Tuesday 12 March 2013

இண்டர்நெட்டில் credit card எண் தரலாமா?

http://www.anbhudanchellam.blogspot.in/2012/10/credit-card.html
இப்போது அனைவருக்கும் online shopping தவிர்க்க முடியாத ஒன்றாகி வருகிறது. Online shopping செய்யவில்லை என்றாலும், webhosting, domain name வாங்குவதற்கு போன்ற சில இணைய சேவைகளை பெற credit card அவசியமாக உள்ளது.அதற்காக கிரெடிட் கார்ட் எண் கேட்கும் எல்லா தளங்களிலும் உங்கள் தகவல்களை தந்து விடலாமா?

முதலில், அந்த தளத்தின் நம்பகத் தன்மையை அறிந்து கொள்ளுங்கள். "கிரெடிட் கார்டு நம்பர் கேட்கும் வெப்சைட் எஸ்.எஸ்.எல். எனப்படும் செக்யூர் சாக்கெட்லேயர் (secure socket layer) சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். இந்த சான்றிதழ் இல்லாத வெப்சைட்டில் உள்ள கிரிடிட் கார்டு விவரங்களை அளிதால்,நீங்கள் ஏமாந்துபோகும் வாய்புகள் இருக்கின்றன.
                                             

SSL certificate பெற்றுள்ள வெப்ஸைட்டுகளின் "லாக் இன்" பேஜ் ஓப்பன் செய்யும்போது, பூட்டு போன்ற ஒரு ஐகான் (உலாவியில் கீழே இருக்கும் "status bar"-ல்) வரும். அதை க்ளிக் செய்தால் எஸ்.எஸ்.எல். சான்றிதழ் வாங்கியுள்ளார்களா என்பதை அறிந்து கொள்ளலாம். அந்த சான்றிதழ் யாருக்கு, யாரால் வழங்கப்படுகிறது, காலாவதியாகும் நாள் போன்ற தகவல்கள் அதில் இருக்கும்.

இவை இருந்தால், அந்த தளத்தில் உங்கள் கிரெடிட் கார்டைப் பயன்படுத்துவது பாதுகாப்பானதே. இந்த தளங்களில் உள்ளிடப்படும் தகவல்கள் encrypt செய்யப்பட்டு இணையம் வழியாக அனுப்பப்படும். இதனால் அந்த தகவல்களை இடைமறித்துத் திருட முடியாது. அப்படியே மீறி எதேனும் தவறுகள் நடந்துவிட்டது என்றாலும், சம்மந்தப்பட்ட இணையதளத்தின் மீது உங்களால் வழக்குத் தொடர முடியும். பொதுவாக இணையதளத்தின் முகவரியை மட்டும் டைப் செய்து,என்டர் கொடுத்தால்,http:// என்று முகவரி தொடங்கும். எஸ்.எஸ்.எல். சான்றிதழ் பெற்றுள்ள இணையதளங்களில் http:// உடன்  கூடுதலாக 's'  (https://) இருக்கும். இதுவே பாதுகாப்பான இணையதளங்களைக் கண்டு பிடிக்க எளியவழி. இவை தவிர, மற்றவை ஏமாற்றும் தளங்களாக இருக்கவும் வாய்ப்பு இருக்கிறது.

No comments:

Post a Comment

ஆன்லைன் வயது கால்குலேட்டர்


Udanz