நம்மிடம் உள்ள பைல்களை அனைத்து கணிபொறிகளிலும் பயன்படுத்த அதனை Pdf (Portable Document Format)பைல்களாக வைத்திருப்போம். மேலும் Font சிக்கல்களுக்கும் அதனை pdf கோப்பாக சேமித்து பயன்படுத்தி வருவோம்.
PDF கோப்புகள் இன்று அதிகமாக பயன்பட்டு வரும் சூல்நிலையில், பிடிஎப் கோப்பில் உள்ள தகவல்களை மாற்றவோ அல்லது அதனை எடிட் செய்வதோ
இன்றைய நிலையில் சிரமான ஒரு செயலாக உள்ளது. அதற்க்கு இரண்டாம் தர மென்பொருளை பதிவிறக்கி அதனை கணிபொறியில் நிறுவி அதன்முலமாக பிடிஎப் பைல்களை எடிட் செய்ய வேண்டும். இரண்டாம் தர மென்பொருளை பதிவிறக்கி அதன் மூலமாக செயல்படுத்துவது பலருக்கு சிரமான காரியமாக இருக்கும் இதனை சரி செய்ய பல இணையதளங்கள் இலவசமாக ஆன்லைனிலேயே பிடிஎப் பைலை எடிட் செய்ய உதவுகிறன.
அவற்றில் சில இணையதளங்கள்:
PDFescape
PDFfiller
Touch PDF
PDFHammer
இந்த இணையதளங்களில் pdf பைலை அப்லோட் செய்து விட்டு பிறகு எடிட்டிங் செய்யலாம். உதரணத்திற்க்கு புதிதாக Text,Image,Drawing இன்னும் பல எடிட்டிங் வேலைகள் எல்லாம் செய்ய முடியும். Ms-Word க்கு இணையான எடிட் வேலைகள் கூட செய்ய முடியும், ஒரளவுக்கு.
தேவையில்லாத பக்கங்களை Delete கூட செய்யலாம், என்ன ஒரு மைனஸ்னா ஒரு குறிப்பிட அளவு பைல்களை மட்டுமே அப்லேட் செய்து பயன்படுத்த முடியும். ஆனா அவசரமான சூல்நிலையில் நல்ல ஒரு உதவியாக இருக்கும்.
No comments:
Post a Comment