Sunday 21 April 2013

உங்கள் Mobile-ல் தமிழ்தளங்களின் எழுத்துரு பிரச்சினை தீர..

 வணக்கம் நண்பர்களே. தமிழ்தளங்களின் எழுத்துரு பிரச்னைகள் மொபைல்களில் தீர்க்க இப்பதிவு உங்களுக்கு நிச்சயம் உதவும் என நினைக்கிறேன்.

தமிழ்த்தளங்களை மொபைலில் காணும்போது தளத்தில் உள்ள எழுத்துகள் பரவலாக சிதறியதுபோல் இருக்கும். அல்லது சிறிய கட்டம் கட்டமாகத் தோன்றும். படிப்பதற்கு இயலாத வண்ணம் இருக்கும்.


எனவே தமிழ்த்தளங்களை மொபைல் மூலம் பார்வையிடுவது சிரமமானதாக இருந்து வந்தது.


இதைப்பற்றி நண்பர் ஒருவர் கேட்ட கேள்வியும், அதற்கான பதிலும்.

கேள்வி: மொபைல் மூலம் எளிதாக தமிழ் தளங்களைப் பார்வையிடுவது எப்படி?
பதில்: முதலில் உங்கள் மொபைலில் இந்த இணைப்பின் வழியாகச் சென்று தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்..

அல்லது இந்த படத்தைச் சுட்டுவதன் மூலம் Opera Mini Browser தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.


  • Opera Mini Browser நிறுவித் திறந்துகொள்ளுங்கள். (Installation)
  • ஓபரா மினி பிரௌசர் திறந்துகொண்டதும், அதிலுள்ள அட்ரஸ் பாரில் opera:config என டைப் OK அழுத்தவும்.
  • பிறகு தோன்றும் விண்டோவில் Use bitmap fonts for complex scripts menu என்பதில் Yes என்பதை டிக் செய்து ok கொடுத்து சேமித்துக்கொள்ளுங்கள்.
  • இனி நீங்கள் உங்கள் ஓபரா மினி உலாவியை மறுதொடக்கம் செய்யுங்கள். (உலாவியை மூடிவிட்டு, மீண்டும் ஒரு முறை திறக்கவும்)

இனி நீங்கள் காணப்போகும் தமிழ்த்தளங்களின் யூ.ஆர்.எல் அட்ரஸ் பாரில் கொடுத்து ok கொடுத்துப் பாருங்கள்.

உங்கள் கையடக்க மொபைலில் தமிழ்த்தளங்கள் தமிழைப் போன்றே  அழகாக காட்சியளிக்கும்.

பின் குறிப்பு: 
  • இம்மொன்பொருளானது (Opera mini browser) மொபைல்களுக்கென்றே பிரத்யேகமாக தாயாரிக்கப்பட்ட வலை உலவி ஆகும். 
  • இவ்வலையுலவி அனைத்து Mobile phone மற்றும் Tablet Pc க்களில் இயங்கும் வகையில் அமைக்கப்பட்டிருப்பது இதன் சிறப்பம்சம்.

No comments:

Post a Comment

ஆன்லைன் வயது கால்குலேட்டர்


Udanz