Tuesday 9 April 2013

FaceBookல் உங்கள் நண்பர்களை மற்றவர்களிடம் இருந்து மறைக்க வேண்டுமா?

நம்முடைய நண்பர்களின் லிஸ்ட் நம் பேஸ்புக் கணக்கிற்கு வரும் மற்றவர்களுக்கும் தெரியும். இதனை எவ்வாறு மாற்றி நம்முடைய நண்பர்கள் பகுதியை மற்றவர்களிடம் இருந்து மறைப்பது என்று பார்க்கலாம்.

உங்கள் FaceBook Accountல் நுழைந்து Privacy Setting ஐ கிளிக் செய்யவும்.






ஓபன் ஆகும் விண்டோவில் Connecting On Facebook  உள்ள View Setting என்பதை க்ளிக் செய்யவும்.




See your friend list என்ற பகுதியில் உள்ள டேபை க்ளிக் செய்து அதில் உள்ள Customize என்பதை க்ளிக் செய்யவும்.  





ஓபன் ஆகும் விண்டோவில் Make this Visible to (படம் No-1) பகுதியில் Friends, Friends of Friends, Specific People, Only Me என்ற நான்கு வசதிகள் உள்ளது. 




Friends - இந்த வசதியை தேர்வு செய்தால் உங்கள் கணக்கில் உங்களோடு நண்பர்களாகி உள்ளவர்களுக்கு மட்டும் தெரியும். 


Friends of Friends - இதனை தேர்வு செய்தால் உங்கள் நண்பர்கள் லிஸ்ட் உங்கள் நண்பர்கள் மட்டுமல்லாது அவரின் நண்பர்களுக்கும் தெரியும்.


Specific People - இந்த வசதியானது நாம் விரும்பும் நபர்களுக்கு மட்டும் இந்த நண்பர்கள் லிஸ்ட்டை காண்பிக்கலாம்.இதை தேர்வு செய்து வரும் கட்டத்தில் அவர்களின் பேரை குறிப்பிட்டால் அவர்களுக்கு மட்டும் நாம் காண்பிக்கலாம். 


Only Me - இந்த வசதியை தேர்வு செய்தால் உங்களை தவிர வேறு எவரும் உங்கள் நண்பர்கள் பகுதியை காண இயலாது.


மேலும் கிழே  (படம் No-2) உள்ள Hide this From என்ற பகுதியில் நீங்கள் இந்த நண்பர்கள் லிஸ்ட்டை மறைக்க விரும்பும் நபர்களை தனித்தனியே தேர்வு செய்து கொள்ளலாம்.


உங்களுக்கு தேவையான மாதிரி அதில் உள்ள வசதியை தேர்வு செய்து கொள்ளவும்.


மறக்காமல் உங்கள் கருத்துகளைவும், ஒட்டையும் பதிவு செய்யவும்.

No comments:

Post a Comment

ஆன்லைன் வயது கால்குலேட்டர்


Udanz