http://anbhudanchellam.blogspot.in/2011/11/windows-cddvd-burn-0-commentsravir19_11.html
Windows
கணனிகள் builtin CD-copy வசதியை கொண்டதாகவே அமைக்கப்பட்டுள்ளன.
பெரும்பாலானோர் CD அல்லது DVD களை Burn செய்வதற்கான மென்பொருட்களை
பயன்படுத்தியே CD/DVD களை Burn செய்வது வழக்கம். இருப்பினும் Windows
வழங்கும் இவ் வசதியை அறிந்திருப்பது நல்லதே , ஏனெனில் சில சந்தர்ப்பங்களில்
இம் முறையின் தேவை ஏற்படலாம். இந்த வசிதியை பயன்படுத்தி சில data மற்றும்
MP3 கோப்புகளை பதிந்துக்கொள்ள முடியும்.
- முதலில் உங்கள் வெற்று (Empty Or writable ) CD/ DVD ஐ கணனிக்குள் உட்செலுத்துங்கள்.
- பின்னர் My Computer சென்று CD/ DVD drive வை திறந்து கொள்ளுங்கள்.
- நீங்கள் CD/ DVD யில் பதியவிருக்கும் கோப்புகளை "Ctrl-c" அழுத்தி copy செய்யுங்கள். அவற்றை திறந்து வைத்துள்ள CD-ROM "Ctrl-V" அழுத்தி paste செய்து கொள்ளுங்கள். அல்லது தேவையான கோப்புகளை CD-ROM ற்குள் நகர்த்தியும் (Drag and Drop) இதனை செயற்படுத்தலாம்.
- பின் அவை படத்தில் காட்டப்பட்டுள்ளவாறு தற்காளிக (temporary) files/folders களாகவே காட்டும்.
- பின்னர் left panel இல் உள்ள "Write these files to CD" என்பதை தெரிவு செய்யுங்கள்.
- அப்போது "CD Writing Wizard" தோன்றும் அதில் CD யில் பெயரை நீர் விரும்பியவாறு மாற்றி "Next" பொத்தானை click செய்யுங்கள்.
- "CD Writing Wizard" கோப்புகளை CD க்கு பதிய தொடங்கும்.
பதிவுசெய்யப்பட்டு முடிந்தவுடன் CD-Rom மிலிருந்து CD/ DVD வெளியில் வரும்.
அவ்வளவே தான் இலகுவான முறையில் CD/ DVD களை Burn செய்வதுகொள்ளலாம்.
நீங்களும் முயற்சித்து பாருங்கள்...
No comments:
Post a Comment