Tuesday, 5 March 2013

பிளாக்கில் Back To Top பட்டன் இணைப்பது எப்படி?


நாம் வலைப்பதிவில் ஒரே பக்கத்தில் அதிகமான பதிவுகளை எழுதியிருந்தால் நம் வாசகர்கள் ஒருபக்கத்தை படித்துவிட்டு கிழிருந்து மேலே வருவதற்கு Mouse 'ன் Roller அல்லது browser 'ன் Scroll bar பயன்படுத்தி மேலே செல்வதற்கு தாமதம் ஆகும்.  அதற்காக நாம் நம் வலைப்பதிவில்
Back To Top Button இணைத்தால் ஒரே கிளிக்கில் முதல் பதிவிற்கு வந்துவிடலாம்.  Back To Top பட்டன் இணைப்பதற்கான வழியை கீழே கொடுத்துள்ளேன் உங்கள் வலைப்பதிவில் இணைத்து பயன்பெறுங்கள்.


முதலில் Dashboard ==>  Design ==>  Add a Gadget ==>  HTML/JavaScript சென்று கீழே கொடுத்துள்ள கோடிங்கை காப்பி செய்து பேஸ்ட் செய்துக் கொள்ளுங்கள்.

<a style="display:scroll;position:fixed;bottom:5px;right:5px;" href="#" title="Back to Top"><img src=" YOUR IMAGE URL HERE "/></a>

பிறகு கீழே கொடுத்துள்ள படங்களில் எது உங்கள் வலைதளத்திற்கு பொருத்தமாக இருக்குமோ அந்த படத்தின் மீது Right Click செய்து படத்தின் URL 'ஐ காப்பி செய்து கொள்ளுங்கள்.

காப்பி செய்த URL 'ஐ மேலே உள்ள YOUR IMAGE URL HERE என்ற இடத்தில் சேர்த்து கொள்ளுங்கள்.  பின்னர்  Save பட்டன் அழுத்தி சேமித்து கொள்ளுங்கள்.






 இப்போது உங்கள் வலைப்பதிவை திறந்து பார்த்தால் உங்கள் வலைத்தளத்தில் அழகான Back To Top Button இணைந்திருக்கும்.

நன்றி...

No comments:

Post a Comment

ஆன்லைன் வயது கால்குலேட்டர்


Udanz