Saturday 13 April 2013

அரசு கேபிள் கட்டணம் இனி ஆன்லைனிலும்

இன்றளவும் அறிவியல் வளர்ச்சியில் ஒரு மிகப்பெரிய  கண்டுபிடிப்பு தொலைகாட்சி மட்டுமே. காதுக்கு இனிமை ஊட்டிய ரேடியோக்களுக்கும் தெரிந்திருக்காது இவ்வளவு சீக்கிரம் நமக்கு எதிரி உருவாகிவிடுவான் என.

விவத் பாரதியில் உங்கள் விருப்பமும், ஆகாசவானியில் செய்திகளை  கேடுக்கொண்டிருந்த காதுகளை எல்லாம் பொதிகை கவர்ந்திழுத்தது தற்போது மக்களை தனியார் அலைவரிசைகள் உலகத் தொலைக்கட்சிகளில் முதன் முறையாக என போட்டி போட்டுக்கொண்டு ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது வேலை கூட செய்யவிடாமல்....,


தமிழக அரசு நிர்ணயித்து உள்ள கேபிள் கட்டணம் வெறும் ருபாய் 7௦ ஆனால்  கேபிள் கட்டணமாக ஆப்ரேட்டர்கள் ருபாய் 1௦௦ முதல் 15௦ வரை அங்காங்கே அவரவர்களின் வாய்திறமைக் கேற்ப வசூலித்து வருகிறார்கள். இது போன்ற ஏற்றத் தாழ்வுகளை களைய தமிழக அரசு புது முயற்சியாய் இணையத்தில் கேபிள் கட்டணம் செலுத்தும் வசதியை ஏற்படுத்தியிருக்கிறது.

தமிழக அரசின் கேபிள் டிவிக்கென ஏற்படுத்தப்பட்ட பிரத்தியேக அரசு  இணையதளமான www.arasucable.com என்ற தளத்தின் மூலம் அரசு நிர்ணயிக்கும் நியாயமான மாத சந்தாவை இல்லத்தில் இருந்தே ஆன்லைன் மூலமாக செலுத்த இயலும்.

சிந்திக்கலாம் தளத்தின் முகப்பு வலது புறத்தில் தமிழகத்தை சார்ந்த தளங்களின் பட்டியலில் இனி நிரந்தரமாக இந்த வலைதள முகவரி இணைப்பு இடம் பெற்றிருக்கும் எப்பொழுது வேண்டுமானலும் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment

ஆன்லைன் வயது கால்குலேட்டர்


Udanz