Monday 11 March 2013

பதிவர்கள் செய்யும் அடிப்படையான 5 தவறுகள்

http://usilampatti-chellappa.blogspot.com/2011/06/5.html



தெரியாதவர்களுக்காக மட்டும் இதை எழுதுகிறேன்.
பதிவர்கள் செய்யும் அடிப்படையான 5 தவறுகள் என்ன என்று அறிய ஆவலாக உள்ளீர்கள் என்று தெரிகிறது.   அதற்க்கான விடையை கீழே கொடுத்துள்ளேன் நீங்களும் கீழ்காணும் தவறுகளை செய்திருந்தால் உடனே
 திருத்திக் கொள்ளுங்கள்.

பிறகு உங்கள் வலைபதிவு பிரபலமாவதை யாராலும் தடுக்க முடியாது.


     1.  முதல் தவறாக நான் குறிப்பிடுவது.  வலைபதிவு அழகாக காட்சியளிக்க வேண்டும் என்பதற்க்காக, அட்டைபலகை அதாவது ( Template ) பின்னணி நிறத்தை கருப்பு கலரில் அல்லது பளிச்சிடும் கலரில் கொடுத்திருப்பார்கள்.  இதனால் பதிவை படிக்க வருபவர்களுக்கு நாம் எழுதி இருக்கும் எழுத்துக்கள் மற்றும் Template பின்னணியாலும் பதிவை படிப்பதற்கு சிரமமாக இருக்கும்.   இதனால் உங்கள் Template ஐ தேர்வுசெய்யும் போது கவனமாக தேர்ந்தெடுங்கள்.

     2.  இரண்டாவது தவறு பெரும்பாலும் புதிய பதிவர்கள் கம்ப்யூட்டர் முன் அமர்ந்து பிளாக்கர் பேஜில் லாகின் செய்தவுடன் Status பட்டனை அழுத்துவது.  Status பார்ப்பதில் தான் புதிய பதிவர்கள் அதிகம் செலவிடுகின்றார்கள்.  இதனால் தான் அவர்களால் அதிகமாக பதிவு எழுத முடிவதில்லை.

     3.  மூன்றாவது தவறு நமக்கு அதிக பின்னூட்டங்கள் வருகிறதா,  நமக்கு திரட்டிகளில் அதிக ஒட்டு விழுகிறதா என்றுதான் பார்க்கிறோம் ஆனால் திரட்டியில் நாம் மற்றவர்களுக்கு ஒட்டு போட்டால் தான் நமக்கு அவர்கள் ஒட்டு போட முன் வருவார்கள்.  அதே போல் பத்து பதிவிர்க்காவது சென்று பின்னூட்டமிட்டால் தான் உங்கள் பதிவிற்கு ஒரு  பின்னூட்டமாவது  கிடைக்கும்.

     4.  நான்காவது தவறு பின்னூட்டங்கள் தான் அதிகமாக வருகிறதே என்று விட்டுவிடக்கூடாது.  வரும் பின்னூட்டங்களுக்கு பதில் அளிக்க வேண்டும்.  அதுதான் உங்கள் வலைதளத்திற்கு வாசகர்களை மீண்டும் மீண்டும் வரத்தூண்டும்.  பதில் அளிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை நன்றியாவது தெரிவியுங்கள்.

     5.  ஐந்தாவது தவறு பின்னூட்டங்களை தானாக வெளியாக விடுவது.  இது தான் பதிவர்கள் செய்யும் மிகப்பெரிய தவறு.  வரும் பின்னூட்டங்களை வலைதள உரிமையாளர் அதாவது நீங்கள் அனுமதித்த பிறகு வெளியாகின்றார்ப் போல் அமைத்துக் கொள்ளுங்கள்.  நன்றி...

No comments:

Post a Comment

ஆன்லைன் வயது கால்குலேட்டர்


Udanz