போட்டோஷாப் கற்றுக்கொள்ள அனைவரும் விரும்புவர். அதற்காக இணையத்தில் பல Photoshop Tutorial -களை நாடுவதுண்டு. பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே இத்தளங்கள் இருப்பதால் இவற்றைப் புரிந்துகொண்டு, அதைப்போன்றே செய்வது என்பது சற்று சிரமமானதாகவே இருக்கும்..
இந்த மாதிரியான சூழ்நிலைகளில் அரைகுறையாகப் புரிந்துகொண்டு அதைச் செய்யும்போது நாம் எதிர்பார்த்த Effect கிடைக்காது.
மாதிரிக் கோப்புகளை(Model Photoshop files) காணும்போது அதில் என்னனென்ன Action இருக்கிறது என்பதைத் தெரிந்துகொண்டு, எவ்வாறு செய்திருக்கிறார்கள் என்பதைக்கூட எளிதாகப் புரிந்துகொள்ள முடியும். (இது போட்டோஷாப் கற்றவர்களுக்கு எளிதாக விளங்கும்)
அதுபோலவே நாம் தரவிறக்கிய PSD கோப்புகளிலேயே சில மாற்றங்களைச் செய்து நமக்கு ஏற்றவாறு மாற்றி, அதையே நாம் பயன்படுத்திக்கொள்ளலாம்.
உதாரணமாக கோப்புகளில் உள்ள எழுத்துகளை எடுத்துவிட்டு நமக்கு வேண்டியதை அதில் எழுதி கோப்பைச் சேமித்துப் பயன்படுத்தலாம்.
மேலும் போட்டோஷாப்பில் இருக்கிற எத்தனையோ Photoshop Tricks - களையும், Photoshop Effect-களையும் கற்க உதவும்.
இத்தகைய போட்டோஷாப் கோப்புகளை தரவிறக்குவதற்காகவே இத்தளம் அமைந்துள்ளது.
இதிலிருக்கும் 4500 க்கும் மேற்பட்ட PSD கோப்புகளை இலவசமாக தரவிறக்கிப் பயன்படுத்த முடியும்.
மேலும் வேண்டிய கோப்புகளை Search செய்தும் தேடிப் பெறலாம்.
தளத்திற்கான சுட்டி..http://searchpsd.com
தளத்தில் நுழைந்து all Category என்பதில் கிளிக் செய்து அகர வரிசையில் அடுக்கப்பட்ட கோப்புகளில் உங்களுக்குத் தேவையான தலைப்புகளில் உள்ள கோப்புகளைக் கிளிக் செய்து , அதற்கு கீழே DOWNLOAD PSD FILE என்பதை கிளிக் செய்வதன் மூலம் எளிதாக கோப்புகளை டவுன்லோட் செய்துகொள்ளலாம்.
கோப்புகளை தரவிறக்க கீழ்நோக்கிய அம்புக்குறியைச் சொடுக்கவும். |
zip file -ஆக இருக்கும் கோப்புகளை விரித்துப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
No comments:
Post a Comment