என்றும், ''நமக்கேன் வம்பு.. இது உங்கள் வேலை.. இது என் வேலை.. நான் செய்யமாட்டேன்..''என்றெல்லாம் வாதம்(Argument) செய்யும் போது நமது முன்னேற்றம் பாதிக்கப்படும்.

மற்றும் கற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்பும், ஒரு நல்ல அனுபவமும் கிடைக்காமல் போய்விடும். இதனால் அந்த  நிறுவனத்தின் முன்னேற்றமும் பாதிக்கப்படும் என்பதை நன்றாக புரிந்துகொள்ளவேண்டும்.

ஒரு பணியில் ஈடுபடும்போது ஏற்படும் சந்தேகங்களை(Doubts), அதை நிவர்த்தி(solve) செய்ய யாராக இருந்தாலும் அவரிடம் கேட்டு தெளிவது தான் சிறந்தது. 

நான் சொல்வது உங்களுக்குப் புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன் நண்பரே..!

நேரமிருந்தால் மற்றொரு கடிதத்தின் வழியே சந்திப்போம்.

மனதுக்குள் இருக்கும் கர்வத்தை தூக்கி எறிந்துவிட்டு, வீண் விவாதங்களில் ஈடுபடாமல் ஒன்றிணைந்து செயல்பட்டால் தான் நாமும் உயரலாம்.. நம்மைச் சார்ந்த நிறுவனமும் உயரும்.. நமது வாழ்க்கைத் தரமும் உயரும்.. சிந்தித்து செயல்படுங்கள் நண்பர்களே..!! yes. this give us best result..!

No comments:

Post a Comment

ஆன்லைன் வயது கால்குலேட்டர்


Udanz