Monday 11 March 2013

பேஸ்புக் பதிவுகளை குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டும் மறைப்பது எப்படி?

http://www.usilampatti-chellappa.blogspot.in/2013/03/hide-facebook-posts-from-specific-people-or-list.html


http://3.bp.blogspot.com/-RGmSkE76X90/UTg3L36J9jI/AAAAAAAAMXo/GLnvsjh3Kuw/s1600/hide+posts+to+few+people.jpg
பேஸ்புக் என்பது இன்று இணையத்தில் இயங்குபவர்களுக்கு தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. தினமும் பதிவுகளை பகிரும் போது குறிப்பிட்ட சிலருக்காக நாம் சில பதிவுகளை பகிராமல் போகலாம். அம்மாதிரியான பதிவுகளை குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டும் தெரியாமல் மறைத்து மற்ற அனைவருக்கும் தெரியும் படி செய்வது எப்படி எப்படி என்று பார்ப்போம்

இதற்கு உதாரணம் சொல்ல வேண்டும் என்றால், அலுவலகத்தில் இருக்கும் போது பேஸ்புக் பயன்படுத்தினால் மேலாளருக்கு மட்டும் நாம் போடும் பதிவுகள் தெரியக்கூடாது என்று விரும்பினால் அவ்வாறு செய்யலாம்

முதலில் குறிப்பிட்ட பதிவை எழுதி முடியுங்கள். அதன் பின் கீழே படத்தில் உள்ளது போல Public என்பதை கிளிக் செய்யுங்கள்.சிலருக்கு அது Friends என்று இருக்கக் கூடும். வரும் Drop-Down மெனுவில் Custom என்பதை கிளிக் செய்யுங்கள்

http://2.bp.blogspot.com/-89IdaspQV74/UTgzmkL6ISI/AAAAAAAAMW4/oitWsbV_nQM/s1600/custom.png

இப்போது வரும் பகுதியில் "Don't share this with These people or lists" என்பதில் குறிப்பிட்ட நபர்களின் பெயரை கொடுக்க வேண்டும். நீங்கள் ஒரு List வைத்திருந்தால் அப்படியும் கூட தரலாம்

http://3.bp.blogspot.com/-2FJCOcIx9lE/UTg2GYgJw3I/AAAAAAAAMXU/aSsegE_KmGI/s320/done+share+this+with+specific+people.png


ஒரு சில நபர்கள் மட்டும் என்றால் ஒவ்வொரு பெயராக கொடுங்கள்

நிறைய பேர் என்றால் அவர்களை ஒரு லிஸ்ட் போட்டு கொள்ளுங்கள்.பின்னர் லிஸ்ட் பெயரை தெரிவு செய்தால் அதில் இருக்கும் நபர்களுக்கு நீங்கள் பகிரும் போஸ்ட் தெரியாது

http://2.bp.blogspot.com/-ZswUUd2IDXU/UTg2-S09ZrI/AAAAAAAAMXg/G4C_yvYixCU/s320/dont+share+this+with+Bangalore+people.png

இதை முடித்து விட்டு Save Changes கொடுத்து விட்டு Post செய்து விட்டால் வேலை முடிந்தது. குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டும் போஸ்ட் தெரியாது
- See more at: http://www.karpom.com/2013/03/hide-facebook-posts-from-specific-people-or-list.html#sthash.MqxY6DRL.dpuf



No comments:

Post a Comment

ஆன்லைன் வயது கால்குலேட்டர்


Udanz