Tuesday 19 March 2013

Sub-Domain அமைப்பது எப்படி? - 4



இந்த பதிவு இந்த தொடரின் முக்கியமான ஒன்று. நாம் ஒன்றுக்கும் மேற்பட்ட வலைப்பூக்கள் வைத்து இருக்கும் போது அவை எல்லாவற்றையும் ஒரே தளத்தின் கீழ் கொண்டு வருவது தான் இதன் செயல். இதன் மூலம் நிறைய பலன்கள் உள்ளது. அத்தனையும் இந்தப் பதிவில் காண்போம்.

http://1.bp.blogspot.com/-isfMMH18iX8/TmB1034W7GI/AAAAAAAABNM/ukyEj3s_4Zg/s200/sell-domain-name-fast-800X800.jpg
Sub-Domain என்றால் குழம்பிவிடாதீர்கள் உதாரணமாக எனது கவிதை வலைப்பூ முகவரி kavithai80.blogspot.com இதனை இப்போது நான் என்னுடைய baleprabu.comக்கு sub-domain ஆக kavithai.baleprabu.com என்று வைத்துள்ளேன். அதாவது blogspot என்பதற்கு பதில் உங்கள் தள Domain பின்னால் சேர்ந்து கொள்ளும். இதனால் உங்கள் blogspot க்கு வருபவர்களும் புதிய முகவரிக்கு Redirect செய்யப்படுவார்கள்

இதன் பலன் என்ன:

முக்கியமான பலன் உங்கள் Domain, Sub-Domain இரண்டுக்கும் சேர்த்தே Alexa rank கணக்கிடும். இதனால் இரண்டிலும் Traffic அதிகம் இருப்பின் Rank நல்ல நிலையில் இருக்கும்.

இந்தத் தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க :


நீங்கள் Google மூலம் Domain வாங்கி இருப்பின் இந்தப் பதிவு உங்களுக்கானது. வேறு தளங்களின் மூலம் வாங்கி இருந்தால் இதே போல நீங்கள் முயற்சி செய்யலாம்.

முதலில் Google Aps தளத்துக்கு சென்று உங்கள் தள முகவரி கொடுத்து, Domain Management என்பதை கொடுத்து உள்ளே நுழையவும்.
http://1.bp.blogspot.com/-5LdUVSwDDDk/Tj7fIT52bRI/AAAAAAAABHs/5sf-6mpyxbc/s400/1.png

இப்போது Domain Settings-->Domain Names--> Advanced DNS Settings--> இறுதியாக
Sign In To DNS Console என்பதை கிளிக் செய்தால் Enom தளத்தின் Domain Management பகுதிக்குள் வருவீர்கள். இங்கு உங்கள் User Name உங்கள் Domain Name (எனக்கு baleprabu.com), Password உங்கள் ஏற்கனவே Advanced DNS Settings பகுதியில் இருக்கும். இதனை Copy, Paste செய்யவும்.

http://2.bp.blogspot.com/-ORUCwAcXBBQ/Tl_kfgGIF4I/AAAAAAAABM8/zu_nrGBXm4U/s400/1.jpg

இப்போது அடுத்த பக்கத்தில் Host Records   என்ற பகுதியில் நீங்கள் உங்கள் Sub-Domain குறித்து பதிய வேண்டும்

http://1.bp.blogspot.com/-CI8qkBPbkLs/Tl_nZvehQ-I/AAAAAAAABNA/CfkEYFKJgWQ/s320/2.jpg

இதில் Host- Records பகுதியில் உள்ள Edit என்பதை கிளிக் செய்யவும். இப்போது Add New என்பதை கிளிக் செய்யவும்

இங்கு 

Host Name: உங்கள் Sub-Domain பெயர் 

Address: ghs.google.com. (இதுவும் ஒரு Blog ஆக இருப்பின்)

Record Type: CNAME (Alias)  என்பதை தெரிவு செய்ய வேண்டும்


                 http://4.bp.blogspot.com/-hCtxpkl_GY8/Tl_vsPiu32I/AAAAAAAABNI/DACtdUZGTMo/s400/4.png


இப்போது Save செய்து விடுங்கள். இதே போல நிறைய தளங்களுக்கும் செய்ய முடியும். இதன் எண்ணிக்கை அனுமார் வால் போல நீண்டுகொண்டே செல்கிறது

இப்போது Sub-Domain ஆக மாற்ற செய்ய விரும்பும் உங்கள் வலைப்பூவுக்கு வந்து Custom  Domain மாறும் இடத்தில் Already Own a Domain என்பதை தெரிவு செய்து உங்கள் Sub-Domain கொடுக்க வேண்டும். அது இவ்வாறு இருத்தல் அவசியம்.  

blog.mydomain.com
(android.karpom.com)


இங்கு www என்பது தேவை இல்லை, அப்படி வேண்டும் என்றால் sub domain-இல் www இருக்க வேண்டும். www.blog.mydomain.com - இதில் www.blog என்பது Sub Domain. பின்னர் பிளாக்கர் செட்டிங்க்ஸ் பக்கத்தில் டொமைன் பெயர் கொடுத்த உடன் "Redirect blog.mydomain.com To www.blog.mydomain.com" என்பதை கிளிக் செய்து விடவும்

வழக்கம் போல உங்கள் வலைப்பூவில் இருந்து நீங்கள் Post செய்யலாம்

ஏதேனும் சந்தேகம் இருப்பின் கேட்கவும்

Google அல்லாமல் வேறு தளத்தின் மூலம் Domain வாங்கியவர்கள் அவர்கள் DNS Settings பகுதியில் இதை போலவே செய்ய வேண்டும். (சில மட்டும் மாறி இருக்கலாம்)


அவ்ளோதான் நண்பர்களே. இது குறித்து கடல் அளவு தகவல்கள் உள்ளபோதும் உங்களுக்கு ஒரு சொம்பு அளவு மட்டுமே அள்ளிக் கொடுத்துள்ளேன். Domain வைத்து இருப்பவர்கள் என்னை இமெயில் மூலம் தொடர்பு கொண்டு மற்ற சந்தேகங்களை கேட்கலாம். (admin@karpom.com). 

No comments:

Post a Comment

ஆன்லைன் வயது கால்குலேட்டர்


Udanz