Saturday 13 April 2013

வலைப்பூ வைத்திருக்கும் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டியது பகுதி

வலைப்பூ வைத்திருக்கும் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டியது பகுதி 01 இல் நாம் ஒரு பைலை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் போது, நாம் செல்லும் தளம் எப்படி இருக்க வேண்டும் என்று பார்த்தோம்.இன்று Comment box சம்பந்தமாக பார்ப்போம்.

word verification ஐ நிறுத்தி விடுங்கள்.

நம்முடைய வலைப்பூவிற்கு மற்றவர்கள் வந்து கருத்து சொல்வது எவ்வளவு பெரிய விடயம்..அப்படி அவர்கள் கருத்துக்களை நம்முடைய வலைப்பூவில் பகிரும் போது word verification ஐ நீங்கள் கொடுத்து இருந்தால்....



குழம்பி கிடக்கும் எழுத்தை சரியாக டைப் செய்யுமாறு ஒரு பெட்டி வந்து இருக்கும்..அவர் அந்த எழுத்துக்களை பிழையாக டைப் செய்தால் அந்த கருத்து நம்முடைய வலைப்பூவில் வெளியிடப்படாது....

மறுபடியும் குழம்பி கிடக்கும் வேறு ஒரு எழுத்தை காட்டி அதை டைப் செய்யுமாறு கேட்கும்...இதனால் வருபவர் பொறுமையை ஒரு சில நேரங்களில் இழக்க நேரிட்டு அந்த கருத்தை அவர் சொல்லாமலேயே போய் விடும் ஒரு அபாயம் உள்ளது...ஆகவே word verification நிறுத்தி விடுங்கள் இதற்கு

Dashboard >> Settings >> Comments >> இற்கு சென்று ,

Show word verification for comments? என்பதற்கு NO என்பதை கொடுங்கள்.




Comment moderation கொடுத்து வையுங்கள்

ஒரு சில நமக்கு வேண்டாதா விசமிகள் Comment box இல் எப்படி வேண்டும் ஆனாலும் கருத்துக்களை நம்முடைய வலைப்பூவில் கூறலாம்..நீங்கள் Comment moderation கொடுக்காமல் இருந்தால் அந்த கருத்து நேரடியாக நம்முடைய வலைப்பூவில் வெளியாகி விடும்.ஆனால் Comment moderation கொடுத்து இருந்தால், அந்த கருத்து முதலில் உங்களிடம் வரும்...அந்த கருத்தை வெளியிட வேண்டுமா? இல்லையா? என்று நீங்களே முடிவு செய்து கொள்ள கூடியதாக இருக்கும்.இதற்கு

Dashboard >> Settings >> Comments >> இற்கு சென்று ,


Comment moderation என்பதற்கு Always என்பதை கொடுங்கள்.



Pop-up window இல் கருத்துக்களை கூற வையுங்கள் இதனால் கருத்துக்களை கூற வருபவர்களுக்கு இலகுவாக (லோடாகமல்) இருக்கும் இதற்கு


Dashboard >> Settings >> Comments >> இற்கு சென்று ,

Comment Form Placement என்பதற்கு Pop-up window என்பதை கொடுங்கள்.

No comments:

Post a Comment

ஆன்லைன் வயது கால்குலேட்டர்


Udanz