Wednesday 24 April 2013

இந்திய ரயில்களை நேரடியாக பின்தொடர

இந்திய ரயில்வே சமீபத்தில் ரயில் ராடார் என்ற புது இணையதளத்தை துவங்கியுள்ளது. இந்த தளத்தின் மூலம் இந்தியா முழுவதும் எந்தெந்த ரயில் எங்கெங்கு சென்று கொண்டிருக்கிறது என்பதை கூகுள் வரைபடத்தின் மூலம் எளிமையாக அறிய இயலும்.

இணையத்தை திறந்த உடனே கூகுள் வரைபடம் தோன்றும் அவற்றில் நீலம் மற்றும் பழுப்பு நிற அம்புக் குறிகள் தோன்றும் அவைகள் ரயில்கள் சென்று கொண்டிருக்கும் இடத்தை குறிக்கிறது. அம்புக் குறிகள் மீது அழுத்தி ரயிலின் விவரத்தை முழுவதுமாக அறியலாம். தேவையான தகவல்களை ஜூம் செய்து கூகுள் வரை படத்தில் எளிமையாக தெரிந்துக் கொள்ளலாம். இந்த தளம் ஒவ்வொரு ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறையும் பதிவேற்றப்படுவதாக கூறப்படுகிறது.
இந்த பயனுள்ள தளத்தின் வசதியை அலைபேசிகளின் மூலமும் பெற இயலும் என்பதே கூடுதல் சிறப்பு செய்தி.

தொடர்ந்து பயனுள்ள தகவல்களை பெற சிந்திக்கலாம் தளத்தில் Follower ஆக இணைந்து கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment

ஆன்லைன் வயது கால்குலேட்டர்


Udanz