Saturday 9 March 2013

ஜிமெயிலை பேக்அப் எடுக்க - IMAPSize

 

ஈமெயில் சேவையில் முதலிடத்தில் இருக்கும் ஜிமெயில் நிறுவனம் சேமிப்பு பெட்டகமாக சுமார் ஏழு ஜிபி வரை (7557 MB) இலவசமாக வழங்குகிறது. ஜிமெயில் பயன்படுத்தாத இண்டர்நெட் பயனாளர்களே இல்லை என்று கூறும் அளவிற்கு ஜிமெயில் நிறுவனத்தின் ஈமெயில் சேவையை தற்போது அனைவரும் பயன்படுத்தி வருகிறனர். நாம் தினமும் பல ஈமெயில்களை அனுப்பவும், ஈமெயில்களை பெறவும் செய்கிறோம். குறிப்பிட்ட காலத்தில் ஜிமெயில் நிறுவனம் வழங்கிய முழு சேமிப்பு இடமும் சேமிக்கப்படும் போது, புதியதாக நினைவகத்தை விலை கொடுத்து கூகுள் நிறுவனத்திடம் இருந்து வாங்க வேண்டும். இல்லையெனில் நம்முடைய ஈமெயில்களை நீக்கம் செய்ய வேண்டும். இதுபோன்ற சூழ்நிலைகள் ஏற்படும் போது ஈமெயிலகளை பேக்அப் செய்து மீண்டும் வேறொரு ஜிமெயிலில் அப்லோட் செய்து கொள்ள முடியும். இதற்கு ஒரு மென்பொருள் உதவி செய்கிறது.

மென்பொருளை தரவிறக்க சுட்டி


இந்த மென்பொருளை இணையத்தின் உதவியுடன் கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் Account > New என்பதை தேர்வு செய்து உங்களுடைய பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லை உள்ளிட்டு பின் Sever என்ற இடத்தில் imap.gmail.com என்பதை உள்ளிட்டு ஒகே செய்யவும்.

இப்போது உங்களுடைய கணக்கானது பரிசோதிக்கப்படும். பின் Account-> Account Backup எனபதை தேர்வு செய்யவும். இப்போது உங்களுடைய ஈமெயில் அக்கவுண்ட் பட்டியலிடப்படும். அதில் உள்ள லேபிள்களை தேர்வு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.



பேக்அப் சேமிக்க வேண்டிய  இடத்தை தேர்வு செய்து கொள்ளவும். பின் Back up பொத்தானை அழுத்தி பேக்அப் செய்து கொள்ளவும். இந்த மென்பொருளின் சிறப்பம்சமே ஒரு ஜிமெயில் அக்கவுண்டில் பேக்அப் செய்து கொண்டு மற்றொரு அக்கவுண்டில் அப்லோட் செய்து கொள்ள முடியும். ஜிமெயில் நிறுவனம் ஆரம்பித்த போது பயனர் கணக்கு தொடங்கிய பலருக்கும் தற்போது முழு சேமிப்பு இடமும் நிறைந்திருக்கும். அவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கூகுள் நிறுவனம் ஜிமெயில் சேவையை தொடங்கிய வருடம் 2004 ஆகும். இண்டர்நெட் இணைப்பு அதிவேகமாக இருந்தால் மட்டுமே இவையணைத்தும் சாத்தியம் ஆகும். இல்லையெனில் வேலை தாமதப்படும். ஒரு முறை முயன்றுதான் பாருங்களே.

No comments:

Post a Comment

ஆன்லைன் வயது கால்குலேட்டர்


Udanz