Saturday 16 November 2013

பசும்பொன் தேவர் ஜாதி தலைவரா? அவர் ஜாதியை வெறுத்த தலைவர் சொல்கிறார் தோழர் தா.பாண்டியன்.

பசும்பொன் தேவர் ஜாதி தலைவரா? அவர் ஜாதியை வெறுத்த தலைவர் சொல்கிறார் தோழர் தா.பாண்டியன்.


பசும்பொன் தேவர் உசிலம்பட்டி அருகில் நண்பர் ஒருவர் இல்லத்திற்கு விருந்துக்கு சென்றிருந்தார். அவ்வீட்டிலிருந்த நல்ல தண்ணீர்க் கிணற்றில் குடிநீர் எடுக்கப் பெண்கள் வந்து போய்க்கொண்டிருந்தார்கள்.


ஆனால் சில பெண்கள் மட்டும் வெளியே தள்ளி நின்று கொண்டிருந்தார்கள் நண்பரின் பையன் நீர் இறைத்து அவர்களுக்கு ஊற்றிக்கொண்டிருந்தான் .

பசும்பொன் தேவர் விவரம் கேட்டார். "அவர்கள் தாழ்த்தப்பட்ட பெண்கள் அவர்கள் கிணற்றில் நீர் எடுத்தால் அது தீட்டாகிவிடும். வேறு யாரும் பிறகு தண்ணீர் இறைக்க மாட்டார்கள். எனவேதான் இந்த ஏற்பாடு!" என்று பதில் சொன்னார் நண்பர்.

தேவர் முகம் சிவந்துவிட்டது. "நான் போகிறேன். எனக்கு விருந்தும் வேண்டாம். தாழ்த்தப்பட்டவர்கள் என்ற பிரிவினை உள்ள இந்த வீட்டில் கை நனைக்க என் மனம் இடம் தரவில்லை," என்று கோப்ப்பட்டார் அவர்.

நண்பர் பதறிப்போனார். "ஐயா மன்னித்துவிடுங்கள் இனி இந்த தவறு நடக்காது என்று கூறினார். அன்று முதல் தாழத்தப்பட்ட பெண்களும் அக்கிணற்றில் மற்றவர்கள் போல் சமதையாக நீர் சேந்தத் துவங்கினர்.

இதில் தேவரின் நண்பராக வருபவர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியனின் தந்தை. நீர் இறைத்தது அவரது பையன் தா.பாண்டியன்.

இதை தா.பாண்டியன் ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார்.

நன்றி தோழர் தா. பாண்டியன் அவர்களுக்கு .

No comments:

Post a Comment

ஆன்லைன் வயது கால்குலேட்டர்


Udanz