Sunday 10 March 2013

Paypal சில பயன்மிக்க தகவல்கள்..!

 
PayPal-பேபால்

பேபால்.. இணையத்தில் நாம் அடிக்கடி பார்க்கும், கேள்விப்படும் வார்த்தை. பேபால் என்றால் என்ன? இது எதற்குப் பயன்படுகிறது? யார் யாரெல்லாம் இதைப் பயன்படுத்த முடியும். இந்நிறுவனம் எங்கிருக்கிறது? இதனுடைய தோற்றம் என்ன? என்பதைப் பற்றி இப்பதிவில் பார்ப்போம். நமது தங்கம்பழனி வலைத்தளத்தில் Paypal Donate button வைத்திருக்கிறேன் பாருங்கள்...! இந்த பேபால் பட்டன் கிளிக் செய்வதன் மூலம் தளத்திற்கு நீங்கள் விரும்பும் தொகையை paypal மூலம் ஊக்கத்தொகையாக (Donation) வழங்க முடியும். (வெளிநாட்டில் வாழும் தமிழ் நண்பர்கள் கவனிக்க) 
paypal usefull tips

பதிவிற்குள் செல்வோம்.

பேபால் என்றால் என்ன?

(What is paypal)
இது ஒரு இணையத்தள வங்கி. இத்தளத்தின் மூலம் பணத்தை எடுக்கலாம். பணத்தை மற்றவர் கணக்குகளில் போடலாம். ஒரு வங்கிக் கணக்கிலிருந்து மற்றொரு வங்கிக் கணக்கிற்கு பணத்தை பரிமாற்றம் செய்யலாம். இணையதளங்களின் மூலம் வாங்கும் பொருட்களுக்குரிய பணத்தை இத்தளத்தின் மூலம் செலுத்தலாம்.

நீங்கள் இணையத்தின் மூலம் ஒரு பொருளை விற்க கூட இந்த கணக்கை நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். முந்தைய கால Checqe, Demand draf, Money order போன்ற முறைகளுக்கு ஒரு மாற்றாக இணையத்தில் அமைந்த ஒரு Digital முறையில் பணப்பட்டுவாடா செய்ய பயன்படும் E-commerce நிறுவனமே paypal.

Paypal நிறுவனத்தின் தொடக்கம்: 
(beginning of Paypal company)
Paypal நிறுவனம் 2000ம் ஆண்டில்தான் நிறுவபட்டது. இந்நிறுவனம் 2002ம் வருடம் E-Bay நிறுவனத்தின் துணை நிறுவனமாக  Subsidiary மாறிற்று.  இணைய தள மோசடிகளை Internet Frauds தடுக்கும் வகையில் 2008ம் ஆண்டு ப்ராடு சயன்சஸ் என்னும் நிறுவனத்தை தன்னுடன் இணைத்துக்கொண்டு பலம்பெற்றது. இன்று வரை பேபால் நிறுவனம் 15 க்கும் மேற்பட்ட நாடுகளுடன் இணைந்து 200 க்கும் மேற்பட்ட சந்தைகளில் இணைந்து தன்னுடைய வர்த்தகத்தை தொடர்ந்து பாதுகாப்பாக செய்து வருகிறது.

200 மில்லியனுக்கும் மேற்பட்ட  வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளது. Paypal பத்தொன்பதுக்கும் மேற்பட்ட currency யில் கணக்கை வைத்துக்கொள்ளும் வசதியை கொண்டிருக்கிறது. (அதாவது இந்தியாவின் rupee, அமெரிக்காவின் dollar போன்று).

ஒரு நாட்டு கரன்சி மதிப்பிலிருந்து மற்றொரு நாட்டிற்கான கரன்சி மதிப்பிற்கு மாற்றி பணத்தை நமது கணக்கில் பணத்தைச் சேர்க்கும் வசதியைப் பெற்றிருப்பதே பேபாலின் முக்கியமான பயனாகும். மிகச் சிறப்பான பாதுகாப்பு வசதியை இது அளிக்கிறது. இந்நிறுவனத்தில் Security key இதற்கு ஒரு சரியான உதாரணம் ஆகும்.

விரைவாக , மிக எளிமையாவும் பணத்தை இணையத்தளம் வழியாக பணம் பரிவர்த்தனை அல்லது பணப் பரிமாற்றம் செய்வதில் இத்தளம் முதலிடம் வகிக்கிறது. தற்போது சில தளங்கள் இணையப் பண பரிவர்த்தனை வசதிகளைக் கொடுத்தாலும், Paypal நிறுவனத்திற்கு ஈடாக எதுவும் இன்னும் வரவில்லை. துல்லியம், பாதுகாப்பு, பயன்பாட்டில் எளிமை ஆகிய விஷயங்களில் Paypal-க்கு Paypal தான். இந்நிறுவனம் தனது சேவைக்காக பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளது. இத்தகைய சிறப்பு வாய்ந்த Paypal நிறுவனம் கலிபோர்னியா மாகாணத்தில் அமைந்துள்ளது.

Paypal மூலம் பணத்தை செலுத்தும் முறை: 

பேபால் மூலம் நீங்கள் பணத்தைச் செலுத்த உங்களிடம் கிரடிட் கார்ட், Internet banking வசதி கொண்ட வங்கிக் கணக்கு, டெபிட் கார்ட்(Debit Card) போன்ற ஏதேனும் ஒன்று இருக்க வேண்டும். இதன் மூலம் நீங்கள் பேபால் கணக்கில் பணத்தைச் செலுத்த முடியும். சில நாடுகளிலிருந்து வங்கி காசோலை மூலம் கூட பேபால் மூலம் பணத்தை செலுத்த முடியும்.

Paypal மூலம் பணத்தை பெறும் முறை: 
(Receive money through Paypal system:)
Paypal மூலம் பணத்தை உங்கள் வங்கிக் கணக்கிற்கு மாற்றவும் முடியும். உங்களுக்கு பேபால் வழியாக உங்கள் வாடிக்கையாளரோ, உறவினரோ, நண்பரோ வெளிநாட்டிலிருந்து பணத்தை பரிமாறிக்கொள்ள முடியும். உங்கள் பேபால் கணக்கில் பணம் சேர்ந்தவுடன் அதை உங்கள் வங்கிக் கணக்கிற்கு மாற்றி நீங்கள் எடுத்துக்கொள்ளலாம்.

இவ்வாறு பண பரிமாற்றம், பண பரிவர்த்தனைகளுக்கு பேபால் நிறுவனம் ஒரு சிறு தொகையை கமிசனாக பெற்றுக்கொள்கிறது.

ஒரு பேபால் கணக்கை துவங்குவது எப்படி? 
(How to start a PayPal account?)
Paypal Account தொடங்குவது மிக எளிதான ஒன்று தான். உங்களிடம் முறையான வங்கிக் கணக்கு ஒன்று இருக்க வேண்டும்.

உங்கள் வங்கிக் கணக்கிற்கான Credit Card, அல்லது Debit Card வைத்திருக்க வேண்டும்.

கூடவே இந்திய அரசு வழங்கும் Pan Card-ம் அவசியமாக வைத்திருக்க வேண்டும்.

பேபால் கணக்குத் துவங்க Paypal.com என்ற முகவரிக்கு செல்லவும். அதில் signup என்பதை கிளிக் செய்யவும். இப்போது தோன்றும் பக்கதில் தேவையான விபரங்களைக் கொடுக்கவும். select your country and region from the list என்பதில் உங்களுடைய நாட்டை தேர்ந்தெடுக்கவும்.

அடுத்து உங்களுக்கு தேவையான கணக்கு முறையைத் தேர்ந்தெடுக்கவும். நீங்கள் இணையத்தில் மூலம் பொருட்களை விற்பவர் எனில் business Account -ஐத் தேர்ந்தெடுக்கவும். சாதாரணமாக பண பரிவர்த்தனை மட்டுமே என்றால் personal என்பதைத் தேர்ந்தெடுக்கலாம்.

இணையதளத்தில் வர்த்தகம் செய்ய விரும்பினால் கட்டாயம் Busines or Permium வகைக் கணக்கை தேர்ந்தெடுக்க வேண்டும்.

பிறகு தேவையான உங்களுடைய தகவல்களை படிவத்தில் நிரப்புங்கள். நீங்கள் நிரப்பும் உங்களுடைய சொந்த தகவல்கள் உண்மையாகவும், வங்கி கணக்கில் உள்ள விபரங்களுடன் ஒத்துப் போகிற மாதிரியும் இருக்க வேண்டும். இது மிக முக்கியமானதொன்று. குறிப்பாக சொல்வதெனில் உங்களுடைய பெயரின் எழுத்துகள்(Name Letters), இனிஷியல் (Initial), தொலைபேசி (cell number, phone number)எண் மற்றும் Email address ஆகியவை மிகச் சரியாக எழுத்துப் பிழை இல்லாம் பார்த்துக்கொள்ள வேண்டும்.

இணையத்தின் மூலம் அதிக பண பரிவர்த்தனை(Money Exchange), பண பரிமாற்றம் (Money transfer) செய்யும் நபர்கள் தங்களுடைய கடன் அட்டை விபரங்களையும் (Credit Card Details)கொடுக்க வேண்டியது கட்டாயம். இத்தளம் மிகச்சிறந்த பாதுகாப்பை அளிப்பதால் நம்பி விபரங்களைக் கொடுக்கலாம்.

அனைத்து விபரங்களையும் கொடுத்த பிறகு உங்களு paypal அக்கவுண்ட்  தொடங்குவது உறுதி செய்வதற்கான மின்னஞ்சல் வந்தடையும். அதில் உள்ள இணைப்பை கிளிக் செய்து உங்கள் கணக்கு விபரங்களை நீங்கள் உறுதிப்படுத்தலாம்.

Paypal மூலம் பணம் எடுப்பது எப்படி? 

Paypal மூலம் பணம் எடுக்க முறையே மூன்று வழிகள் உள்ளன. இது நாட்டிற்கு நாடு மாறுபடும். உங்களுடைய வங்கிக் கணக்கு விபரங்களை கொடுத்து, withdraw option தேர்ந்தெடுத்தால் போதும். உங்கள் வங்கிக் கணக்கிற்கு பேபாலிலிருந்து பணம் பட்டுவாடா செய்யப்பட்டுவிடும்.

ஒரு சில நாடுகளில் cheque, debit card, credit card மூலமாகவும் பணம் எடுப்பதற்கான வசதிகளைக் கொடுத்திருக்கின்றனர்.  அதிக பட்சமாக ஐந்து நாட்களுக்குள் இந்த பணப்பட்டுவாடா முடிந்துவிடும். ஒரு பேபால் கணக்கிலிருந்து மற்றொரு பேபால் கணக்கிற்கும் பணப்பரிவர்த்தனை செய்ய முடியும். personal Paypal Account மூலம் பணபரிமாற்றம் செய்ய குறைந்த அளவே கமிஷனாக கட்டம் பெறப்படுகிறது.

பேபால் கணக்கின் முக்கிய பயன்கள்: 
(The main benefits of the PayPal account:)
பேபால் கணக்கின் மூலம் நீங்கள் இணையத்தின் மூலம் உலகில் எந்த மூலையிலிருந்து, வேண்டியவருக்கு பணத்தை அனுப்ப முடியும். அதோபோல எங்கிருந்தும் பணத்தை நாம் பெற்றுக்கொள்ள முடியும். இணையதளத்தின் மூலம் நீங்கள் பொருட்களை வாங்கும்போது மிகப் பாதுகாப்பாக உங்கள் பணத்தை இந்த தளத்தின் மூலம் செலுத்த முடியும்.
எப்படி எனப் பார்ப்போம்.

நீங்கள் இணையம் மூலம் பொருட்களை வாங்கும்போது விற்பனையாளர்களுக்கு(Dealer) நீங்கள் உங்கள் வங்கிக் கணக்கைப் பற்றி விபரங்களைக் கொடுக்க வேண்டியதில்லை. credit card number, Bank account number, போன்ற அதி முக்கியத் தகவல்களை விற்பனையாளருக்கோ, அத்தளத்திற்கோ கொடுக்க வேண்டிய அவசியமேற்படாது. இதனால் உங்கள் தகவல்கள் பாதுகாக்கப்படுகிறது. உங்களுடைய personal data பாதுகாக்கப்படுகிறது. அதோடு மட்டுமல்லாமல் money transaction மிகப் பாதுகாப்பாக நடைபெறுகிறது. எனவே எதற்கும் நாம் பயபட வேண்டிய அவசியமில்லாமல் போகிறது.

இனி என்ன ? நீங்களும் உங்களுக்கான பேபால் அக்கவுண்ட்டை கிரியேட் செய்துகொள்ள வேண்டியதுதானே?

பேபால் அக்கவுண்ட் கிரியேட்(தொடங்க) செய்ய www.paypal.com செல்லவும்.

நன்றி நண்பர்களே..!

No comments:

Post a Comment

ஆன்லைன் வயது கால்குலேட்டர்


Udanz