சிடி டிரைவ் கதவு அடிக்கடி திறக்க மறுக்கிறது. சிடி டிரைவினைத் திறக்கக் கூடிய பட்டனை என்ன அழுத்தினாலும் டிரைவின் கதவு திறக்கவில்லையா? உள்ளே இருக்கும் சிடியை இன்னொரு இடத்திற்குக் கொண்டு செல்ல வேண்டுமே? இப்போது என்ன செய்வது என்று புலம்புகிறீர்களா?
கவலை வேண்டாம். ஒரு ஜெம் கிளிப் அதாங்க பேப்பர் கிளிப் ஒன்றை எடுங்கள். அதன் வளைவுகளை எடுத்து சிறிய கம்பியாக ஆக்குங்கள். இப்போது டிரைவின் கதவில் உள்ள சிறிய துளை ஒன்றை உற்று நோக்குங்கள். நிச்சயமாக பலர் இதனை இதுவரை பார்த்திருக்க மாட்டீர்கள். இப்போது உங்கள் கையில் உள்ள சிறிய ஜெம் கிளிப் கம்பியை நிதானமாக சிறிது சிறிதாக உள்ளே செலுத்துங்கள். கதவு திறக்கும். சிடியை எடுத்துவிட்டு மீண்டும் கதவைச் சாத்துங்கள். நிச்சயமாக அடுத்த முறை கம்ப்யூட்டரை இயக்கும்போது டிரைவ் கதவு சீராக இயங்கும். ஆனால் அடிக்கடி இது போல தகராறு செய்தால் கம்ப்யூட்டர் ஹார்ட்வேர் மெக்கானிக்கிடம் சொல்லி சர்வீஸ் செய்திடச் சொல்லுங்கள்.
No comments:
Post a Comment