நம்முடைய பதிவுகளை அதிகமான வாசகர்களிடம் சென்றடையச் செய்வதற்கு Aggregators எனப்படும் திரட்டிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அவற்றில் முக்கியமான சில திரட்டிகளில் ஒளிந்திருக்கும் ரகசியங்களை மட்டும் நாம் பார்ப்போம். இது புதியவர்களுக்கான பதிவாகும்.
தமிழ்மணம் திரட்டி:
தமிழ்மணத்தில் பதிவுகளை பகிர்ந்தால் அந்த தளத்தில் நடுப்பகுதியில் நம் பதிவுகள் வரும் என்பது அனைவருக்கும் தெரியும்.
கடந்த 24 மணி நேரங்களில் (மற்றும் கடந்த வாரம்) அதிகம் பார்க்கப்பட்ட பத்து+ பதிவுகள் சூடான இடுகை பகுதியிலும்,
சமீபத்தில் ஏழு ஓட்டுக்கள் பெற்ற பத்து+ பதிவுகள் வாசகர் பரிந்துரை பகுதியிலும்,
கடந்த இரண்டு நாட்களில் அதிக ஓட்டுக்கள் பெற்ற ஒரு பதிவு மகுடம் பகுதியிலும்
தெரியும் என்பதையும் அதிகமானோர் அறிந்திருப்பீர்கள்.
இவையல்லாமல் தளத்தின் கீழே ஆறு பிரிவுகளில் தனியே சில பதிவுகள் தெரியும். அந்த ஆறு பிரிவுகள்,
நகைச்சுவை, அரசியல், அனுபவம், புனைவுகள், சினிமா, சமையல்
இந்த ஆறு பிரிவுகளுக்கு ஏற்றார் போல குறிச்சொற்களை (Labels or Tags) சேர்த்தால் நம்முடைய பதிவுகள் அங்கும் தோன்றும். இதனை ஒரு சிலரே (சில சமயம் பதிவிற்கு தொடர்பில்லை என்றாலும்) பயன்படுத்துகின்றனர்.
படத்தை கிளிக் செய்து பார்க்கவும் |
உதாரணத்திற்கு, மேலுள்ள படத்தில் நான் எழுதிய சோதனை பதிவு
ஐந்து பிரிவுகளிலும் தெரிவதைப் பாருங்கள். அதற்கு காரணம் அந்த பதிவில்
ஐந்து பிரிவுகளுக்கு ஏற்றார் போல நான் குறிச்சொற்கள் கொடுத்தது தான்.
இது மட்டுமின்றி தளத்தின் மேலே இந்த ஆறு பிரிவுகளுடன் சேர்த்து மேலும் சில பிரிவுகள் இருக்கிறது. அவைகள்,
ஈழம், சினிமா, இசை, நகைச்சுவை, அரசியல், அனுபவம், புனைவுகள், சமையல், நிகழ்வுகள், பொருளாதாரம், தொழில்நுட்பம்
அதை கிளிக் செய்தால் அந்த பிரிவுகள் தொடர்பான பதிவுகளை மட்டும் காட்டும்.
படத்தை கிளிக் செய்து பார்க்கவும் |
மேலுள்ள படத்தில், நான் எழுதிய சோதனை பதிவு "இசை" என்னும் குறிச்சொல் உள்ளதால் "இசை" பிரிவில் தெரிகிறது.
எந்தெந்த குறிச்சொற்களை சேர்த்தால் எந்தெந்த பிரிவுகளில் வரும் என்பதை கீழே கொடுத்துள்ளேன்.
இசை - இசை
நகைச்சுவை - நகைச்சுவை, மொக்கை, நையாண்டி
அரசியல் - அரசியல், சமூகம்
அனுபவம் - அனுபவம், நிகழ்வுகள்
புனைவுகள் - சிறுகதை, கவிதை, இலக்கியம்
சமையல் - சமையல், சமையல் குறிப்பு
நிகழ்வுகள் - செய்திகள்,
பொருளாதாரம் - வணிகம், பொருளாதாரம்
தொழில்நுட்பம் - தொழில்நுட்பம், இணையம்
இதில் ஒரே பிரிவில் உள்ள இரண்டு குறிச்சொற்களை பயன்படுத்தினால் இரண்டு முறை உங்கள் பதிவுகள் தெரியும்.
மேலே சொன்னவைகளில் "இரண்டி பிரிவுகளை விட்டுவிட்டீர்களே?" என்று கேட்கிறீர்களா? நீங்கக் கேட்கவில்லை என்றாலும் சொல்கிறேன்.
சினிமா, ஈழம் - இந்த இரண்டும் தனி பிரிவுகள் ஆகும்.
சினிமா
"சினிமா, திரை விமர்சனம்" ஆகிய குறிச்சொற்கள் மற்றும் நடிகர்களின்
பெயர்கள் தலைப்பில் உள்ள பதிவுகள் அனைத்தும் தமிழ்மணம் முகப்பு பக்கத்தில்
தெரியாது. அவைகள் தமிழ்மணத்தின் இன்னொரு தளமான திரைமணம் தளத்திற்கு சென்றுவிடும்.
ஈழம்
"ஈழம், இலங்கை, பிரபாகரன், தமிழீழம்" போன்ற குறிச்சொற்கள் (தலைப்பிலும் என்று நினைக்கிறேன்) இருந்தால் அந்த பதிவுகளும் முகப்பு பக்கத்தில் தெரியாது. தமிழ்மணம் ஈழம் தளத்திற்கு சென்றுவிடும்.
#மேலே குறிப்பிட்டுள்ள குறிச்சொற்களைத் தவிர வேறு சொற்களும் பிரிவுகளுடன் தொடர்புடையதாக இருக்கலாம். இவைகள் நான் கவனித்தவை மட்டுமே!
மேலும் சில ரகசியங்களை இறைவன் நாடினால் அடுத்த பகுதியில் பார்ப்போம்.
No comments:
Post a Comment