http://www.usilampatti-chellappa.blogspot.in/2013/01/showdown-computer-faster-useful-tips.html
வேகத்திற்கு பெயர் போனது கம்ப்யூட்டர். எந்த ஒரு கணக்கு என்றாலும், எந்த
ஒரு அலுவலக வேலையானாலும், டிசைனிங் வொர்க் (Designing Work) ஆக இருந்தாலும்
விரைவாக செய்து முடிப்பதற்காகவே உருவாக்கப்பட்டதுதான் கணினி..
கணினியில் பழகி.. பழகி.. மற்ற செயல்களிலும் கூட விரைவாக
முடிவுகளை எதிர்பார்க்கும் குணத்தை சிலர் பெற்றிருப்பார்கள்.. காரணம்.. கணினி இவர்களுடன் ஒன்றிவிட்டதுதான் என்று சொல்லலாம். அதாவது ஒரு வேலையைச் சொன்னவுடன், அடுத்த நிமிடமே அது முடிந்திருக்க வேண்டும் என்னும் மனப்பாங்கை இவர்கள் கொண்டிருப்பார்கள்.
முடிவுகளை எதிர்பார்க்கும் குணத்தை சிலர் பெற்றிருப்பார்கள்.. காரணம்.. கணினி இவர்களுடன் ஒன்றிவிட்டதுதான் என்று சொல்லலாம். அதாவது ஒரு வேலையைச் சொன்னவுடன், அடுத்த நிமிடமே அது முடிந்திருக்க வேண்டும் என்னும் மனப்பாங்கை இவர்கள் கொண்டிருப்பார்கள்.
அந்தளவிற்கு இன்று கணினி மனிதர்களை ஆண்டுகொண்டிருக்கிறது. கணினியைப் பயன்படுத்தும் பலருக்கும் இவ்வாறான மனநிலையே இருக்கும்.
இதுபோன்ற சூழல் நிலவும் தற்போதையை சூழ்நிலையில் கணினி
ஆரம்பிப்பதற்கும்(Startup), கணினி அணைவதற்கும்(Shutdown) சில சமயங்களில்
அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். கணினி ஆரம்பிப்பதற்கு ஏற்படும் நேரத்தைக்கூட
சில சமயங்களில் பொறுத்துக்கொள்ள முடியும். காரணம் அனைத்து மென்பொருள்களும்
இயங்கி, கணினியை உயிர்ப்பிக்க நேரம் எடுத்துக்கொள்ளும். ஆனால் வேலை
முடிந்த பிறகு கணினியை நிறுத்தம் செய்தால் உடனே Shutdown ஆகிவிட வேண்டும்
என்ற நினைப்புதான் பலருக்கும் இருக்கிறது.
ஏனென்றால் வேலை செய்து முடித்த அந்த டென்ஷன் அப்படியே இருக்கும். அதே போல
வேலை முடிந்தவுடன் அடுத்த நொடியே கணினியை விட்டு எழுந்து வெளியில்
சென்றுவிட வேண்டும் என்ற எண்ணம் மனதில் இருக்கும். அல்லது அவசரமாக வேறு
ஏதேனும் முக்கிய வேலைக்கு செல்ல வேண்டியிருக்கும்.
இதைத்தான் நம்மவர்கள் "ஆக்கப் பொறுத்தவனுக்கு ஆற பொறுக்காது" என்பார்கள்.
(சரி.. வளா.. வளா.. கொழா.. கொழ்ழா.. ஏன் நீட்டி முழக்கறீங்க.. சொல்ல வந்ததை
சொல்லிட்டு போங்கப்பூ.. புது வருசம் அதுவுமா.. ஏன் இத்தனை நீட்டி
முழங்கறீங்கன்னு நீங்க சொல்வது எனக்கும் காதில் விழுறது.. )
பொதுவாகவே நான் அனைவரும் கணினியில் சந்திக்கும் ஒரு பிரச்னை கணினியை
அனைக்கும்போது(Shutdown) அது தாமதமாக நேரமெடுத்துக்கொண்டு அணைவதுதான்.
சில நேரங்களில் நீங்கள் அவசரமாக வெளியில் கிளம்ப எண்ணி உங்கள் கணினியை
அணைத்துவிட Shutdown செய்வீர்கள்.. அது shutdown ஆக அதிக நேரம்
எடுத்துக்கொள்ளும். அதுபோன்ற சூழ்நிலையில் உங்களுக்கு ஏற்படும் டென்சன்
இருக்கிறதே.. அப்பப்பா.. சொல்லமுடியாத அளவிற்கு டென்சன் ஏற்படும் இல்லையா?
அதுபோன்ற சூழ்நிலைகள் பலருக்கும் ஏற்பட்டிருக்கும்.
இவ்வாறு கணினி அணைவதற்கு நேரம் எடுத்துக்கொள்வது ஏன் என்று பார்த்தால்..
உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்கும் மென்பொருள்களே காரணமாக இருக்கும்.
சரி.. இந்த பிரச்னையை எப்படி சரிசெய்வது?
அதற்கு எளிய வழிமுறையைச் செய்தாலே இவ்வாறான தாமதப்படுத்துதலை நீக்க முடியும்.
இதற்கு உங்கள் கணினியில் Start==>All Programs==>Run==> செல்லுங்கள்.
அதில் regedit என தட்டச்சிட்டு enter கொடுங்கள்..
தோன்றும் ரெஜிஸ்ட்ரி எடிட்டரில் (Registry Editor) இடது புறம் உள்ள பக்க
பட்டையில் HKEY_LOCAL_MACHINE என்பதில் டபுள் கிளிக் செய்யுங்கள்.
தோன்றும் கோப்புறைகளில் சிஸ்டம் (System) என்ற கோப்புறையை கிளிக் செய்து திறந்துகொள்ளுங்கள்.
திறந்த System Folder -னுள் currentcontrolset என்ற கோப்புறை இருக்கும். இதை இப்பொழுது திறந்துகொள்ளுங்கள்.
அதனுள் இருக்கும் கண்ட்ரோல்(control) எனும் போல்டரை திறந்துகொள்ளுங்கள்.
இப்பொழுது வலதுபுறம் அந்த போல்டரில் உள்ள உட்பிரிவுகள் தோன்றும். அதில்
வெயிட் டூ கில் சர்வீஸ் டைம் அவுட் (waittokilltimout) என்பதின் மீது Right
Click செய்து மாடிஃபை(Modify) என்பதை தேர்ந்தெடுங்கள்.
இப்பொழுது தோன்றும் மெனு விண்டோவில் (Menu window) வேல்யூ டேட்டா (Value
Data) என்பதில் 200(இருநூறு) என தட்டச்சிட்டு ஓ.கே(OK) கொடுத்துவிடுங்கள்.
அவ்வளவுதான்.. முடிந்தது.. இனி நீங்கள் உங்கள் கணினியை Shutdown செய்து
பாருங்கள்.. இதற்கு முன்பு உள்ளதைவிட வேகமாக உங்கள் கம்ப்யூட்டர் Shutdown
ஆவதை கண்கூடாக பார்ப்பீர்கள்..
No comments:
Post a Comment