Thursday 9 May 2013

கோடையில் பற்களுக்கு வரும் பிரச்னைகள்

கோடையில் பற்களுக்கு என்னென்ன பிரச்னைகள் வரும்? அவற்றை பாதுகாப்பது எப்படி?
கோடையில் உடலை பாதுகாப்பது போல, பற்களையும் பாதுகாக்க வேண்டும். கோடையில் சூட்டை தணிக்க, பழச்சாறுகள், குளிர்பானங்கள் அருந்துகின்றனர். ஆனால் எலுமிச்சை, அன்னாசி மற்றும் ஆரஞ்சு போன்ற பழச்சாறுகள், குளிர்பானங்கள் அருந்தும்போது,
உடனடியாக தண்ணீர் குடிக்க வேண்டும். ஏனெனில் இவை பற்களின் எனாமலை அரிக்கும் தன்மை உள்ளவை. ஏனெனில் தண்ணீர் குடிப்பதால், இவை பற்களின் மேல் அதிக நேரம் தங்காது.
பலருக்கு கோடையில் வரும் மற்றொரு பிரச்னை வாய் உலர்தல் மற்றும் வாய் எரிச்சல் ஒரு நாளுக்கு 3 லிட்டருக்கு மேல் தண்ணீர் குடிக்க வேண்டும். இல்லையெனில் வாய் உலர்ந்து போய், நாக்கு ஒட்டிக் கொள்வது போல இருக்கும். உதடுகள் உலர்ந்து போய், வெள்ளையாக தெரியும். இந்நிலை அடிக்கடி இருந்தால், பற்களில் சொத்தை வருவதற்கு வாய்ப்பு அதிகமாகிவிடும். ஏனெனில் வாயில் ஈரப்பதம் இல்லாமல் இருந்தால், நாம் உண்ணும் உணவு பற்களில் ஒட்டிக் கொண்டு அவையே கிருமிகள் தங்கும் இடமாகி சொத்தை உண்டாக்கும். எனவே அதிகம் தண்ணீர் குடிக்க வேண்டும். கோடை
விடுமுறையில் குழந்தைகள் வீட்டில் இருப்பர். விடுமுறை நேரத்தில் அதிக சாக்லேட்டுகள், இனிப்பு பண்டங்களை சாப்பிடுவர். இதை சாப்பிட்ட பின், சரியாக சுத்தம் செய்ய பழக்கப்படுத்த வேண்டும். பல் தேய்க்கும் முறையை சரியாக சொல்லிக் கொடுத்து நாள் ஒன்றுக்கு 2 முறை பல் தேய்க்க வேண்டும்.
- டாக்டர் ஜெ.கண்ணபெருமான்

No comments:

Post a Comment

ஆன்லைன் வயது கால்குலேட்டர்


Udanz