இணையதளங்களை வரிசையிடும் அமேசான் நிறுவனத்தின் அலெக்சா தளம் பற்றியும், அலெக்ஸா Widget-ஐ நம் ப்ளாக்கில் இணைப்பது பற்றியும் ஏற்கனவே பார்த்தோம். அந்த Widget-ஐ வைக்காமலும் நம் தளத்தை அலெக்சாவில் இணைக்கலாம். அது பற்றி பார்ப்போம்.
1. முதலில் Alexa.com தளத்திற்கு சென்று உங்கள் கணக்கு மூலம் உள்நுழையுங்கள். அல்லது புதிதாக கணக்கு ஒன்றை உருவாக்குங்கள்.
2. பிறகு http://www.alexa.com/siteowners/claim என்ற முகவரிக்கு செல்லுங்கள்.
3. அங்கு உங்கள் ப்ளாக் முகவரியைக் கொடுத்து Claim Your Site என்னும் பட்டனை அழுத்துங்கள்.
4. பிறகு Free என்பதற்கு கீழே Sign Up என்பதை கிளிக் செய்யுங்கள்.
5. பிறகு உங்கள் தளத்திற்கென பிரத்யேகமான ஐடி ஒன்று கொடுக்கப்படும். அதை உங்கள் ப்ளாக்கில் இணைக்க பல வழிகளையும் காட்டும்.
இதில் வலதுபுறம் Meta Code பின்வருவது போல இருக்கும்.
<meta name="alexaVerifyID" content="q8t4DdnkamRaTQRdN42XhFu65o0" />
6. ப்ரவ்சரில் இன்னொரு Tab-ஐ திறந்து Blogger Dashboard => Edit Html பகுதிக்கு செல்லுங்கள்.
7. </head> என்ற நிரலுக்கு முன்னால் உங்கள் Meta Code-ஐ Paste செய்து Save செய்துக் கொள்ளுங்கள்.
8. திரும்பவும் அலெக்ஸா தளத்திற்கு வந்து Meta Code உள்ளதற்கு கீழே உள்ள Verify my ID என்பதை கிளிக் செய்யுங்கள்.
9. "Your site is successfully claimed" என்று சொன்னால் உங்கள் தளம் சேர்க்கப்பட்டுவிட்டது என்று அர்த்தம். பிறகு Continue என்பதை அழுத்துங்கள்.
10. பிறகு உங்கள் ப்ளாக் பற்றிய தகவல்களை கொடுக்கவும். உங்கள் தனிப்பட்ட தகவல்களை கொடுக்க வேண்டாம். பிறகு Save & Continue என்பதை கிளிக் செய்யுங்கள்.
அவ்வளவு தான்! இது போதும். உங்கள் ப்ளாக் அலெக்சாவில் இணைக்கப்பட்டுவிட்டது.
பிறகு Alexa.com தளத்திற்கு சென்று உங்கள் ப்ளாக் முகவரியைக் கொடுத்தால் உங்கள் ப்ளாக்கின் ரேன்க் என்னவென்று காட்டும்.
No comments:
Post a Comment